Friday, March 22, 2019

வீரபத்ராசனம்.virabhadrasana.

               உடலின் விறைப்புத் தன்மையை நீக்கி முதுகை நெகிழச்செய்து உடலை இளகிய தன்மையில் வைத்திருக்கும் ஆசனம் இது. முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்வதோடு கால்களையும் நன்கு வலுப்படுத்தும்.






ஆசனம் செய்முறை :-
                                               முதலில் இருகால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். அதன் பின் இருகால்களையும் பக்கவாட்டில் மூன்று அல்லது மூன்றரை அடி இடைவெளி இருக்கும் அளவிற்கு அகட்டி வைக்கவும். இருகைகளையும் மேல்நோக்கி குவித்து கும்பிட்டவாறு வைக்கவும்.


               பின் வலது பாதத்தை வலதுபக்கமாகத் திருப்பி உங்கள் உடலையும் வலது பக்கமாகத் திருப்பிக் கொள்ளுங்கள். மெல்ல வலது காலை படத்தில் உள்ளவாறு மடக்கி தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இடது கால் நேராக அதே நேரம் சாய்வாக இருக்கவேண்டும். 10 அல்லது 15 வினாடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு உடலை நேராக்கவும். கைகளை கீழே இறக்கவும்.


               அடுத்து வலது பக்கம் செய்தது போல் இடது பக்கம் செய்யவும். இவ்வாறு மாற்றி மாற்றி 4 முதல் 8 தடவை செய்யவும்.



பலன் :-
                 கால்கள் வலுப்பெறும், முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். கழுத்து வலி, இடுப்பு வலி நீங்கும். கொழுப்பு கரைந்து தொந்தி மறையும். உடல் இறுக்கத்தை நீக்கி இளகிய தன்மையை நல்கும்.

2 comments:

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...