header ads

header ads

தத்துவ முத்துக்கள். Philosophy in Tamil.

Philosophy in Tamil.

          "தத்துவம்" என்றால் என்ன என்று நமக்குள் ஒரு சந்தேகம் எழலாம். நம் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் விதமாக தத்துவத்திற்கு எளிமையாக இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது.

Philosophy in Tamil


          அது இன்னான்னா,  கேட்பவர்களுக்கு புரியவில்லையெனில் அது "தத்துவம்" என்றும் .... சொல்பவருக்கும் அது புரியவில்லையெனில் அது "மகா தத்துவம்" என்றும் சொல்லப்படுகிறது.

          ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தத்துவங்கள் யாவும் எளிதில் புரியும்வண்ணம் உள்ளதால் இவைகளை எந்த வெரைட்டியில் சேர்ப்பது என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .... ஒருவேளை இவைகளை "ஜென்' தத்துவத்தில் சேர்த்துவிடலாமோ ?? 😙😙😙.. !!!. 

Philosophy in Tamil jen thathuvam

துணிந்தவனும் பணிந்தவனும் ...

 • கிட்டாதாயின் வெட்டென மற.
 • சோம்பல் கொண்டார் வாழ்வு சாம்பல் ஆகும்.
 • நூல் அறிவே ஆகுமாம் நுண்ணறிவு.
 • வாசிப்பு உன் சுவாசிப்பாக இருக்கும் வரையில் உன் ஆன்மா அழிக்கப்படுவதில்லை.
 • சொல்பவரின் ஆர்வம் , கேட்பவரின் கொட்டாவியால் கெடும்.
 • வாழ்க்கை என்பது வண்ணங்களில் இல்லை, உங்கள் எண்ணங்களில் உள்ளது.
 • உழைப்பு உன்னை சாக விடாது . கவலை உன்னை வாழ விடாது.
 • உள்ளத்தை விழிக்கச் செய் ... உணர்ச்சியை உறங்கச் செய் ... வெற்றி நிச்சயம்.
 • மாற்றங்களால் பட்டை தீட்டப்பட வேண்டுமெனில் , ஏமாற்றங்களை சட்டை செய்யாதே ...
 • முயன்றால் முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் .. ஆனால் முயலாமை வெல்லாது.
 • உன் வாழ்க்கையை வெளிச்சமாக்கிக் கொள், ஏனெனில் இருட்டில் உன் நிழல் கூட உன்னை பின்தொடர்வதில்லை.
 • தோல்வியில் தைரியமும் , வெற்றியில் பணிவும் உன்னை வழிநடத்தும்.
 • மூச்சு நின்றால் மரணம் , அது உன் முயற்சி நின்ற தருணம்.
 • வாதிப்பவனை விட சாதிப்பவனே மேன்மையானவன். 
 • நல்ல எண்ண விதைகளை இன்றே மனதில் விதைத்து விடுங்கள் ... நாளை ஆலவிருட்சமாக நீங்கள் வளர இதுவே சிறந்த வழி.
 • அலட்சியம் உன் லட்சியத்தை வேரறுக்கும்...
 • துயரத்தை எவனொருவன் திறமையாக கையாள்கிறானோ, அவனே உயரத்தை எளிதாக தொடும் திறமையை பெறுவான்.
 • துன்பத்தை கடந்து வந்த பாதையை மறந்து விடலாம் ஆனால் அது கற்று தந்த பாடத்தை மறக்காதே.
 • இழப்பதற்கு உன்னிடம் ஒன்றுமே இல்லை, ஆனால் கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது என்பதை புரிந்து கொள்.
 • மாற்றங்களே உனது வாழ்வில் சில ஏமாற்றங்களை தள்ளிப் போடும்.
 •  கண்மூடித்தனமான நம்பிக்கையும் வாழ்க்கையும் விரைவில் மண்மூடிப்போகும்.
 •  உனக்கு வரும் துன்பங்களே இந்த உலகத்தை உன் கண்களின் முன்னால் தோலுரித்துக் காட்டும்.
 • துணிந்தவன் தரணி ஆள்வான். பணிந்தவன் பார் ஆள்வான்.
 • உதிர்ந்து போன பூக்களுக்காக கண்ணீர் விடுவதைவிட, மலர்ந்து இருக்கும் பூக்களுக்காக தண்ணீர் விடுவது மேல்.
 • உன் முயற்சிக்கு எது தடைக்கல்லாக இருக்கிறதோ அதை வாழ்வின் படிக்கல்லாக்க முயற்சி செய்.
 • சத்தியத்தின் வழிநடந்தால் அசாத்தியமும் சாத்தியமாகும்.

          தத்துவம் சொல்லி அலுத்துப்போச்சி கடைசியா ஒரே ஒரு '' பன்ச் '' டயலாக்  - 

          ''ஒரு எறும்பு நெனச்சா ஆயிரம் யானைகளை கடிக்கலாம் ...ஆனா ஆயிரம் யானைகள் நெனச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது'' ..... 

          கொய்யால ..  எறும்புன்னா சும்மாவா.... 😂😃😄!

          தத்துவ முத்துக்களைப்பற்றி அறிந்துகொண்ட நீங்கள் புதுமையான பழமொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டாமா ? ... அறிந்துகொள்ள 👉 இங்கு கிளிக்குங்க.


கருத்துரையிடுக

0 கருத்துகள்