"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சுற்றுதே சுற்றுதே பூமி ..... Orbital Periods of the Planets.

சுற்றுதே சுற்றுதே பூமி ..... Orbital Periods of the Planets.

Orbital Periods of the Planets.

''சுற்றுதே சுற்றுதே பூமி - இது போதுமடா போதுமடா சாமி''..

அண்மையில் வெளிவந்த அருமையான பாடல். காதலை கவிபாடும் கவிஞர்களுக்கு இது போதுமானது. ஆனால் அண்டத்தின் புதிர்களை அறிய துடிக்கும் நமக்கு சுற்றும் பூமியைப் பற்றி மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா?.. நிச்சயம் போதாது..  9 - Planets.

  இங்கு பூமி மட்டுமா சுற்றுகிறது?... விண்வெளியில் நிறைந்து காணப்படும் கோடானுகோடி நட்சத்திரங்கள் [சூரியன்] உட்பட அனைத்து அண்ட பேரண்டங்களும் அசுரத்தனமான வேகத்துடன் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

  அண்டம் முழுமையும் அறியும் ஆற்றலை இன்னும் விஞ்ஞானம் பெறவில்லை எனினும் நம் சூரிய குடும்பத்தை பற்றி ஓரளவு அறிந்து கொள்ளும் திறனை அறிவியல் உலகம் பெற்றுள்ளது. அந்த திறனை அடிப்படையாகக் கொண்டு நம் சூரிய மண்டலத்திலுள்ள கோள்களின் சுற்றும் விபரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

  புதன்.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 5.8 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 88 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 59 நாட்கள்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - இல்லை.

  வெள்ளி.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 10.8 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 225 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 243 நாட்கள்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - இல்லை.

  பூமி.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 14.9 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 365¹/₄ நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 24 மணி நேரம்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 1.

  செவ்வாய்.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 22.8 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 1 வருடம் 322 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 24 மணி 37 நிமிடம்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 2.

  வியாழன்.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 77.8 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 11 வருடம் 315 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 9 மணி 55 நிமிடம்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 16.

  சனி.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 142.7 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 29 வருடம் 167 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 10 மணி 14 நிமிடம்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 52.

  சனியின் துணைக்கோள் 52 என வகைப்படுத்தப்பட்டாலும் இவைகளில் பல கோளம் போன்ற தன்மை அற்றவை. விண்கற்கள் போன்ற வடிவினை பெற்றுள்ளன.

  யுரேனஸ்.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 287 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 84 வருடம் 7 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 10 மணி 48 நிமிடம்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 5.

  நெப்டியூன்.

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 449.7 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 164 வருடம் 289 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 15 மணி 40 நிமிடம்.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 2.

  புளூட்டோ.

  அண்மையில் விஞ்ஞானிகள் புளூட்டோ கிரகத்திற்கு கோள்களுக்கான சில அடிப்படை தன்மைகள் இல்லை என்று கூறி கோள்களின் லிஸ்ட்டில் இருந்து அதை தூக்கிவிட்டனர்.. ஐயோ பாவம் .. 

  ஆனால், அவர்கள் கைவிட்டாலும் நாம் கைவிடுவதாக இல்லை. எனவே புளூட்டோவைப் பற்றியும் இங்கு பார்ப்போம்..

  சூரியனிலிருந்து சராசரி தூரம் - 590 கோடி கி . மீ.

  சூரியனை சுற்றிவரும் கால அளவு - 248 வருடம் 255 நாட்கள்.

  தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 6 நாள் 9 மணி.

  துணைக்கோள்களின் (சந்திரன்) எண்ணிக்கை - 1.

  ❤❤❤❤❤❤

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.