"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
விலங்குகளும் பழமொழிகளும் - Vilangugal Palamoligal - Animals and proverbs.

விலங்குகளும் பழமொழிகளும் - Vilangugal Palamoligal - Animals and proverbs.

விலங்குகளும் பழமொழிகளும்.

Animals and proverbs.

மனித வாழ்வியலுக்கு தேவையான அரியக்கருத்துக்களை எளிதாக பிறருக்கு உணர்த்தவும், எளிதில் நினைவில் கொள்வதற்கும் நம் முன்னோர்கள்  நாட்டுப்புற பாடல்கள் வாயிலாகவும் , பொன்மொழிகள் என்னும் பழமொழிகள் வாயிலாகவும் ஆழமாக விதைத்து சென்றுள்ளனர்.

பல வகையான பறவைகளை மேற்கோள்காட்டி மனித வாழ்விற்கு தேவையான அரியவிஷயங்களை உள்ளடக்கிய பழமொழிகளை  பறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs. என்ற பதிவில் முன்பு பார்த்தோம். இப்பதிவில் பலவகையான விலங்குகளை மேற்கோள் காட்டி பகிரப்பட்டுள்ள பழமொழிகளைக் காண்போம்.

Vilangugalum Palamoligalum.

எலி வளையானாலும்.

  • சண்டிக்குதிரைக்கு நொண்டி சாரதி.
  • கோள் சொல்பவன் கொடுந்தேள்.
  • எருது புண் காக்கைக்கு தெரியுமா?
  • முயல் பிடிக்கிற நாய் எதுன்னு மூஞ்சியை பார்த்தா தெரியாதா?
  • துள்ளுகிற கழுதை பொதி சுமக்காது.
  • ஆசை இருக்கு தாசில் பண்ண, ஆனால் அதிர்ஷ்டம் இருப்பதோ கழுதை மேய்க்க.
  • பாம்புக்கு பால் வார்த்தாலும் திருப்பி நஞ்சுதான் தரும்.
  • பாம்பின் கால் பாம்பறியும்.
  • கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது போல்.
  • எள்ளு எண்ணைக்கு காய்கிறது, எலிப்புழுக்கை ஏன் கூடவே காய்கிறது?

  • எலி அழுதாலும் பூனை விடுமா?
  • வெளங்காத பயல வேலைக்கு வச்சா வெள்ளாடு கூட வெறிச்சிக்கிட்டு பாக்குமாம்.
  • சூடுகண்ட பூனை அடுப்பங்கரைக்கு வாராது.
  • அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா?
  • கொழுக்கட்டை தின்ற நாய்க்கு குறுணி மோர் என்ன குருதட்சணையா?
  • ஆடி கறக்கிற மாட்டை ஆடி கற, பாடி கறக்கிற மாட்டை பாடி கற.
  • இடையன் எருமை செத்துப்போச்சேன்னு அழுதானாம். அதை அடித்து தின்றவனோ கொழுப்பு பத்தலையேன்னு அழுதானாம்.
  • மேயுற மாட்டை கெடுத்துச்சாம் அதை நக்குற மாடு.
  • உழுகிறவன் இளப்பமானால் எருது "மச்சான்" முறை கொண்டாடுமாம்.

Animals and proverbs

  • வயல் அறுப்பு காலத்தில் நம்ம எலியாருக்கு அஞ்சு பெண்சாதிங்கோ.
  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  • நாய் விற்ற காசு குரைக்குமா? அல்லது மீன் விற்ற காசுதான் நாறுமா?
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன? . கழுதை மேய்ந்தால் என்ன?
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • நக்குகிற நாய்க்கு தெரியுமா செக்கு எது சிவலிங்கம் எது என்று?
  • பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
  • வர வர மாமி கழுதைபோல ஆனாள்.
  • கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்சலாமோ?
  • ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.

  • எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
  • அருமையற்றவன் வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • உழைத்து வாழாதவன் வாழ்க்கை கழுதை புரண்டெழுந்த நிலம்.
  • கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
  • காட்டுப்பூனைக்கு சிவராத்திரி விரதமா?
  • அசலூரில் ஆனை பிடிப்பதை விட உள்ளூரில் உடும்பு பிடிப்பது மேல்.
  • குங்குமம் சுமந்த கழுதை அதன் மணம் அறியுமா?
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்கு தேங்காய் கொண்டாட்டம். 
  • தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்காதே.
  • நாற்பதுக்கும் மேலே நாய்க்குணம்.
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்.

Animals and proverbs frog snake

  • குதிரையின் குணம் அறிந்தல்லோ தம்புரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே, எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே.
  • காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
  • பன்றிக்கு பின் போகும் கன்றும் கெட்டுத்தான் போகும்.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
  • புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
  • எறும்பு ஊர கல்லும் தேயும் .
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்.

  • உண்டு கொழுத்தால் நண்டு வளையில் தங்காது.
  • கெண்டையை போட்டு வராலை இழு.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • குரைக்கிற நாய் வேட்டைக்கு உதவாது.
  • நரிக்கு கொண்டாட்டம், நண்டுக்கு திண்டாட்டம்.
  • ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.
  • யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. வாழ்வு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே.
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
  • நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

Animals and proverbs the dog

  • நாய்க்கு ஒரு வேலையும் இல்ல. ஆனா அதுக்கு குத்த வைக்கத்தான் நேரமும் இல்ல.
  • கம்முன்னு கிடக்குமாம் நாய்... அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.
  • நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்.

இதுவரை விலங்குகளை மேற்கோள்காட்டி சொல்லப்பட்ட பழமொழிகளை பார்த்தோம். இதுபோல் இன்னும் பல விலங்குகளைப்பற்றிய பழமொழிகளை அறிந்துகொள்ள கிளிக்குங்க >> விலங்குகளால் துலங்கும் பழமொழிகள் - Animals Proverbs. <<

💥💥💥💥💥💥💥


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. ரசிக்க வைத்தன...

    //குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்//

    இதை வேறு வகையில் கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி !!!

      //குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்//

      இதை வேறு வகையில் கேட்டு இருக்கிறேன்.... ??? எந்த வகையில் ... எதாவது வில்லங்கமாக இருக்குமோ????

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி !!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.