வியாழன் - பயோடேட்டா - Jupiter bio data.

Jupiter bio data.

பெயர் காரணம் :-  ''வியா'' என்றால் பெரிய என்று பொருள். ''வியாபித்தல்'' என்றால் பெரிய அளவில் பரவுதல் என்று பொருள்படும். நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவே மிகப்பெரியது என்பதால் இதற்கு வியாழன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Jupiter bio data

வியாழன்  - பயோடேட்டா.

          சோதிடத்தில் இதற்கு ''குரு'' கிரகம் என்று பெயர். வானியலில் இதற்கு ''Jupiter'' என்று பெயர்.

சூரியனிடமிருந்து தொலைவு  - 77 . 83 கோடி கி . மீ.

சூரியனை சுற்றும் வேகம்  - 13.07 Km/s.

சூரியனை சுற்றும் கால அளவு - 11 ஆண்டுகள் 10 மாதங்கள். 

தன்னைத்தானே சுற்றும் கால அளவு  - 9 மணி 50 நிமிடம். ( நொடிக்கு 8 மைல் வேகம் )

தற்சுழற்சி வேகம் - வினாடிக்கு 13 . 06 கி . மீ.

விடுபடு திசைவேகம் - 59.5 Km /s. 

வியாழனின்  சராசரி ஆரம்   - 69,911 ± 6 Km.

வியாழனின் நடுவரை ஆரம் - 71,492 ± 4 Km.

வியாழனின் விட்டம் (நிலநடுக்கோடு வழியாக ) - சுமார் 142,984 கி.மீ. (88,846 மைல்) பூமியைப் போல் சுமார் 11 மடங்கு அதிக விட்டத்தை கொண்டது.

வியாழனின் துருவ விட்டம் (வட தென் துருவம் வழியாக ) - 83,000 மைல். 

சுழல் அச்சு சாய்வு கோணம் - 2 ⁰ சாய்வு கோணத்தில் சூரியனை சுற்றி வருகிறது.

காந்தப்புல வலிமை - நமது சூரிய குடும்ப கோள்களில் இதுவே மிக அதிக காந்தபுல வலிமை கொண்டது.

வியாழனின் எடை  - 1.8986 x 10²⁷ Kg. ( பூமியைப்போல் 318 மடங்கு அதிக எடைகொண்டது)

கன அளவு - 1.4313 x 10¹⁵Km³.

வியாழனின் சராசரி அடர்த்தி  - 1.326 கி/செ.மீ ³.

மேற்பரப்பு ஈர்ப்பு விசை - பூமியின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிட்டால் வியாழனின் ஈர்ப்பு விசை 2 . 5 மடங்கு அதிகம்.

வியாழனில் அடங்கியுள்ள பொருட்கள் - பலவிதமான தனிமம் மற்றும் பாறைகள் அடங்கியுள்ளன.

வளிமண்டலம் - ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன், அமோனியா, ஈத்தேன், நீர். 

வியாழனின்  சிறப்பு.

          நமது சூரியமண்டலத்தில் அமைந்துள்ள 5 - வது கிரகம். நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் மிகப்பெரியது இதுவே. சனிக்கிரக வளையம் போல் இதற்கும் வளையம் உண்டு. ஆனால் தெளிவாக தெரிவதில்லை.

          இதன் மேற்பகுதியில் பல கிலோமீட்டர் உயரத்திற்கு வாயுக்களே சூழ்ந்துள்ளதால் இது ''வாயுக்கோளம்'' என அழைக்கப்படுகிறது.

தன்மை.

          தன்னைத்தானே வேகமாக சுற்றி வருகிறது. துருவப்பகுதிகள் சிறிது தட்டையானது. பருவகால மாற்றங்கள் நிகழ்வதில்லை.

Jupiter bio data cloud

துணைக்கோள்கள்.

          துணைக்கோள்கள் ஒன்றிரண்டல்ல சிறியதும் பெரியதுமாக 79 துணைக்கோள்களை கொண்டுள்ளது. இதன் துணைக்கோள்களில் மிகப்பெரியது ''கனிமிட்''. இது புதன் கோளைவிட பெரியது. நம் சூரிய குடும்பத்திலுள்ள துணைக்கோள்களில் மிகப் பெரியது இதுதான்.

உயிரின  வாழ்க்கை.

          உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்றே தோன்றுகிறது. மனிதன் குடியேறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனெனில் எப்போதும் கடுமையான புயல்கள் வீசுகின்றன. இடி மின்னல்களுக்கும் பஞ்சமில்லை.

          அதனாலென்ன! நாங்கெல்லாம் பார்க்காத இடியா!! .. என்கிறீர்களா?   

Jupiter

          பூமியில் ஏற்படும் இடி மின்னல்களை விட வியாழனில் ஏற்படும் இடி மின்னல்கள் ஆயிரம் மடங்கு வலிமையானதாம்!!

jupiter lighting

          என்ன சத்தத்தையே காணோம்!

jupiter

          என்ன!!..  எழும்பி நின்னது இப்போ படுத்துக்கிச்சு!!.

          ம்ம்ம் .. இனியும் வியாழனுக்கு போக ஆசைப்படுவீங்க?.. 😁😁😁

          மேலும் வியாழன் கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க... >> வியாழன் கோள் - Jupiter Planet <<

கருத்துரையிடுக

0 கருத்துகள்