"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
யுரேகா யுரேகா - Eureka General knowledge.

யுரேகா யுரேகா - Eureka General knowledge.

Eureka! Eureka!!

[Part - 2]

நம்முடைய வாழ்க்கை இன்று மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. பரந்த உலகம் இன்று நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டன. தொலைதூர நாடுகளாக கணிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் இன்று தொட்டுவிடும் தூரத்திலேயே இருக்கின்றன.

இதற்கு காரணம் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல்  கண்டுபிடிப்பாளர்கள்.

ஆம், அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களே மனித வாழ்க்கையின் தரத்தினை இந்த அளவு உயர்த்தியுள்ளன என்றால் அது மிகையில்லை.

அப்படியான சில பிரம்மாக்கள் பற்றியும் அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றியும் இந்தவார பொது அறிவு துணுக்குகளாக பார்ப்போம் வாருங்கள்.

"யுரேகா யுரேகா - Eureka Eureka" என்னும் இப்பதிவின் முதல் பகுதியை படிக்க அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க

>> "யுரேகா ... யுரேகா - Eureka Eureka general knowledge - part 1."<<

யுரேகா - General knowledge.

 • இளம்பிள்ளை வாதத்திற்கான (போலியோ)  தடுப்பூசியை கண்டுபிடித்தவர் - ஜோன்ஸ் சால்க். [Jonas salk].
 • இளம்பிள்ளை வாதத்திற்கான( போலியோ) சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் சாபின். [Albert Sabin].
 • போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் - ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி. (Hilary Koprowski).
 • இரத்த ஒட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வி. (William Harvey).
 • ரேடியத்தை கண்டுபிடித்தவர் - மேடம் கியூரி. (Marie Curie).
General knowledge madame curie
 • கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் - லிக்னோஸ்.
 • எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்தவர் - ராண்ட்ஜன். (Roentgen).
 • மின்தடையை கண்டுபிடித்தவர் - ஓம். (Georg Simon Ohm).
 • C - என்னும் கம்ப்யூட்டர் மொழியை கண்டுபிடித்தவர் - டென்னிஸ் ரிட்சி. (Dennis Ritchie).
 • கனநீரை கண்டுபிடித்தவர் - யூரி.
 • கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் - கெப்ளர். (Kepler).
General knowledge Kepler
 • வெப்பநிலைமானியை கண்டுபிடித்தவர் - சிக்ஸ்.
 • காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் - ரோஸ்.
 • இடிதாங்கியை உருவாக்கியவர் - பெஞ்சமின் பிராங்க்ளின். (Benjamin franklin).
 • ஒளியின் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி - ஓலி ரோமர். (Ole Romer).
 • சிமெண்ட் கண்டுபிடித்தவர் - ஜோசப் ஆஸ்ட்டின் - பிரிட்டன்.
"யுரேகா யுரேகா - Eureka Eureka" என்னும் இப்பதிவின் மூன்றாவது பகுதியை படிக்க அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க.


💞💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.