"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பொது அறிவு வினா - விடை. General Knowledge Quiz.

பொது அறிவு வினா - விடை. General Knowledge Quiz.

General Knowledge Quiz.

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப யுகம். எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அறிவியல் சார்ந்த மற்றும் சாராத சில அடிப்படையான பொது அறிவு பற்றிய தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். 

எனவே இந்த பதிவில் காலத்தின் தேவை கருதி சில பொது அறிவு விஷயங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பொது அறிவு வினா - விடை.

  • நியூட்ரான் இல்லாத அணு - ஹைட்ரஜன்.(Hydrogen).

  • உலகிலுள்ள நாடுகளின் தேசிய கொடிகளில் அதிக அளவில் இடம்பிடித்துள்ள நிறம் எது - சிவப்பு.

  • நிலைக்காந்தம் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் உலோகம் - எஃகு.

  • செயற்கைப்பட்டு என்று அழைக்கப்படுவது - ரேயான்.

  • அணுவை பிளக்க பயன்படும் சாதனம் - ''சைக்ளோட்ரான்''. (Cyclotron).

General Quiz

  • உலகின் மிக பெரிய பாலைவனம் - சகாரா. (Sahara)இது ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ளது.

  • ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவனம் - தார் பாலைவனம். (Thar desert).

  • ஆங்கில கால்வாயின் நீளம் - 564 கி.மீட்டர்.

  • லட்சத்தீவுகளில் உள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கை - 27 தீவுகள்.

  • இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடைய தாவரம் - குளோமிடோமானஸ்.

  • பேனா முனை (நிப்பு) தயாரிக்கப் பயன்படும் உலோகங்கள் - ஆஸ்டியம், இரிடியம்.
  • 13 நாடுகளின் எல்லையை கொண்ட ஒரே நாடு - சீனா. (China).

  • நீரில் கரையாத அதே வேளையில் கார்பன் டை சல்பைடுவில் கரையும் பொருள் எது - கந்தகம். (Sulphur).
  • காஸ்மிக் வருடங்கள் என்பது எத்தனை ஆண்டுகள் - 25 கோடி ஆண்டுகள்.

  • சூரியனின் வெப்பநிலை - 1 கோடியே 40 லட்சம் டிகிரி செல்சியஸ்.

  • ஹைட்ரஜன் குண்டின் தத்துவம் - அணுக்கரு இணைவு. (Nuclear fusion).
  • மிக அதிகமாக  ஊடுருவும் ஆற்றல் கொண்ட கதிர் - காமா கதிர்.

  • இரும்பைப்போல் காந்தசக்தி கொண்ட மற்றொரு உலோகம் - நிக்கல்.

  • புல்லட் புரூப் உடைகள் தயாரிக்கப் பயன்படும் பொருள் - கெவ்லார் என்னும் செயற்கை இழை.

  • செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் - ஹென்றி டுனான்ட்.

  • கண்ணாடியோடு நன்கு ஒட்டும் தன்மையுடைய உலோகம் - குரோமியம்.

  • புத்தர் வாழ்ந்த காலம் - கி .மு 6 ம் நூற்றாண்டு.

  • இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆரியபட்டா. (Aryabhata).

Aryabhata

  • பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும்போது வெளிப்படும் நச்சுப்புகை - டையாக்சின். (Dioxin).

  • உலகில் முதன் முதலாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய விண்வெளி வீரர் - யூரிகாகரின்.

  • சோகத்தை குறிக்கும் ராகம் - முகாரி.

  • ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது - ரோம்.

  • உலோகங்களில் மிகச்சிறந்த மின்கடத்தியாக திகழும் உலோகம் - வெள்ளி.

  • செல் சுவாசித்தல் நிகழ்த்தும் உறுப்பு - மைட்டோ காண்டிரியா.

இதுபோன்ற பல பொது அறிவுசார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>>"நான் வளர்கிறேனா மம்மி - Childrens age and growth health."<<

💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்