வெள்ளி - பயோடேட்டா - Venus bio data.

Venus - biodata.

பெயர் காரணம் :- வானத்தில் அண்ணாந்து பார்த்தால் நிலவைவிட பன்மடங்கு பிரகாசமாக வெண்மையாக வெள்ளிபோல் பிரகாசிப்பதால் '' வெள்ளி '' என பெயர் பெற்றது. 

venus bio data

          வட இந்திய மொழிகளில் இதற்கு ''சுக்கிரன்'' என்று பெயர். அசுரர்களின் குரு சுக்கிரன். அவரின் பெயர் இதற்கும் வைத்து விட்டார்கள்.

          இதற்கு ''வீனஸ்'' ( Venus ) என்றொரு பெயருமுண்டு. காதல் மற்றும் அழகுக்கான ரோமானியர்களின் பெண் கடவுள் வீனஸ். எனவே அவரின் பெயரால் இதற்கு வீனஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.

வெள்ளி - பயோடேட்டா.

மேற்பரப்பு வெப்பம் 462 ⁰ C. ( 863 ⁰ F ).

சூரியனை சுற்றும் வேகம்  - 35.02 km /s .

சூரியனை சுற்றும் கால அளவு -224.7 நாட்கள்.

சுழற்சி திசைவேகம் - 6.52 Km /h.

விடுபடு திசைவேகம் - 10.36 Km /s. 

வெள்ளியின் சராசரி ஆரம்   - 6,051.8 ± 1.0 km.

வெள்ளியின் அரை விட்டம் - 108,208,000 கி . மீ.

சுழல் அச்சு சாய்வு கோணம் - 2.64⁰

வெள்ளியின் எடை  - 4.8675 x 10²⁴Kg.

கன அளவு - 9.2843 x 10¹¹ Km³

வெள்ளியின் சராசரி அடர்த்தி  - 5.243g/cm³.

புறப்பரப்பு - 4.6023 x 10⁸ Km² 

வளிமண்டல அழுத்தம் - பூமியை விட 92 மடங்கு அதிகம்.

துணைக்கோள் - இல்லை.

வெள்ளியில் அடங்கியுள்ள பொருட்கள் - கந்தகம் மற்றும் பல பொருட்கள் அடங்கியுள்ளன.

வெள்ளியின் சிறப்பு.

          சூரியனுக்கு அண்மையில் உள்ள கோள்களில் இதற்கு இரண்டாவது இடம். கோள்களிலேயே மிகவும் வெப்பமானது. பூமியை விட கொஞ்சூண்டு சிறியது.

தன்மை.

          இது பாறைகளால் ஆன கோள். எரிமலைகள் நிறைந்தது. காந்தப்புலம் இல்லை. மிக மிக குறைந்த அளவில் காந்த மண்டலம் காணப்படுகிறது.

சூரியனிடமிருந்து தொலைவு.

          கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்பது உங்களுக்கு தெரிந்ததே. இது சூரியனின் அருகில் வரும்போது 107,477,000 கிலோமீட்டர் தொலைவிலும், சூரியனிலிருந்து விலகி செல்லும் போது 108,939,000 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றி வருகிறது.

தன்னைத்தானே சுற்றும் கால அளவு.

          மிக மெதுவாக சுற்றுகிறது. 243 பூமி நாட்கள். அதாவது வெள்ளியின் ஒருநாள் என்பது பூமியின் 243 நாட்களுக்கு சமம்.

venus_bio_data

தன்னைத்தானே சுழலும் திசை.

          கிழக்கிலிருந்து மேற்காக தன்னை தானே சுற்றி வருகிறது. மற்ற கோள்கள் எல்லாம் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும் வேளையில் வெள்ளியும், யுரேனஸும் இதற்கு விதிவிலக்கு. இவ்விரு கோள்களிலும் சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். 

நடுக்கோட்டில் பகல் நேர வெப்பநிலை.

          சூரிய குடும்பத்திலேயே அதிக அளவு வெப்பத்தை கொண்டது வெள்ளிதான். சுமார் 480 பாகை செல்சியஸ் வெப்பம். காரீயத்தை கூட கணநேரத்தில் உருக வைக்கக்கூடியது. சூரியனின் மிக அருகில் உள்ள கிரகமான புதனில்கூட இவ்வளவு வெப்பம் இல்லை!.

          சூரியனிலிருந்து புதனைவிட இருமடங்கு தொலைவில் இருந்தாலும் புதனைவிட இருமடங்கு அதிக வெப்பம் வெள்ளியில் உள்ளது. எல்லாமே இந்த கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) செய்கிற சூழ்ச்சி.

வளிமண்டலம்.

          இதன் வளிமண்டலம் மிக அடர்த்தி நிறைந்தது. இதன் வளிமண்டலம் 96 % கார்பன்டை ஆக்ஸைடு கொண்டுள்ளது. 3.5 %  நைட்ரஜனும் உள்ளது. மேலும் சிறிய அளவில் கந்தக டை ஆக்ஸைடு, ஆர்கான், கார்பன் மோனாக்சைடு, ஹீலியம், நியான் மற்றும் ஹைட்ரஜன் ப்ளோரைடு உள்ளன.

venus_biodata

          அடர்த்தியான கந்தக வாயு மேகங்களாக படர்ந்துள்ளது. எனவே வெள்ளியின் மேற்பரப்பை தெளிவாக காணமுடிவதில்லை. இந்த மேகங்கள்தான் 75 % திற்கும் மேல் சூரிய ஒளியை பிரதிபலிக்கின்றன. எனவேதான் வெள்ளி கிரகம் அத்துணை பிரகாசமாக ஜொலிக்கிறது.

 உயிரின  வாழ்க்கை.

          வாய்ப்பில்லை. வெள்ளி உண்மையில் அழகுதான். எட்டி இருந்து அதன் அழகை ரசியுங்கள். கட்டிப்பிடிக்கவெல்லாம் ஆசைப்படாதீர்கள். ஏனெனில் இங்கு கந்தக மேகங்கள் நிறைந்துள்ளன. கந்தக மழைக்கும் பஞ்சமில்லை. கந்தகத்தை குடித்து உயிர்வாழ முடியும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஒரு மினி டூர் போடலாம்.

          மேலும் வெள்ளிக்கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க... >> வெள்ளி கிரகம் - venus planet <<


கருத்துரையிடுக

0 கருத்துகள்