header ads

header ads

இராஜ நாகம் - கருநாகம் - King Cobra.

பெயர் :- இராஜ நாகம் (அல்லது ) கருநாகம் - King Cobra.

அறிவியல் பெயர் :- ஒபியோபாகஸ் ஹன்னா - Ophiophagus hannah.

தாயகம் :- தென்கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, பிலிப்பைன்ஸ் தீவுகள், இந்தோனேசியா, மியான்மர், மலேசியா மற்றும் இந்தியா.

ஆயுள் :- 20 ஆண்டுகள்.


King Cobra snake


வாழிடம் :- அதிக அளவில் மழை பெய்யும் அடர்ந்த காட்டுப்பகுதியிலும், சதுப்பு நிலங்களிலும். மூங்கில் புதர்கள் நிறைந்துள்ள பகுதிகளிலும்  வசிக்கின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

உணவுமுறை :- இவைகள் பெரும்பாலும் பாம்பினங்களையே உணவாக உட்கொள்கின்றன. அரிதாகவே பிற உயிரினங்களை உணவாக உட்கொள்ளும்.

               கொடிய விஷமுள்ள பாம்புகளைக்கூட தாக்கி அழித்து ''ஸ்வாகா'' செய்துவிடும். எனவேதான் நாகங்களுக்கெல்லாம் இராஜாவாக இதை அங்கீகரித்து ''இராஜ நாகம்'' (king Cobra) என்று பெருமையாக அழைக்கிறோம். இது ஒருமுறை உணவு உட்கொண்டால் அதன்பின் பலநாட்கள் உணவு இல்லாமல் வாழும் திறன்படைத்தது.

உடலமைப்பு :-  விஷப்பாம்புகளில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகை இதுவே. சுமார் மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் நீளம் வரை வளரும் தன்மையுடையது.

                இராஜநாகம் என்னும் பாம்புகளில் உடலில் சிற்சில மாற்றங்களுடன் சில இனங்களும் இருக்கின்றன. இவைகளில் சில மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. சில வகைகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலான பட்டைகளைக்  கொண்டுள்ளது.

               இவைகள் 300 அடிக்கு அப்பாலுள்ள இரையின் சிறு அசைவைக்கூட பார்க்கும் திறன் படைத்தது. அந்த அளவிற்கு கண்பார்வை கூர்மையானது.

               பெண் இனத்தைவிட ஆண் பாம்புகள் தடிமனாகவும், நீளமாகவும் இருக்கின்றன.

King Cobra


               நாம் சாதாரணமாக குறிப்பிடும் ''நாகப்பாம்பு '' என்பது வேறு, ''இராஜநாகம்'' என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல..... இரண்டிற்குள்ளும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நாகப்பாம்பையே நாம் தமிழில் "நல்லபாம்பு" என்று பெயரிட்டு அழைத்துவருகிறோம். நல்லபாம்பைப்போல இராஜநாகமும் படமெடுத்து ஆடும். ஆனால் நல்ல பாம்பின் படம் மிக அகலமாக இருக்கும். இராஜநாகத்தின் படம் அகலம் குறைவாக இருக்கும். இராஜநாகம் ஆப்பிரிக்காவிலுள்ள ''மாம்பா '' என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பினத்தின் வம்சாவழியைச் சேர்ந்ததாகும்.

இனப்பெருக்கம் :- இது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. . ஜனவரி, பிப்பிரவரி, மார்ச் மாதங்களில் இனச்சேர்க்கையும் ஏப்ரல், மே மாதங்களில் முட்டையும் இடுகின்றன. அதிகப்படியாக 30 முட்டைகள் வரை இடும்.

               காய்ந்த இலைகளை கூடு போல அமைத்து அதற்குள் முட்டையிட்டு இரண்டு மாதங்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் மிக கவனமுடன் முட்டையை அடைகாக்கின்றன. ஆண்பாம்பும் அதன் அருகிலேயே இருந்து பாதுகாப்பு கொடுக்கிறது. 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் முட்டைகள் அடைகாக்கப்படுகின்றன.

               முட்டைக்குள்ளிருக்கும் பாம்பு குட்டிகளுக்கு மூக்கின் நுனியில் கூர்மையான ஒரு பல் போன்ற அமைப்பு இருக்கும். அதன் துணைகொண்டு முட்டையோட்டை கிழித்துக்கொண்டு வெளிவருகின்றன. சிலநாட்களில் இந்த தற்காலிக பல் தானாகவே விழுந்துவிடும்.

king cobra egg

விஷத்தன்மை :- மிகக் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷமானது ஆப்பிரிக்க ''கறுப்பு மாம்பா'' பாம்புகளைவிட 5 மடங்கு வீரியமானது. அன்று பிறந்த குட்டிகளுக்கு கூட முழுமையாக வளர்ச்சிபெற்ற நச்சு சுரப்பிகளும், நச்சுப்பற்களும் உள்ளன.

தொட்ட நீ செத்த......

Kingcobra snake story


               விஷப்பாம்புகளில் இவர்தான் ''ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ மகா கனம் பொருந்திய குலோத்துங்க இரண்டாம் புலிக்கேசி''. ஏனெனில் இது விஷத்தன்மை வாய்ந்த ஏனைய அனைத்து பாம்பு வகைகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது.

               பிற கொடிய விஷப்பாம்புகளின் விஷத்தை விட இதன் விஷம் வீரியம் கொஞ்சம் குறைந்ததுதான் என்றாலும் ஒருதடவை தீண்டும்போது அதிக அளவு குறிப்பாக 6 முதல் 7 மில்லி விஷத்தை உட்செலுத்தும் திறன் படைத்தது என்பதால் இதன் விஷம் உயிருக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கிறது.

King Cobra Snake

                இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் யாரையும் இவைகள் தேவையில்லாமல் தீண்டுவதில்லை. ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது. இந்த எச்சரிக்கையையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கினால், தன் உயிருக்கு ஆபத்து என்று உணரும் பட்சத்தில் கடைசியாகவே விஷத்தை பிரயோகிக்கின்றன.

               இதன் விஷம் நரம்புமண்டலத்தை மிக கடுமையாக பாதிக்கும். கடித்த சில நிமிடங்களிலேயே மயக்க நிலைக்கு கொண்டுசென்று விடும்.
 
               பாம்பு தீண்டி இறப்பவர்களின் பெரும்பாலானோர் அதாவது 75 சதவீதம் பேர் இராஜநாகம் என்று சொல்லப்படும் கருநாகம் தீண்டுவதாலேயே இறக்கின்றனர். மேலும் இப்பாம்பினால் தீண்டப்பட்டவர்கள் பிழைப்பது மிக கடினம். 75 சதவீதம் பேர் மரணத்தையே தழுவுகின்றனர் என்றாலும் அதில் 25% பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருப்பதால் மனம்தளராமல் உடனடியாக சிகிச்சையை தொடரவேண்டும்.

               ஆனால், நாம் இங்கு கவனிக்கப்பட வேண்டிய கசப்பான உண்மை என்னவென்றால் இந்த கருநாகம் என்னும் இராஜநாகத்தின் விஷத்தை செயலிழக்கச் செய்யக்கூடிய தனிப்பட்ட விஷத்தடுப்பு மருந்தை இதுவரையில் நிபுணர்களால் உருவாக்கமுடியவில்லை என்பதே ...

               இது ஆப்பிரிக்காவிலுள்ள ''மாம்பா '' என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பினத்தின் வம்சாவழியை சார்ந்தது என்பதனை நாம் ஆரம்பத்தில் பார்த்தோம்.

               இந்த மாம்பா பாம்புகளில் இருவகைகள் உள்ளன. அவைகளை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கிழேயுள்ள லேபிளை தட்டுங்க ...


 💧💧💧💧💧💧💧💧💧💧

கருத்துரையிடுக

8 கருத்துகள்

 1. //ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது//

  வலிமையானவனின் தன்னம்பிக்கை!

  சுவாரஸ்யமான கட்டுரை.

  பதிலளிநீக்கு
 2. கட்டுரை அருமை.நாகம் அதுவும் கருநாகம் ஆயுள் அதிகம் போலும்![[

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. Chokkan Subramanian .... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.