பாரத் மாதா கி ஜே - நரேந்திர மோடி - Bharat mata ki jai - Narendra modi.

யுக புருஷர் மோடி ஜி !!!.

காலத்தால் அழியாத காவியம்.
இப்பூவுலகின் உன்னத தலைவன்,
இந்திய மக்களின் கலங்கரை விளக்கம்,
பாரதத் தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன்.
Bharat mata ki jai

எங்கள் தலைவனாக திகழும் அதேவேளையில் பாரதத்தாயின் வெற்றித்திலகமாகவும் திகழும்  ''மோடிஜி'' (Modiji) அவர்களின் அளப்பரிய வெற்றிக்கு இச்சிறிய பதிவை காணிக்கையாக்குகிறோம்.

பாரத் மாதாகி ஜே !!!

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Bharat mata ki jai Modiji

"தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ" ?
- மகாகவி பாரதி.

இந்திய அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் அமோக ஆதரவுடனும் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடனும் தொடர்ந்து அரியணை ஏறிவரும் பெருமைமிகு பிரதமர்.


அனைத்துலக மக்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்ட உன்னத தலைவர். மிகச்சிறந்த தேச பற்றாளர். வசீகரிக்கும் தன்மை கொண்ட மிகச்சிறந்த பேச்சாளர். உலகின் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.


நம் பாரத தேசத்தின் புல்லுருவிகளான தேச துரோகிகளையும்பிரிவினைவாதிகளையும்வெளிநாட்டு கைக்கூலிகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.

 

''ஜெய் பாரத் மாதா கி'' என்கிற முழக்கத்துடன் இந்தியாவின் உள் கட்டமைப்பை மிக சிறப்பாக மேம்படுத்தி வருபவர். இந்தியாவை உலகின் முன்னணி நாடாக கொண்டு வருவதையே தன் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகவும், இலட்சியமாகவும் கொண்டு 2014 முதல் தற்போது வரை பிரதமராக இயங்கி வரும் ஒப்பற்ற தலை சிறந்த நிர்வாகி.


பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திக்காட்டி ஒவ்வொரு இந்தியனையும் கர்வம் கொள்ளச்செய்த பாரதத்தின் ஒப்பற்ற தலைவன். இவரின் நல்லாட்சி மேன்மேலும் தொடர எங்களின் நல்வாழ்த்துக்கள்!


''பாரத் மாதா கி ஜே"

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. இவரது ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் மக்களுக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறோம் நண்பரே. ஆனால் ... வீட்டிற்குள் கோவணத்தைக் கட்டிக்கொண்டு எளிமை என்கிற பெயரில் வாழ்ந்து விடலாம் என்பது உண்மைதான். ஆனால் வெளியுலக வாழ்க்கையில் சில விஷயங்களை சாதித்துக் கொள்வதற்கு எளிமை மட்டுமல்ல சிறிதளவு ஆடம்பரமும் அவசியமாகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நண்பரே... என் கருத்து தவறென பட்டால் மன்னிக்கவும்.

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.