"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
வெள்ளி கிரகம் - venus planet.

வெள்ளி கிரகம் - venus planet.

venus planet.

நமது சூரிய குடும்ப வரிசையில் வெள்ளி கிரகத்திற்கு இரண்டாவது இடம். அதற்கு அடுத்தபடியாக நம் பூமி மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதை நம் பூமியிலிருந்து பார்க்கும்போது பளீரென்று வெண்மையாக வெள்ளி போல் பிரகாசிப்பதால் இதற்கு நம் முன்னோர்கள் ''வெள்ளி'' என்று பெயர் சூட்டியுள்ளனர்.


வெள்ளி கிரகம்.

இதற்கு ''சுக்கிரன்'' என்று மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குரு. மிக பொருத்தமாகவே பெயர் வைத்துள்ளார்கள் என்பதை இக்கட்டுரையின் முடிவில் தெரிந்து கொள்வீர்கள்.

அறிவியலாளர்கள் இதனை ''வீனஸ்'' ( Venus ) என அழைக்கின்றனர். அன்பு மற்றும் அழகுக்கான ரோமானிய பெண் கடவுளின் பெயர் "வீனஸ்". அதனால் இவரின் பெயரையே வெள்ளிக்கு சூட்டியுள்ளனர். சூரியன் மறையும் மாலைநேரத்தில் இது கண் சிமிட்டுவதால் இதற்கு ''ஈவ்னிங் ஸ்டார்'' என்று ஒரு பெயரும் உண்டு.

பூமியை விட வெள்ளி கொஞ்சூண்டு சிறியது. வெள்ளியின் குறுக்களவு பூமியின் குறுக்களவை விட 650 கிலோ மீட்டர் குறைவு. இதன் சராசரி ஆரம் 6,051 . 8 ± 1.0 Km. விட்டம் 108,208,000 கி.மீ. புற பரப்பளவு 4.6023× 10⁸ Km ².

வெள்ளியின் கன அளவு 9.2843 × 10¹¹ Km ³. சராசரி அடர்த்தி 5.243g /cm ³. இதன் எடை 4.8675 × 10 ²⁴ Kg. பூமியுடன் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் வெள்ளியானது 81.5 % எடை கொண்டது.

நமது சூரிய குடும்ப கோள்களில் மிக அதிகம் வெப்பமான கோள் இதுதான். இதன் புறவெளி அழுத்தமும் மிக அதிகம். இதன் வளிமண்டல அழுத்தம் 92 மடங்கு அதிகம்.. அம்மாடியோவ்.

சூரியனின் மிக அருகில் இருக்கும் கோள் புதன். இரண்டாவதாக இருக்கும் கோள் வெள்ளி. சூரியனிலிருந்து புதனைவிட இரண்டு மடங்கு அதிக தொலைவில் அமைத்துள்ளது. ஆனால் சூரியனின் மிக அருகில் இருக்கும் புதனை விட வெள்ளியில்தான் இருமடங்கு அதிக அளவில் வெப்பமானது உள்ளது. இதற்கு காரணம் கரியமில வாயுவால் வெப்பம் உள்ளுக்குள்ளேயே தக்கவைக்கப்படுவதே என தெரியவருகிறது.

venus

வெள்ளியின் புறவெளியானது 95% கரியமிலவாயுவால் நிரம்பியுள்ளது. வெள்ளியில் சாதாரணமாக நிலவும் வெப்பநிலையே 460 ⁰ C [ 860 ⁰ F ] ஆகும். இந்த வெப்பம் காரீயத்தை கூட கணநேரத்தில் உருக வைத்து விடும்.

இது பாறைகளால் உருப்பெற்றுள்ள கோள். இங்கு எரிமலைகளும் ஏராளமாக உள்ளன. இதற்கு பூமியைப்போல் காந்தப்புலம் இல்லை என்றாலும் மிக குறைந்த அளவில் காந்த மண்டலத்தை கொண்டுள்ளது.

இது சூரியனை வினாடிக்கு 35.02 km வேகத்தில் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சூரியனின் அருகில் வரும்போது 107,477, 000 கி . மீ தொலைவிலும், சூரியனிலிருந்து விலகி செல்லும்போது 108, 939, 000 கி . மீ தொலைவிலும் உள்ளது. சூழல் அச்சு சாய்வு கோணம் 2 . 64 ⁰ .

சூரியனை ஒரு முழு சுற்று சுற்றிவர 224.7 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது ஒருதடவை தன்னைத்தானே சுற்றிவர சூரியனை சுற்றும் நாட்களைவிட அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. 

ஆம்.. இது ஒருதடவை தன்னைத்தானே சுற்றிவர 243 நாட்கள் ஆகின்றன. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் வெள்ளியின் ஒரு நாள் என்பது நம் பூமியின் 243 நாட்களுக்கு சமம். அதாவது இங்கு 121 நாட்கள் பகலாகவும், 122 நாட்கள் இரவாகவும் இருக்கும். இதன் சுழற்சி வேகம் மணிக்கு 6. 52 கி.மீ. மட்டுமே.

சூரியனை சுற்றும் கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றும் அதே வேளையில் தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பது உங்களுக்கு தெரிந்ததே.. பெரும்பாலான கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத்தானே சுழன்றுவருகின்றன. ஆனால் வெள்ளியும், யுரேனசும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலுகின்றன. இந்த இரு கோள்களில் மட்டும் சூரியன் மேற்கில் உதிக்கும் , கிழக்கில் மறையும்.

வெள்ளிக்கு துணைக்கோள்கள் என்று எதுவும் கிடையாது.

இதன் வளிமண்டலத்தில் 95 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்துள்ளது. 3.5 சதவீதம் மட்டும் நைட்ரஜனை கொண்டுள்ளது. மிக சிறிய அளவில் கந்தக டை ஆக்ஸைடு, ஆர்கான், ஹீலியம், நியான், கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் புளோரைடும் உள்ளன.

வெள்ளியின் புறவெளியானது அடர்த்தியான கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டுள்ளன. இதனால் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது வெள்ளியின் தரைப்பகுதியை தெளிவாக பார்க்கமுடிவதில்லை. இந்த மேகங்கள் மூலம் சூரியனின் 75% ஒளி பிரதிபலிக்கப்படுகிறது. எனவேதான் வெள்ளி கிரகம் இங்கிருந்து பார்க்கும்போது மிகவும் பிரகாசமாக காட்சி தருகிறது.

இது சூரியன் மறையும் தருணத்தில் வான்வெளியில் மேற்கில் கண்சிமிட்டுவதைக் காணலாம்.

நம் பூமியில் சராசரியாக பெய்யும் மழையை விட இங்கு அதிக அளவில் மழை பொழிகிறது. பூமியில் மழையில் நனைந்தபடி காதல் ''டூயட்'' பாடுவது போல இங்கும் மழையில் நனைந்தபடி டூயட் பாடலாம் என்று விசிலடித்துக்கொண்டு கிளம்பினீர்கள் என்றால் உங்கள் காதல்.. கல்யாணத்தில் முடிவதற்கு பதிலாக கருமாதியில் முடிந்துவிடும்.

venus planet

ஏனென்றால், இங்கு பெய்வது கந்தக மழை.. அதாவது கந்தக அமிலம் மழையாகப் பொழிகிறது.. எலும்புகள் கூட உருகிவிடும். எனவே இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் பூமியில் மட்டும்தான் சாத்தியம்.

வெள்ளியை பற்றிய முக்கியமான தகவல்களை அறிந்துகொள்ள கிளிக்குங்க..


💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

 1. தலைப்பு சடக்குனு பார்த்தால் வெள்ளி கிராம் என்று நகைக்கடை போர்டு நினைவு வந்தது.

  முடிவு பகுதி படித்து எனது முடிவை மாற்றிக்கொண்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து கொண்டதற்கு நன்றி நண்பரே !!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.