வழிகாட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள் - Guiding Philosophy in Life.

வழிகாட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள்.

life - philosophy.

வாழ்க்கையில் பல வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து சென்ற ஆன்றோர்களும், சான்றோர்களும் தன் வாழ்க்கை அனுபவங்களை எதிர்கால சந்ததிகள் அறியும் பொருட்டு செப்பேடுகளில் ஆழமாக பொறித்து சென்ற வைர வரிகளே தத்துவங்கள் எனலாம். அதிலிருந்து நம் வாழ்க்கைக்கு பயன் சேர்க்கின்ற சில தத்துவார்த்த சொல்லாடல்களை இங்கு காண்போம் !!!.

life-philosophy book

Vazhi Kaddum Valkkai Thaththuvangal.

முயற்சி நின்ற தருணம்.

 • வாழப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
 • விதை விழுவது உரமாவதற்கு அல்ல. மரமாவதற்கே...
 • தலை குனிந்து என்னைப் பார். உலகமே உன்னை தலை நிமிர்ந்து பார்க்கும் - இப்படிக்கு புத்தகம்.
 • உன் எண்ணங்கள் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்.  அது தெளிவாக இருக்கும் வரை நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.
 • உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு... உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசு...
 • நாம் எதிலும் தோற்பதே இல்லை... ஒன்று வெற்றி கொள்கிறோம் இல்லையேல் கற்று கொள்கிறோம்.
 • உங்களின் நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களை நீங்கள் இன்று கண்டறியாவிட்டால், நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது.
 • கற்கள் ஏற்படுத்தும் வலியைவிட சொற்கள் ஏற்படுத்தும் வலி அதிகம். எனவே தவறான வார்த்தைகள் பற்கள் தாண்டி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • விடாமுயற்சியை விடாமல் இருப்பவனே இறுதியில் வெற்றியடைகிறான்.
 • மூச்சு நின்றால் மரணம், அது உன் முயற்சி நின்ற தருணம்.
 • தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும், ஏணியாக நினைத்தால் உயர்த்தும்.
 • பொறுமையை இழந்தவன் வறுமையில் வீ ழ்வான். எனவே எதை இழந்தாலும் பொறுமையை இழக்காதே.
 • ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டுமென்றால் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி.
 • காணாமல் போனவர்களை தேடு, ஆனால் உன்னை கண்டும் காணாமல் போகிறவர்களை கண்டால் ஓடு.
 • கடந்துபோன காலங்கள் காலாவதியான மருந்தைப் போல அதை நினைந்து வருந்தினாலும், அருந்தினாலும் வாழ்க்கையோ கெடும்.
 • ஒரு எலியின் இளமையை விட ஒரு புலியின் முதுமை வலிமை பொருந்தியது.
l philosophy.

 • ஏழையாக இருப்பது தவறல்ல.. என்றும் கோழையாக இருப்பதே தவறு.
 • நீ வெளிச்சத்தில் இருந்தால்தான் உன்னை உன் நிழல் கூட பின் தொடரும்.
 • நீ பிறருக்கு கொடுக்கும் வெங்காயத்தை விட பிறரிடமிருந்து உனக்கு கிடைக்கும் பெருங்"காயமே" உனக்கு சிறந்த படிப்பினையைக் கொடுக்கும்.
 • எவனொருவன் தன் மனதை ஆட்சி செய்கிறானோ அவனை வேறு எவராலும் ஆட்சி செய்ய முடியாது.
 • வாழ்க்கையின் சுகமே அதை சுமப்பதில்தான் இருக்கிறது.
 • தனிமை - நீயே எடுத்துக்கொண்டால் சுகம். பிறரால் திணிக்கப்பட்டால் துக்கம்.
 • முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை வெல்லவே வெல்லாது.
 • நீ கையில் எடுக்க விரும்பும் வன்முறையின் இரு பக்கமும் கூர்மையானவை. அது உன் எதிரிகளை விட உன் கைகளையே முதலில் பதம் பார்க்கும்.
 • உன்னை மதிக்காத இடத்தில் பிணமாக கூட இருக்காதே.
 • வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. ஆனால் வேடிக்கை பார்பவனுக்கு அது இல்லை.

வாழ்க்கைத் தத்துவங்களைப்பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் சில "தத்துவ முத்துக்களை"ப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டாமா? தெரிந்துகொள்ள தட்டுங்கள் >> "தத்துவ முத்துக்கள் - Thaththuva Muthukkal - Philosophy in Tamil."


கருத்துரையிடுக

0 கருத்துகள்