Thursday, May 23, 2019

பாரத் மாதா கி ஜே!

              காலத்தால் அழியாத காவியம் தந்த உலகின் உன்னத தலைவன், இந்தியமக்களின் கலங்கரைவிளக்கம், பாரதத் தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன் ''மோடிஜி'' அவர்களின் அளப்பரிய வெற்றிக்கு இச்சிறிய பதிவை காணிக்கையாக்குகிறோம் .... பாரத் மாதாகி ஜே !!!...

Thursday, May 16, 2019

உணவாகும் விஷம் - அஜினோமோட்டோ [Ajinomoto].

 AJI-NO-MOTO.


பெயர் :- . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு டேஸ்ட் மேக்கர்  உப்பு.

வேதியியல் பெயர் :- மோனோ சோடியம் குளூட்டாமேட். - MONO SODIUM GLUTAMATE. [MSG ].
               அஜினோமோட்டோ என்பது என்னவென்று தெரியுமா?.... இதை தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது ... ஆம் ..  உணவிற்கு அதிக அளவில் சுவையை அளிக்கிறது என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் ஒருவகை வேதியியல் உப்பு.

Saturday, May 11, 2019

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 2.

               உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை காண்போம். 

               இந்த பதிவில்  இந்தோனேசியா, இஸ்ரேல், எத்தியோப்பியா, யெமென், உகாண்டா, எகிப்து, ஐஸ்லாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் நாணய விபரங்களை காண்போம்.....

Thursday, May 09, 2019

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 1.

               உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

               ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

               பகுதி 1 ல்  அமெரிக்கா, அங்கோலா, அர்ஜென்டைனா, அல்ஜீரியா, அல்பேனியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை காண்போம்.....

Sunday, May 05, 2019

வஜ்ராசனம் - vajrasana.

               வஜ்ரம் போல் உடல் உறுதிபெறும் என்பதால் இதற்கு ''வஜ்ராசனம்'' என்று பெயர்.செய்முறை :-  கால்கள் தரையில் உறுத்தாத அளவிற்கு கனமான ஜமுக்காள விரிப்பின் மீது அமர்ந்து இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

Thursday, May 02, 2019

கார சாரமான தகவல்கள். general-knowledge - part1.


      💥 நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்.

      💥 கடல் பஞ்சிலிருந்து பிரிந்தெடுக்கப்படும் வேதிப்பொருள் - அயோடின்.

     💥 சாண எரிவாயுவில் அடங்கியுள்ள வாயுக்கள் - அதிக அளவு மீத்தேன், சிறிதளவு ஈத்தேன்.

     💥 கடல் உப்பின் வேதி பெயர் - சோடியம் க்ளோரைடு (Sodium chloride).


Tuesday, April 30, 2019

கலப்பின உலோகம் - alloy metal.


               கலப்பின உலோகம் - அலாய் (alloy). என்பது  ஒரு தனிப்பட்ட உலோகத்துடன் வேறு சில உலோகங்களோ அல்லது அலோகங்களோ அதனுடன் சேர்க்கப்பட்டு ஒன்றாக உருக்கி வார்க்கப்படும் உலோக கலவையாகும்.

               இவ்வாறு சில உலோகங்களை ஒன்றிணைப்பதின் மூலம் கிடைக்கும் புதிய உலோகமானது பல சிறப்பான தன்மையை பெறுகின்றன.

               உதாரணமாக இரும்பு துருபிடிக்கும் தன்மையுடையது. இரும்புடன் குரோமியம் சேர்த்து வார்க்கும்போது கிடைக்கும் எகு (Steel) என்னும் கலப்பின உலோகமானது துருப்பிடிக்காத தன்மையை பெறுகின்றன.

Sunday, April 28, 2019

தகவல் பெட்டகம் - மனித உடலியல் - general-knowledge.

     💧 விட்டமின் C என்பது ''அஸ்கார்பிக்'' அமிலம் ஆகும். உடலில் இதன் அளவு குறைந்தால் பல் ஈறில் இரத்தக்கசிவு ஏற்படும்.

     💧 பற்களிலும், எலும்புகளிலும் உள்ள வேதிப்பொருள் - ''கால்சியம் பாஸ்பேட்'.

     💧 பாலில் உள்ள புரத சத்தின் பெயர் - கோசீன்.

     💧 தாய்ப்பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோனின் பெயர் - ஆக்டோசின்.

Monday, April 22, 2019

தகவல் களஞ்சியம் - takaval kalanciyam - general knowledge.

மணலின் அறிவியல் பெயர் - சிலிகான் டை ஆக்ஸைடு. [Silicon Dioxide].

நெருப்பை அணைக்க பயன்படுத்தும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு. [carbon dioxide].

மின்சாரக்  கசிவால் ஏற்படும் தீயை அணைக்க பயன்படும் வேதிப்பொருள் - டெட்ரா குளோரைடு.[tetra chloride].

சுண்ணாம்புக்கல்லின் வேதியியல் பெயர் - ''கால்சியம் கார்பனேட்''. [Calcium Carbonate].

Sunday, April 21, 2019

யுரேகா ... யுரேகா - General knowledge - part 1.

     ❤ மின்சாரவிளக்கு கண்டுபிடித்தவர்  - தாமஸ் ஆல்வா எடிசன்.

     ❤ தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - லேண்ட்ஸ் டார்ம்.

     ❤ எலெக்ட்ரோ கார்டியோகிராம் [Electrocardiogram - ECG ] சாதனத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஐந்தோவன் [Willem Einthoven].

Friday, April 19, 2019

பொது அறிவு பெட்டகம் - General knowledge box.


               💗 சிறு தொலைவு, கோணங்கள் இவைகளை மிக துல்லியமாக அளக்க பயன்படும் கருவி.
மைக்ரோ மீட்டர்.[Micro meter ].

              💗 மின்னழுத்தம் அளவிடும் கருவி.
வோல்ட் மீட்டர். [Volt meter].

               💗 மின்சாரத்தை அளவிடும் கருவி.
அம்மீட்டர் [Ammeter].

               💗 காற்றின் வேகம், அழுத்தம் முதலியவைகளை அளக்க பயன்படும் கருவி.
''அனிமோ மீட்டர்''.

Thursday, April 18, 2019

பொது அறிவு தகவல்கள் - General knowledge information.


💨 நமது உடலில் உள்ள சுரப்பிகளில் மிக பெரியது எது தெரியுமா? - கல்லீரல்.

💨 கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - ''லெப்டின்''.

💨 நீரில் கரையும் வைட்டமின்கள் - பி.காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் C .

💨 வான்கோழியின் பூர்வீகம் - அமெரிக்கா.

Wednesday, April 17, 2019

அறிந்து கொள்ளுங்கள் - general knowledge.


 💦 உலகில் அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கும் நாடு - தென் ஆப்பிரிக்கா.

💦 பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.

 💦 அர்ஜென்டைன் தாதுவிலிருந்து அதிகமாக கிடைக்கும் உலோகம் - வெள்ளி.

💦 வெள்ளியின் உருகு நிலை - 961 டிகிரி செல்ஸியஸ்.

💦 உலோகங்களில் மிகவும் லேசானது - லித்தியம்.

தெரிந்ததும், தெரியாததும் - general knowledge.


  • நைல் நதி தெரியும், அதன் நீளம் தெரியுமா?
6650 கிலோ மீட்டர். 
  • ஹெலிகாப்டர் தெரியும், அதன் அதிகபட்ச வேகம் தெரியுமா?
மணிக்கு 400 கிலோமீட்டர்.
  • பாதரசம் தெரியும். பாதரசத்தின் உறைநிலை தெரியுமா?
39 டிகிரி செல்ஸியஸ்.

தனுராசனம் - dhanurasana.

              தனுசு என்றால் ''வில்''. இந்த ஆசனத்தில் வில் போன்று உடல் வளைக்கப்படுவதால் இது ''தனுராசனம்'' என பெயர் பெற்றது.

              தனுராசனத்தினால் மார்பு வலிமை பெறும். கூன் முதுகை நிமிரச்செய்து இளமையை கொடுக்கும்.மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். தனித்துவம் வாய்ந்த இந்த தனுராசனத்தை எப்படி பயிற்சி செய்வது என பார்ப்போம்...

நான் வளர்கிறேனா மம்மி - Childrens age and growth health

குழந்தைகளின் வயதும் வளர்ச்சியும்.
[Children's age and growth]

               குழந்தைகளின் வயதிற்கு தகுந்த நிறை மற்றும் உயரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறியுள்ளபடி குழந்தையின் நிறையோ, உயரமோ இல்லையென்றால் உடனே பயந்து விடவேண்டாம். 
               எடையும் வளர்ச்சியும் அவரவர் குடும்ப பரம்பரையைப்  பொறுத்தது.

Tuesday, April 16, 2019

செங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.[Cenkantal - Gloriosa superba].

பெயர் :- செங்காந்தள்.

தாயகம் :- தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா.

தாவரவியல் பெயர் :- Gloriosa superba.(குளோரியோசா சுபர்பா).

வரிசை :- Liliales.

 குடும்பம் :- Colchicaceae. (கொல்ச்சிகேசி)

பேரினம் :- காந்தள்.

வேறுபெயர்கள் :- காந்தள், கார்த்திகைப்பூ, கண்வலிக்கிழங்கு, கலப்பைக்கிழங்கு, வெண்தோன்றிக்கிழங்கு, கார்த்திகை கிழங்கு.

Monday, April 15, 2019

பாலாசனம் - balasana.

               பாலாசனம் என்றால் குழந்தை முதன்முதலாக எப்படி உட்காருமோ அப்படி உட்காரும் முறை என்று பொருள். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம்.

Sunday, April 14, 2019

அர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.

               சுவாசக்கோளாறு, மற்றும் மார்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சீர் செய்யும் எளிமையான அற்புத ஆசனம் இது எனலாம். செய்வதற்கும் மிக மிக எளிது. இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை இப்போது பார்ப்போம்.

டோடோ - dodo bird.

பெயர் :- டோடோ - Dodo.

இனம் :- பறவை.

குடும்பம் :- புறா.

துணைக்குடும்பம் :- en. Raphinae.

பேரினம் :- raphus cucullatus.

இனம் :- Cucullatus.

தாயகம் :- மொரீசியஸ் தீவுகள்.

தெரிந்து கொள்ளுங்கள். general knowledge.


           💖 பாம்பினுடைய விஷத்தின் நிறம் '' இளம் மஞ்சள்''.      

           💜 பாம்பு முட்டையானது நாட்கள் செல்லச்செல்ல அளவில் சிறிது பெரிதாகும் தன்மையுடையது. ஏனெனில் பாம்பு முட்டையானது கோழிமுட்டைபோல் திடமான ஓடுகளால் ஆனது அல்ல. அது ரப்பர் போல் நெகிழும் தன்மையுடையது. எனவே அது கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை சிறிதளவு பெரிதுபடுத்திக் கொள்கின்றன.

தெரியுமா உங்களுக்கு ? general knowledge.


 💢 கண்கள் திறந்த நிலையிலேயே முதலைகள் தூங்குகின்றன. மேலும் நாக்கை வெளியே நீட்ட முடியாத விலங்கும் இதுவே.

 💢 நதிகளே இல்லாத நாடு சவூதி அரேபியா.

💢 கங்காரு ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகாமை தீவுகளை தவிர வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை

Friday, April 12, 2019

திரிகோணாசனம் - யோகா - trikonasana - yoga.

                இந்த திரிகோணாசனம் உங்களை எப்போதும் இளமையாகவே வைத்துக்கொள்ளும் அற்புதமான ஆசனம். உங்கள் இடுப்பு சதையை கரைத்து உங்களை எப்போதும் ''ஸ்லிம்'' மாகவே வைத்துக்கொள்ளும். இதை எப்படி பயிற்சி செய்வது என்பதை பார்ப்போம்.

Wednesday, April 10, 2019

மாம்பா பாம்பு வகைகள் - type of mamba Snake

மாம்பா. [Mamba]

அறிவியல் பெயர் :- Dendroaspis polylepis.

பேரினம் :- dendroaspis.

குடும்பம் :- எலாப்பிடே.

தாயகம் :- ஆப்பிரிக்கா.

வகைகள் :- கருப்பு மாம்பா, பச்சை மாம்பா...

Monday, April 08, 2019

விலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration of animals.


விலங்குகள்                    கருவுறும் கால அளவு

எலி                                         19 -23 நாட்கள்.

மாடு                                        280 நாட்கள்.

புலி                                           115 - 145 நாட்கள்.

எருமை                                   305 - 318 நாட்கள்.

கரடி                                          215 - 240 நாட்கள்.

Sunday, April 07, 2019

பூமி - பயோடேட்டா [Earth biodata]

சூரியனிடமிருந்து தொலைவு  14,96,00,000 கி . மீ. 

சூரியஒளி பூமியை வந்தடையும் கால அளவு  -  8 நிமிடங்கள்.

சந்திரனிடமிருந்து தொலைவு  - 240,000 கி . மீ .

சூரியனை  சுற்றி வரும் கால அளவு  - 365 . 256 நாட்கள்.

சுழலும் முறை  - வலமிருந்து இடம் (மேற்கிலிருந்து கிழக்கு)

Thursday, April 04, 2019

மண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு [Sand boa].


 தாயகம் :- இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான், நேபாளம்.

விலங்கியல் பெயர் :- Eryx johnii.

குடும்பம் :- Boidae.

துணைக்குடும்பம் :- Erycinae.

இனம் :- E.Johnii.

பேரினம் :- Eryx (genus)

Wednesday, April 03, 2019

கொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.


               இதன் உடலமைப்பு நீண்ட கொடி அல்லது சாட்டை போல் உள்ளதால் இதனை கொடி பாம்பு எனவும், சாட்டை பாம்பு எனவும் அழைக்கின்றனர். இதற்குப் பறவைப்பாம்பு என்று ஒரு பெயரும் உண்டு....இது கண்களை குறி பார்த்து கொத்தும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிகழ்வதால் இதற்கு ''கண்கொத்திப்பாம்பு'' என்று ஒரு செல்லப்பெயரும் உண்டு.
              இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று ''பச்சை பாம்பு'', மற்றொன்று ''கொம்பேறிமூக்கன்''.

Tuesday, April 02, 2019

கட்டு விரியன் பாம்பு - Krait snake.


விலங்கியல் பெயர் :-Bungarus Caeruleus. மற்றும் Bungarus fasciatus.

தாயகம் :-   இந்திய துணை கண்டங்கள்.[பாகிஸ்தான், இந்தியா, இலங்கை.] மற்றும் தென் கிழக்கு ஆசியா.

வரிசை :-Squamata

குடும்பம் :- Elapidae. [எலாப்பிடே]

இனம் :- Bungarus caeruleus

பேரினம் :- Bungarus.

Monday, April 01, 2019

கண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.


அறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii]

தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான்.

வரிசை :- Squamata.

குடும்பம் :- Viperidae.

துணைக்குடும்பம் :- Viperinae.

இனம் :- Daboia russelii.

பேரினம்:- Daboia.

வேறுபெயர்கள் :- கழுதை விரியன்.

Sunday, March 31, 2019

சாரைப் பாம்பு - rat snake.


பெயர் :- சாரைப்பாம்பு -Oriental Ratsnake.

வேறுபெயர்கள் :- ptyas mucosa.

தாயகம் :- தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா.

வரிசை :- Squamata.

துணைவரிசை :- serpentes.

குடும்பம் :- Colubridae.

இனம் :- Ptyas mucosus.

பேரினம் :- Ptyas.

Tuesday, March 26, 2019

இராஜ நாகம் - கருநாகம் [King Cobra]

தாயகம் :- தென்கிழக்கு ஆசியா.

அறிவியல் பெயர் :- Ophiophagus hannah [ஓபியோபாகஸ் ஹன்னா]

ஆயுள் :- 20 ஆண்டுகள்.

உடலமைப்பு :-  விஷப்பாம்புகளில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகை இதுவே. சுமார் 7 மீட்டர்.(22 அடி).

Monday, March 25, 2019

இந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்தர்.


பிறப்பு :- ஜனவரி 12, 1863.

தாயகம் :- இந்தியா.

பிறந்த இடம் :- கல்கத்தா, இந்தியா.

இயற்பெயர் :- நரேந்திரநாத் தத்தா.

வாழ்க்கை :- ஆன்மீகவாதி, தத்துவ ஞானி, துறவி.

இறப்பு :- ஜூலை 4, 1902.

இந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-அன்னை தெரசா.


பிறப்பு :- 1910. ஆகஸ்ட் 26.

தாயகம் :- அல்பேனியா

இயற்பெயர் :- ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ.

விருதுகள் :- நோபல், பாரத ரத்னா.

வாழ்க்கை :- ஆன்மீகம், ஏழைகளுக்கு தொண்டாற்றுதல்.

இறப்பு :- 1997, செப்டம்பர் 5.

சிற்றகத்தி.(கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.)

தாவரவியல் பெயர் :- செஸ்பேனியா செஸ்பன்.(Sesbania sesban).

வழங்கப்படும் பெயர்கள் :- சிற்றகத்தி, சித்தகத்தி, செம்பை.

வகைகள் :- இதில் கருப்பு, மஞ்சள்,சிவப்பு என 3 வகைகள் உள்ளன. கருப்பு நிறத்தில் பூ பூப்பதை ''கருஞ்செம்பை'' என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை ''மஞ்சள் செம்பை'' என்றும் சிவப்பு நிறத்தில் பூப்பதை  
''செஞ்செம்பை'' எனவும் குறிப்பிடுகின்றனர்.


Sunday, March 24, 2019

சீமை அகத்தி - வண்டு கொல்லி.


மூலிகையின் பெயர் :- சீமை அகத்தி.

தாயகம் :- மெக்சிகோ.

தாவரவியல் பெயர் :- Senna Alata.

பேரினம் :- Senna [சென்னா].

குடும்பம் :- Fabaceae. [வாபேசியே]

துணைக்குடும்பம் :- Caesalpinioideae [சீஸல்பின்னியாய்டியே].

Friday, March 22, 2019

வீரபத்ராசனம்.virabhadrasana.

               உடலின் விறைப்புத் தன்மையை நீக்கி முதுகை நெகிழச்செய்து உடலை இளகிய தன்மையில் வைத்திருக்கும் ஆசனம் இது. முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்வதோடு கால்களையும் நன்கு வலுப்படுத்தும்.

Thursday, March 21, 2019

ஸ்வஸ்திகாசனம்-Swastikasana.

               ஸ்வஸ்திகா என்றால் வளமையான அல்லது வளம்பொருந்திய என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ''ஸ்வஸ்திகாசனம்'' எனப் பெயர்பெற்றது.

Wednesday, March 20, 2019

உட்கட்டாசனம்-Utkatasana.

               மூட்டுவலியை குணப்படுத்துவதில் இது சிறப்பாக செயல்படுகிறது. கால் மூட்டிற்கு வலுவை தருகிறது. சில நிமிடங்கள் இப்பயிற்சியை செய்து வந்தால் பல KM  நடைப்பயிற்சி செய்ததற்கான பலனைக் கொடுக்கிறது.

Tuesday, March 19, 2019

சிசுபாலாசனம்-sisupalasana.

               சிசுபாலாசனம் என்றால் குழந்தையை தாலாட்டும் முறையில் இருப்பது என்று பொருள்.
               கால்கள், தொடைகள், இடுப்பு, முதுகு,தோள் பட்டை முதலிய உறுப்புகள் வலுப்பெற மிகச் சிறந்த ஆசனம்.

Monday, March 18, 2019

உத்தித பத்மாசனம்.

               உத்தித என்றால் உயர்த்துதல் அல்லது தூக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் இருந்தபடியே உடலை தரையில் இருந்து மேலே உயர்த்துவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது.

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை - காரம் சாரம் உப்பு சுத்தி- karam-saram-suthi-saltl purification-part- 3.

               சுத்தி என்பது மூலிகைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்தின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.
               ''மூலிகைகள் சுத்தி. [பாகம் -1 மற்றும் 2]'' ல் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்த்தோம். இப்பதிவில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பல வகையான உப்புக்களை சுத்தி செய்யும் முறையை பார்ப்போம்.

பாம்புகள் - அறிமுகம் - snakes serpentes Introduction.

                பாம்பு ஊர்வன இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள ஒரு விலங்காகும். இதன் முதுகெலும்பு 200 முதல் 400 எலும்புகளால் கோர்க்கப்பட்டுள்ளன. இவை குளிர் இரத்த பிராணி ஆகும்.
               பாம்புகள் பொதுவாக ''சர்ப்பம்'' என்றும் ''அரவம்'' என்றும் அழைக்கப்படுகின்றன.
               பாம்பினங்களை விஷத்தன்மையுள்ள பாம்பு, விஷத்தன்மை இல்லாத பாம்பு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாம்புகள் தன் விஷத்தை இரைகளை வேட்டையாடவும், எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் பயன்படுத்துகின்றன.

Sunday, March 17, 2019

வழிகாட்டும் வாழ்க்கைத்தத்துவங்கள்- life-philosophy.

               💙 உன் எண்ணங்கள் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்.     அது தெளிவாக இருக்கும் வரை நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.

               💙 தனிமை - நீயே எடுத்துக்கொண்டால் சுகம். பிறரால்    திணிக்கப்பட்டால் துக்கம்.

               💙 தலை குனிந்து என்னைப் பார். உலகமே உன்னை தலை நிமிர்ந்து  பார்க்கும் - இப்படிக்கு புத்தகம்.

Saturday, March 16, 2019

சவாசனம்- சாந்தி ஆசனம்.

               யோகாசனப்பயிற்சியில் மிகமிக முக்கியமான ஆசனம் இந்த சவாசனம் ஆகும். ஏனெனில் யோகாசனப் பயிற்சியை முடித்தவுடன் கடைசி ஆசனமாக கண்டிப்பாக ''சவாசனம்''. செய்யவேண்டும். இது மிக மிக முக்கியம்.
               ''சவம்'' என்றால் பிணம். அதாவது பிணம்போல் உடலை தளர்வாக எந்தவித விறைப்புத் தன்மையும் இல்லாமல் வைத்து படுத்திருக்க வேண்டுமாதலால் சவாசனம் எனப்பெயர் பெற்றது.

அகத்தி-அகத்திக்கீரை-agathi-Sesbania grandiflora-tamil.

அகத்தி - முழு விபரம்.

தமிழ் பெயர் :- அகத்தி.

பெயர்க்காரணம் :- அகம் + சுத்தி = அகசுத்தி(அகத்தி). அகமாகிய உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் ''அகத்தி'' என அழைக்கப்படுகிறது.
               இதற்கு மருத்துவத்தில் அகத்தியம், முனிவிருட்சம் எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. காரணம் ''கானோபஸ்'' என்ற நட்சத்திரம் (இது தமிழில் ''அகத்திய நட்சத்திரம்'' என அழைக்கப்படுகிறது. இது வானத்தின் தென்பகுதியில் பிரகாசிப்பதை காணலாம். இது 700 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது). வானத்தில் தோன்றுகிற காலக்கட்டத்தில் அகத்திபூ மலரத்தொடங்குவதால் அகத்திக்கு அகத்தியம், முனிவிருட்சம் என பெயர் வழங்கப்படுகிறது.

Friday, March 15, 2019

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moolikaikal-suthi-herbal purification-Tamil-part-2.

               மூலிகை சுத்தி என்பது மூலிகைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்தின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.
               ''மூலிகைகள் சுத்தி. [பாகம் -1]'' ல் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்த்தோம். இப்பதிவில் மேலும் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்ப்போம்.

Thursday, March 14, 2019

சுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1

               ''மூலிகை சுத்தி'' என்பது சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகளில் மருந்து தயாரிப்பதற்கு முன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மிக முக்கியமாக கிரியை ஆகும். அது என்ன ''மூலிகை சுத்தி'' என்கிறீர்களா?
               மூலிகை சுத்தி என்பது மூலிகைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்தின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.

Wednesday, March 13, 2019

அறிவியல் என்பது என்ன?-What is science?-scientia-tamil.

               இயற்கை சார்ந்த பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை உள்ளது உள்ளபடி உலகிற்கு உணர்த்துவதே அறிவியல் ஆகும். அறிவியலின் அடிப்படையே ஒருபொருளின் உண்மைத் தன்மையை அறிவதே.
               அறிவியல் எந்த சூழ்நிலையிலும் .. ''வரும் .....ஆனா  ....வர ரா ரா து .....''' என்று ஜோசியம் சொல்லாது. சனீஸ்வரருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து எள்ளும், காணமும் தானம் செய்தால் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தப்பிவிடலாம் என்று பரிகாரம் எல்லாம் சொல்லாது.

Tuesday, March 12, 2019

பத்மாசனம்-கமலாசனம்-padmasana-kamalasana-yoga-tamil.

               ''பத்மம்'' என்றால் தாமரையை குறிக்கும். ''கமலம்'' என்றாலும் தாமரையைத்தான் குறிக்கும். எனவே இந்த ஆசனம் ''பத்மாசனம்'' என்றும், ''கமலாசனம்'' என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாசனம் என்றால் ''தாமரை ஆசனம்'' என்று பொருள்.
               மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரு கால்களும் பார்ப்பதற்கு தாமரை பூவின் இதழை போன்ற வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
               தியானம் செய்வதற்கு பெரும்பாலானவர்கள் இந்த ஆசனத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அளவிற்கு அற்புதமான ஆசனம்.

Monday, March 11, 2019

சூரிய நமஸ்காரம்-surya-namaskar-sun-salutation-tamil.

          சூரிய நமஸ்காரம் என்றால் சூரியனை வணங்குதல் என்று பொருள்.
 அதுசரி சூரியனை ஏன் வணங்க வேண்டும்?
          நமது வாழ்க்கையில் யாராவது ஒருவர் ஒரு சிறிய உதவி செய்தாலே அவர்களுக்கு நாம் பலமுறை நன்றி செலுத்துவோம். அவ்வாறிருக்கையில் உலக இயக்கதிற்கு ஆதாரமாகவும், முதன்மையானதாகவும் விளங்குவது சூரியன். நம் உயிர் வாழ்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை ஆதாரங்களையும்  நமக்கு தந்து உதவுவது சூரியனே....

Sunday, March 10, 2019

உளவியல் [சைக்காலஜி] அறிமுகம்-tamil.-ulaviyal-psychology-Introduction-tamil.

    உளவியல் அறிமுகம்.

               உளவியல் - Psychology.[சைக்காலஜி] என்பது ஒரு கிரேக்கச் சொல். இது "logia" என்ற கிரேக்க சொல்லிலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும். இதன் பொருள் 'மனதைப் படிப்பது'.
                உளவியல் அல்லது மனோவியல் (Psychology) என்பது நம் மனதில் ஏற்படும் எண்ணங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் ஆய்வுக்களம் எனலாம். உளவியல் என்பது ''சமூகஅறிவியல்'' எனும் துறைக்கு உட்பட்ட ஒரு பிரிவாகும்.

Saturday, March 09, 2019

யோகாசனம்-யோகா-அறிமுகம்-yogasana-yoga-Introduction-tamil.

               சித்தர்கள் மனிதகுலம் மேன்மையுற பல அரும்பெரும் விஷயங்களை இந்த உலகிற்கு தந்து சென்றுள்ளனர். அவைகள் இலக்கியம், வேதங்கள், தத்துவங்கள், தற்காப்புக்கலைகள், மருத்துவம் இன்னும்பல .....
          அவைகளில் மனித உடலும், மனமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் பன்னெடுங்காலம் நிலைத்திருக்க அவர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோகக்கலைகளும் ஆகும்.

Friday, March 08, 2019

மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள்-சார்லி சாப்ளின்-charles chaplin-philosophy-tamil.

சார்லி சாப்ளினின் தத்துவங்கள்.

பெயர் :- சார்லி சாப்ளின்.
இயற்பெயர் :- சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின்.
தாயகம் :- இங்கிலாந்து - லண்டன்.
பிறப்பு :-ஏப்ரல் 16 , ஆண்டு 1889.
இறப்பு :- டிசம்பர் 25, ஆண்டு 1977.
திறமை :- நகைச்சுவை கலந்த நடிப்பு.
முத்திரை பதித்தது :- இசை மற்றும் சினிமா.

Thursday, March 07, 2019

இந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-ஓசோ-philosophy-osho-india-arinarkalin-thatuvangal-tamil.

 ஓசோவின் தத்துவங்கள் - tamil.

பெயர் :- ஓஷோ.

இயற்பெயர் :- ரஜ்னீஷ் சந்திர மோகன்.

தாயகம்:- இந்தியா, மத்தியபிரதேசம்.

வாழ்க்கை முறை :- ஆன்மீகம்.

பிறப்பு :- 1931, டிசம்பர் 11.

இறப்பு :- 1990, ஜனவரி 19.

மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில்-mealainaddu-arinarkalin-tathuvangal--Aristotle-tamil.

அரிஸ்டாட்டில் தத்துவங்கள்.

பிறப்பு :-கி.மு 384.
பெயர் :- அரிஸ்டாட்டில்.
வாழ்க்கை :-தத்துவஞானி.
பிரகாசித்தது :- இசை, நாடகம், கவிதை, அரசியல், அறிவியல்.
இறப்பு :- கி.மு 322.

Wednesday, March 06, 2019

சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்-The scientific judgment home page     
வருகைக்கு நன்றி.


               சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்[scientific Judgment] - தளத்திற்குக்கு வருகைதந்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கத்தினை காணிக்கையாக்குகிறோம்.

தமிழ் அறிஞர்களின் தத்துவங்கள் - அப்துல்கலாம். tamil-arinarkalin-thatuvangal-philosophy-A.P.J.Abdul kalam.


அய்யா அப்துல்கலாம்.


பிறப்பு :- அக்டோபர் 15. ஆண்டு 1931.

பெயர் :- ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம்.

தாயகம் :- இந்தியா, ராமேஸ்வரம்.

வாழ்க்கை :-விஞ்ஞானி.

இறப்பு :- ஜூலை 27, ஆண்டு 2015.