"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நான் வளர்கிறேனா மம்மி - Childrens age and growth health.

நான் வளர்கிறேனா மம்மி - Childrens age and growth health.

குழந்தைகளின் வயதும் வளர்ச்சியும்.

Children's age and growth.

உலகின் பெரும்பாலான பெற்றோர்கள் கவலைப்படுகிற தலையாய விஷயம் எதுவென்றால் அது தன் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பற்றியதாகத்தான் இருக்கும்.


தன் குழந்தை போதிய அளவு போஷாக்கு இல்லாமல் மிகவும் மெலிந்து காணப்படுவதாக அடிக்கடி குறைபட்டுக் கொள்வர்.

இங்கு ஒரு விஷயத்தை கவனமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மில் பெரும்பாலானோர் வெறும் உணவு மட்டுமே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும், தன் குழந்தை சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடாததால்தான் மெலிந்து காணப்படுவதாகவும் நினைக்கின்றனர். இது தவறான கருத்து என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி என்று சாப்பிடும் குழந்தையை விட சாதாரண பழைய சோறும், பச்சை மிளகாயும் சாப்பிட்டு வளரும் குழந்தை நன்றாக செழுமையாகத்தான் இருக்கிறது.

எனவே, உங்கள் குழந்தை மெலிந்து காணப்பட்டாலோ அல்லது போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ ஒழுங்காக சாப்பிடமாட்டேன் என்கிறது என்பதையே காரணமாக சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.

இதையும் தாண்டி அந்த குழந்தை மெலிந்திருப்பதற்கு காரணம் அதன் மனதில் ஏற்படும் மன அழுத்தம் அல்லது உடல் சார்ந்த பிரச்சனை அல்லது பரம்பரை காரணமாக கூட இருக்கலாம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

வேண்டாம், வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் உங்கள் குழந்தைக்கு உணவை வலுக்கட்டாயமாக திணிப்பது...  உணவை மட்டுமல்ல அந்த குழந்தையின் வருங்காலத்திற்கு தேவையான வியாதிகளையும் சேர்த்தே திணிக்கிறீர்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

வெறும் உணவு மட்டுமே வளர்ச்சியை கொடுப்பதில்லை.

உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிக முக்கிய பங்காற்றுபவை நம் உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகள். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மிக மிக அவசியம் என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.

nan valarkirena mummy

நம்முடைய உடலின் முறையான வளர்ச்சிக்கும். உடலில் ஏற்படும் பலவித வளர்ச்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணியாக திகழ்வது "தைராய்டு சுரப்பி - Thyroid gland." இந்த சுரப்பியில் ஏதாவது பிரச்சனை என்றாலும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

உங்கள் உடம்பிலுள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிக முக்கியமானது ''தைராய்டு - Thyroid gland ''. இந்த சுரப்பி ''தைராக்ஸின் - Thyroxine'' என்னும் ஹார்மோனை தடையில்லாமல் சுரந்தால் மட்டுமே உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் சாத்தியமாகும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் தைராய்டின் பங்கு மிக முக்கியம் என்பதனை கவனத்தில் கொள்ளவும். 

தைராய்டு சுரப்பி சிறு மூளையிலுள்ள ''பிட்யூட்டரி - Pituitary gland'' என்னும் தலைமை சுரப்பியின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது. அந்த பிட்யூட்டரியை கன்ரோல் பண்ணுவது பெருமூளையிலுள்ள "ஹைப்போதலாமஸ் - Hypothalamus" என்னும் பகுதி. எனவே பிட்யூட்டரி மற்றும் கைபோதலாமஸ் இவைகளில் எதாவது பிரச்சனை என்றால் அது தைராய்டையும் கடுமையாக பாதிப்படையச் செய்யும்.

எனவே குழந்தையில் வளர்ச்சி சரியாக இல்லையென்றால் உணவை மட்டுமே குறை சொல்லாமல் மேற்கண்ட உறுப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதனையும், ஜீரணமண்டலம் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் மருத்துவரிடம் சென்று முதலில் பரிசோதித்து அறியவும்.

குழந்தைகளின் வயதிற்கு தகுந்த நிறை மற்றும் உயரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறியுள்ளபடி குழந்தையின் நிறையோ, உயரமோ இல்லையென்றால் உடனே பயந்து விடவேண்டாம்.

எடையும் வளர்ச்சியும் அவரவர் குடும்ப பரம்பரையைப் பொறுத்தும் அமையும்.

குட்டையான பெற்றோர்களுக்கு அல்லது அவர்கள் பரம்பரையில் தாத்தா, பாட்டி அல்லது பூட்டன், பூட்டி யாராவது குட்டையாக இருந்தால் பிறக்கும் குழந்தைகள் குட்டையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை.

உங்கள் குழந்தையின் வளர்ச்சியிலோ, எடையிலோ வித்தியாசத்தை உணர்ந்தால் அதற்கான சரியான காரணத்தை கண்டறிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். இங்கு குறிப்பிட்டுள்ள அளவு பொதுவான அளவு மட்டுமே.

Naan Valarkirena Mummy.

பிறந்த குழந்தை

  • நிறை (weight) - 3 கி .கி.
  • உயரம் (height) - 50.0 செ .மீ.

1 வயது

  • நிறை (weight) - 9 கி . கி.
  • உயரம் (height) - 74.5 செ . மீ .
Childrens age

 5 வயது

  • நிறை (weight) - 16.5 கி .கி.
  • உயரம் (height) - 103.5 செ . மீ.

10 வயது

  • நிறை (weight) - 26.5 கி.கி.
  • உயரம் (height) - 132.5 செ . மீ.
growth health

15 வயது

  • நிறை (weight) - 39 கி .கி.
  • உயரம் (height) - 149.5 செ . மீ.

20 வயது

  • நிறை (weight) - 43.5 கி . கி.
  • உயரம் (height) - 151.5 செ .மீ.
💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. பதில்கள்
    1. Suresh ... வருக நண்பரே ! தங்கள் வருகைக்கு நன்றி !!!

      நீக்கு
  2. நல்ல விளக்கங்கள் சகோ.

    குறிப்பாக ஒரு குழ்ந்தை சாப்பிடவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு அதில் மனதும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டிருப்பதும் மிரட்டி உருட்டி கட்டாயப்படுத்திச் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்பதும் ஏனென்றால் பலரும் குழந்தையின் மன நிலையை ஆராய்வதே இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ... தங்களின் கருத்துகளுக்கு மகிழ்ச்சி !!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.