"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சூரியன் - Sun star.

சூரியன் - Sun star.

சூரியன்.

Sun star.

ஞாயிறு, சூரியன், கதிரவன், பகலவன், அனலி, வெய்யோன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சூரியன் ஒரு விண்மீன் ஆகும்.

பூமியின் இயக்கத்திற்கும், உயிர்வாழ்விற்கும் ஆதாரமாக இருப்பது சூரியன். இது பூமியைப்போல் திட நிலையில் உள்ள கோள் அல்ல. வாயுக்களாலான ஒரு எரியும் நட்சத்திரம். இது கோள வடிவம் கொண்ட உருகிய நிலையிலுள்ள ''பிளாஸ்மா''.

அண்டவெளியில் நம்முடைய சூரியனைப்போன்று சிறியதும் பெரியதுமாக எண்ணிலடங்காத விண்மீன்கள் உள்ளன. இவ்வாறு கோடிக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய விண்மீன் கூட்டத்திற்கு ''கேலக்ஸி'' (Galaxy ) என்று பெயர். இதைப்போல கோடிக்கணக்கான கேலக்ஸிகள் அண்டவெளியில் உள்ளன.

நம் சூரியனையும் சேர்த்து கோடிக்கணக்கான சூரியன்களை கொண்ட கேலக்ஸிக்கு ''பால்வீதி'' (Milky way ) என்று பெயர்.

நம்முடைய பால்வீதியில் 40,000 கோடி சூரியன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் நம் சூரியன் ஒரு ஓரத்தில் அமைந்துள்ளது. பால்வீதியின் மையம் நம் சூரியனிலிருந்து 27,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

Milky Way colony and milkyway

பூமி சூரியனை சுற்றிவருவது போல் சூரியனும் பால்வீதியிலுள்ள (Milky wa) மையத்தை கருப்பொருளாகக் கொண்டு நீள்வட்டப்பாதையில்  சுற்றி வருகிறது. அவ்வாறு இது சுற்றிவரும் வேகம் என்ன தெரியுமா? 1 செகண்டிற்கு 250 கி .மீ.. அம்மாடியோவ் !!!

அவ்வாறு பால்வீதியை ஒருதடவை இது சுற்றிவர சுமார் 225 முதல் 250 மில்லியன் வருடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியெனில் அந்த பால்வீதியின் பரப்பளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள் !!!.

அவ்வாறு சுற்றும்போது பூமி உட்பட சூரியகுடும்பத்திலுள்ள அத்தனை கோள்களையும் தன்னோடு இழுத்துக்கொண்டேதான் சுற்றிவருகிறது.

பூமி சூரியனை சுற்றிவரும் வேகம் என்ன தெரியுமா? 1 செகண்டிற்கு 29.783 கி.மீ..

ஆக மொத்தத்தில் புளி மூட்டை போல நாம் ஒரே இடத்தில் அமைதியாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் சூரியனுடைய வேகத்தோடு பூமியின் வேகத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் செகண்டிற்கு 279 கி.மீ. க்கும் அதிகமான வேகத்தில் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல நம்முடைய "மில்கி வே" கேலக்ஸி போல இன்னும் பல கேலக்ஸிகள் உள்ளன என்று சொன்னேன் அல்லவா? அத்தனை கேலக்ஸிகளும் ஒன்று சேர்ந்து தொலைதூரத்திலுள்ள வேறொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு அசுரத்தனமான வேகத்தில் சுற்றிவருகின்றன.

இதன் வேகத்தை விஞ்ஞானிகளால் இன்னும்  கணிக்க முடியவில்லை. ஏனெனில் அப்படியொரு தலைதெறிக்கும் வேகம். மேற்குறிப்பிட்ட 279 கி.மீ. வேகத்தோடு இந்த வேகத்தையும் சேர்த்து நாம் பயணிக்கும் வேகத்தைக் கணக்கிட்டோம் என்றால் மயக்கமே வரும்!!

சூரியனை முன்பு 9 கோள்கள் சுற்றி வந்தன. ஆனால் இப்போது 8 கோள்கள்தான் சுற்றி வருகின்றன. 1 கோள் என்ன ஆனது என்கிறீர்களா? அது என்னவோ அதே இடத்தில் இருந்து சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது ஆனால் பதவிதான் பறிபோய் விட்டது.

பதவியை இழந்து இப்போ ''ஙே'' என்று முழித்துக்கொண்டு இருப்பது வேறு யாருமல்ல நம்ம ''புளூட்டோ '' கிரகம்தான்.

ஆம்.. நம்முடைய பாராளுமன்றத்தில் நடப்பதுபோல இங்கும் விஞ்ஞானிகளுக்கிடையே ஏக குழப்பம்.. அதனால் முன்பு MP யாக இருந்தது இப்போ MLA!..

விஞ்ஞானிகள் எல்லோரும் ஒன்றுகூடி MP யாக இருந்த புளூட்டோவை இப்போது MLA வாக தகுதியிறக்கம் செய்து விட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கோள்களுக்கான சில அடிப்படையான தகுதிகள் இல்லையாம். அளவும் ரொம்ப சிறுத்து போச்சாம். (பின்ன, MP யாக இருப்பதற்கு ஒரு கெத்து வேண்டாமா?) எனவே அதை ''சிறுகோள்கள்'' என்கிற வரிசையில் வைத்திருக்கிறார்கள்.

Sun star court1

Sun star court2

இதுதவிர ''சேத்னா'' (Sedna ) என்னும் சிறுகோளும் சூரியனை சுற்றி வருகிறது. இது சூரியனிலிருந்து 930 கோடி மைல்கள் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும்மேல் எடுத்துக்கொள்கிறது.

Sedna

சூரியனில் இருக்கும் மிக முக்கியமான பொருட்கள் இரண்டு.. ஒன்று ஹைட்ரஜன் மற்றொன்று ஹீலியம். இதுமட்டுமல்ல இன்னும் சில தனிமங்களும் வாயுக்களும் அடங்கியுள்ளன. சூரியனில் அடங்கியுள்ள தனிமங்களை பற்றி பார்ப்போம்,

சூரியனில் அடங்கியுள்ள தனிமங்களின் விவரம்.

TAMIL ENGLISH Percent
ஹைட்ரஜன் Hydrogen 73.46 %
ஹீலியம் Helium 24.85 %
ஆக்சிஜன் Oxygen 0.77 %
கார்பன் Carbon 0.29 %
இரும்பு Iron 0.16 %
நியான் Neon 0.12 %
நைட்ரஜன் Nitrogen 0.09 %
சிலிக்கான் Silicon 0.07 %
மெக்னீசியம் Magnesium 0.05 %
கந்தகம் Sulfur 0.04 %

சூரியனின் வெளிப்புறம் 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன..

  1. போட்டோஸ்பியர் (Photosphere).
  2. குரோமோஸ்பியர் (Chromosphere)
  3. கொரோனா (Corona)

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் 14.6 கோடி கி. மீட்டர். சூரியனிலிருந்து ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன.

சூரியனின் மையத்திலுள்ள வெப்பம் எவ்வளவு தெரியுமா? 15 × 10 ⁶ கெல்வின். அதாவது 1.5 கோடி டிகிரி செல்சியஸ்..

சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பம் 5800 கெல்வின். சுமார் 5,700 டிகிரி செல்சியஸ்.

பூமி தன்னைத்தானே சுற்றுவது போல சூரியனும் தன்னைத்தானே சுற்றுகிறது. சூரியன் தன்னைத்தானே சுற்றும் கால அளவு சராசரியாக 25 நாட்கள்.

பூமியின் நிறையோடு சூரியனை ஒப்பிட்டால் 13,000,00 (13 லட்சம் ) பூமிகளை உள்ளே அடக்கிவிடலாம். அவ்வளவு பிரமாண்டம்.

அடேங்கப்பா!  இவ்ளோ பெருசா என்று பெருமூச்செல்லாம் விடாதீர்கள்.. ஏனெனில் அண்டவெளியில் நம்முடைய சூரியனை விட பெரிய சூரியன்கள் கோடிக்கணக்கில் உள்ளன. ''Betelgeuse'' என்னும் சூரியனானது நம்முடைய சூரியனைவிட 700 மடங்கு பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Betelgeuse with sun

எனவே நம்முடைய சூரியனை நடுத்தரமான அளவுடையது என்று சொல்லலாம். ஏனெனில் நம்முடைய சூரியனைவிட அளவில் சிறிய சூரியன்களும் ஏராளமாக உள்ளன.

நம் சூரியனின் சராசரி ஆரம் 6,96,000 கிலோமீட்டர்கள். இதன் எடை பூமியைவிட 330,000 மடங்கு அதிகம்.

இவ்வளவு நிறையுள்ளதால் ஈர்ப்புவிசையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் சூரியனின் மையத்தில் அதிக அளவில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக  மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அளவு அழுத்தமும் வெப்பமும் அடைகிறது.

இதனால் அங்கு அணுக்கரு பிணைவு ஏற்பட்டு ஒளியையும் வெப்பத்தையும் ஏற்படுத்துவதோடு வாயுக்களையும் மிகுந்த அழுத்தத்தோடு வெளிநோக்கி தள்ளுகிறது. அவ்வாறு வெளிநோக்கி தள்ளப்படும் வாயுக்களை சூரியனின் மைய ஈர்ப்புவிசை மீண்டும் உள்நோக்கி இழுக்கிறது. இவ்விரு வினைகளும் தொடர்ந்து நடந்துவருவதால் சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் இது மாறுபடும் வலுவான காந்தப்புலத்தையும் கொண்டுள்ளது.

அணுக்கரு பிணைவு மூலம் சூரியனின் மையக்கருவிலுள்ள ஹைட்ரஜன் முற்றிலுமாக எரிந்து அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டபின் சூரியனின் மேல் அடுக்கிலுள்ள ஹைட்ரஜன் வாயுவில் அணுக்கருபிணைவு நடைபெறும்.

அதன்பின் சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜன் மொத்தமும் தீர்ந்த பின் ஹீலியம் வாயு அணுக்கரு பிணைப்பிற்கு தயாராகும். அப்போது சூரியன் இப்போது இருக்கும் அளவைவிட 100 மடங்கிற்கும் அதிகமாக விரிவடைய ஆரம்பிக்கும். இந்த நிலையை ''பெரும் சிவப்பு அசுரன்'' ( Red Super Giant ) என்று பெயரிட்டு விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்நிலையில் சூரியன் அருகில் உள்ள கோள்களான புதன் மற்றும் வெள்ளியின் சுற்றுப்பாதைகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவிற்கு பெரிதாகி விடும்.

இதனால் அதன் நிறை அதிகரித்துக் கொண்டே செல்ல ஈர்ப்பு விசையும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் எடை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இந்நிகழ்வையே விஞ்ஞானிகள் ''சூப்பர் நோவா'' (Supernova ) என அழைக்கின்றனர்.

நம்முடைய சூரிய மண்டலமும் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இதே போன்றதொரு சூப்பர் நோவா போன்ற நிகழ்வின் மூலம் வெடித்து சிதறியதின் மிச்சங்கள்தான்.

மேலும் சூரியனைப்பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. ஆகா.ஆகா..இங்கே கொளுத்துகிறதிலேயிருந்து சூரியனின் பவரை புரிந்து கொண்டேன் ஜட்ஜ்மென்ட் அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலிப்போக்கன் .... தங்கள் வருகைக்கும், புரிதல்களுக்கும் மிகுந்த மகிழ்வும் நன்றியும் நண்பரே !!!.

      நீக்கு
  2. பயனுள்ள தகவல்கள்.சுவாரசியமாகவும் விவரித்துள்ளீர்கள். தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே! தங்கள் வருகைக்கும், உங்களின் எண்ண ஓட்டங்களை இங்கு பதிவு செய்தமைக்கும் நன்றி !!!

      நீக்கு


  3. ஜட்ஜ்மென்ட் சிவா.இந்தப் பெயருக்கு ஏதாவது காரணம் உண்டா? நீங்க நீதித்துறையில் இருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ... ஜோதிஜி சார்... தாங்கள் என் வலைப்பக்கம் வருகை தந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது .... தற்சமயம் நான் அறிவியல் ஆராய்ச்சி துறையில் கவனம் செலுத்துகிறேன் ... வருகைக்கு நன்றி!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.