header ads

header ads

இந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - ஓஷோ. India Arinarkalin Thatuvangal Philosophy - Osho.


பெயர் :- ஓஷோ.

இயற்பெயர் :- ரஜ்னீஷ் சந்திர மோகன்.

தாயகம்:- இந்தியா, மத்தியபிரதேசம்.


philosophy-osho-india-arinarkalin-thatuvangal-tamil.

வாழ்க்கை முறை :- ஆன்மீகம், பேச்சாளர், ஆன்மீக குரு.

பிறப்பு :- 1931, டிசம்பர் 11. [மத்திய பிரதேசம், ரெய்சன் மாவட்டத்திலுள்ள "குச்வாடா" என்னும் கிராமத்தில் பிறந்தார் ].

இறப்பு :- 1990, ஜனவரி 19. [ இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனேவில் இயற்கை எய்தினார்].

ஓஷோ தத்துவங்கள்.

               கப்பலில் இருந்த கிளி ஒன்று பேச்சுத்துணை இல்லாமல் மிகவும் சலிப்புற்றிருந்த சமயத்தில், அங்கு ஒரு குரங்கு இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டது.
💢💢💢💢💢💢

          நட்சத்திரங்களின் அழகை ரசிக்க வேண்டுமென்றால் நீ இருளில் இருந்துதான் ஆக வேண்டும்.

💓💓💓💓💓💓

               உன்னுடைய பிரச்சனைகளை உன்னால் மட்டுமே சரி செய்ய முடியும். ஏனென்றால் அதை உருவாக்கியவனே நீதான்.

osho

               விதையாக பிறவி எடுப்பது என்பது முற்றிலும் சரியே, ஆனால் வெறும் விதையாகவே மாண்டு போவது என்பது துரதிஷ்டமானது.

💙💙💙💙💙💙

               துன்பத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இன்பத்தையும் தவிர்க்க வேண்டும். இறப்பை தவிர்க்க வேண்டும் என்றால் பிறப்பையும் தவிர்த்தால்தான் அது சாத்தியம்.

💧💧💧💧💧💧

               அன்பு என்பது ஒரு இலக்கு, வாழ்க்கை என்பது அதை நோக்கி செல்லும் பயணம்.

💦💦💦💦💦💦

               தான் மிகச்சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் மிகச்சிறந்த மனிதன்.

💚💚💚💚💚💚

               உண்மை என்பது வெளியே இருக்கும் எதோ ஓன்றை கண்டுபிடிப்பது அல்ல, அது உள்ளுக்குள்ளே இருக்கும் ஒன்றை உணர்வது.

💛💛💛💛💛💛

               வாழ்க்கையை அனைத்து சாத்தியமான வழிகளிலும் அனுபவியுங்கள். அனுபவங்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனெனில் அனுபவங்கள்தான் உங்களை முதிர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.

osho-india--tamil.

               பார்வையிழந்த உங்களுக்கு கண்களை தர விரும்புகிறேன். ஆனால், நீங்களோ என்னிடம் ஊன்றுகோலை எதிர்பார்க்கிறீர்கள்.

💜💜💜💜💜💜

               எத்தனை தவறுகள் வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யாதீர்கள். ஏனென்றால் அந்த தவறை மறக்கவே முடியாதபடிக்கு நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையே திசைமாறிப்போகும்...


💫💫💫💫💫💫

               நீ இந்த கணத்தை முழுமையாக வாழ்ந்தால், எதிர்காலத்தைப் பற்றி நீ கவலை கொள்ள வேண்டிய அவசியமிருக்காது.

💗💗💗💗💗💗

               மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டா? .. என்பது ஒரு புறம் இருக்கட்டும் ... நீ உயிரோடு இருக்கும் பொது  உனக்கான வாழ்க்கையை வாழ்கிறாயா? இல்லையா? என்பதுதான் இப்போதைய கேள்வி...

💦💦💦💦💦💦

               இங்கே மனிதனைத்தவிர வேறு யாரும் ''அகங்காரம்'' நிரம்பியவர்கள் இல்லை, எனவேதான் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் அதிக அளவில் துன்பங்களை அனுபவிப்பது இல்லை.

💫💫💫💫💫💫

               யாரிடமும் பேசும்போது பயப்படாதீர்கள். அப்படியில்லை என்றால் பயப்படும்போது பேசாதிருங்கள்.

osho_tamil.

               உங்களிடம் கற்றுக் கொள்ளும் மனமும் அதில் ஆர்வமும் இருந்தால் உங்களால் முட்டாள்களிடம் இருந்து கூட பாடம் கற்க முடியும். அந்த மனமும் அதற்கான ஆர்வமும் இல்லாவிடடால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது.

💘💘💘💘💘💘

               உனக்கும் அடுத்தவருக்கும் இருக்கும் உறவு கண்ணாடி போன்றது.

💟💟💟💟💟💟

               நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே, தீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனிடம் உறவு கொள்ளாதே.

🙏🙏🙏🙏🙏🙏

கருத்துரையிடுக

6 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.