header ads

header ads

முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 4.


               ஜின்னாவின் நெருங்கிய  நண்பரும் இந்தியாவில் மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்தின் நிர்வாகியும் மிகப்பெரிய பணக்காரருமானவர் ''தின்ஷா''. இவர் பார்சி இனத்தை சேர்ந்தவர்.

               தின்ஷா ஜின்னாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருடன் கலந்துரையாட அடிக்கடி ஜின்னா அவரின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
 பகுதி 3 ஐ படிக்க >> இங்கு கிளிக்குங்க <<

               அவ்வாறு ஒரு நாள் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவருடைய ஒரே மகளான ''ரத்தன்பாய்'' யை காண நேர்ந்தது. ரத்தன்பாய்- யை தின்சா ''ருட்டி'' என்றே செல்லாமாக அழைப்பார். ஜின்னாவிற்கு ருட்டியைக் கண்டவுடன் காதல் அரும்பியது.

               ருட்டியை ஜின்னா காதலிக்க ஆரம்பித்தார். ஆனால் இதை தின்சா அறியவில்லை.

               தின்சா பார்சி இனத்தை சேர்ந்தவர். ஜின்னா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகையால் தின்சாவிடம் பேச்சுவாக்கில் கலப்பு மணத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஜின்னா கேட்டார்.

               ஜின்னா எதற்காக கேட்கிறார் என்பதனை அறியாத நண்பரோ கலப்பு மணத்தை தான் ஆதரிப்பதாகவும் அது மக்களிடையே மத ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் என பதிலளித்தார்.

               இந்த பதிலுக்காகவே காத்திருந்த ஜின்னா சிறிதும் தாமதிக்காமல் அப்படியெனில் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என கேட்டே  விட்டார் . அதிர்ந்து போனார் தின்சா. கோபத்தில் முகம் சிவந்தார்.
உடனே கோபத்தில் கத்தினார். ''ஜின்னா உங்களுக்கு புத்தி பேதலித்து விட்டதா உங்களின் வயதென்ன என் மகளின் வயதென்ன இருவருக்கும் 24 வயது வித்தியாசம் . எனவே இது பற்றி மேற்கொண்டு பேசுவதாக இருந்ததால் நம் நட்பை துண்டிக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தார்


               ஏனெனில் ஜின்னாவின் வயது 40. ஆனால் ருட்டியின் வயதோ வெறும் 16. இன்னும் பருவமடையாத பெண்ணாகவே இருந்து வந்தார்.

               ஆனாலும் ஜின்னாவால் ருட்டியை மறக்க முடியவில்லை. ஏனெனில் இந்த களேபரத்துக்கு இடையில் ருட்டியும் ஜின்னாவை காதலிக்க தொடங்கி இருந்தார். ஏனெனில் ஜின்னா அரசியலில் பிரபலமான நபராக இருப்பதால் ருட்டிக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனவே இருவரும் தின்சாவுக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்க்க ஆரம்பித்தனர்.

               16 வயதான ருட்டிக்கு பருவ வயது எட்டும்வரை இருவரும் பொறுமைகாப்பது என முடிவெடுத்தனர்.


               18 வயது நிரம்பியவுடன் 1918 ம் ஆண்டு பிப்ரவரி 20 ம் தேதி கட்டிய புடவையுடனும் கையில் ஒரு குடையுடனும் தந்தைக்கு தெரியாமல் ருட்டி வீட்டைவிட்டு வெளியேறினார். தன் ஏதிர்கால வாழ்க்கை சின்னாபின்னமாக மாறப்போகிறது என்பதனை பாவம் அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

                1918 ன் ஆண்டு ஏப்ரல் 19 ம் தேதி ஜின்னா - ருட்டி திருமணம் சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது. ஆனால் தின்சா குடும்பத்திலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. ருட்டி இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இதற்காக ருட்டியின் பெயர் ''மரியம்'' என மாற்றப்பட்டது.

               செல்வாக்கான பார்சி குடும்பத்தை சேர்ந்த தின்சாவின் மகளை ஜின்னா திருமணம் செய்து கொண்டது இந்தியாவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

               புதுமண தம்பதிகள் இருவரும் பூவும் மணமும் போல மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக 1919 ம் ஆண்டு  ஆகஸ்ட் 14ம் தேதி இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ''தீனா வாடியா '' என பெயரிட்டு மகிழ்ந்தனர். இருவர் வாழ்விலும் வசந்தம் வீசியது.

               இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜின்னா விளங்கினாலும் கட்சியில் காந்திக்கு உள்ள செல்வாக்கும் கட்சியின் பிற உறுப்பினர்கள் காந்திக்கு கொடுக்கும் முன்னுரிமையும் இவருடைய ஈகோவை உரசிப்பார்த்தது. இதனால் தான் புறங்கணிக்கப்படுவதாக நினைத்ததோடு மட்டுமல்லாமல் தன்னை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயமும் புறங்கணிக்கப்படுவதாக உணர்ந்தார்.

               இந்த எண்ணம் அவரை காந்தியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் விலக வைத்தது.


               ஒரு தனிப்பட்ட மனிதரிடம் காட்டும் வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தன்னை அழிப்பது மட்டுமல்லாது பல லட்சம் மக்களின் உயிரையும் காவு வாங்கப்போகிறது என்பதையோ ஒரு நாட்டையே பிளவு படுத்தப்போகிறது என்பதையோ அப்போது ஜின்னா அறியவில்லை.

               1920 ம் ஆண்டு ''பாலகங்காதர திலகர்'' மறைவிற்கு பின்பு ஜின்னா முழுமையாக காங்கிரசிலிருந்து விலகினார். காங்கிரஸிலிருந்து விலகினாலும் சுதந்திர போராடத்திலிருந்து விலகவில்லை. ஆங்கிலேய அரசை தொடர்ந்து எதிர்த்து வந்தார். சுயேட்சை கட்சிகளை ஒன்று திரட்டி காந்தியின் தலைமையின் கீழ் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட வைத்தார்.

               காந்தியின் கருத்துக்கு முரண்பட்டு காங்கிரசில் இருந்து விலகினாலும் சுதந்திரப்போராட்டத்தில் காங்கிரசுக்கு உதவியாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தொடர்ந்து காங்கிரசுடன் தொடர்பில் இருந்து வந்தார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால் போதாது தன்னை சேர்ந்த இஸ்லாமிய சமூகமும் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே அவருடைய கவலையாக இருந்தது.

               ஜின்னா ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் கூட அவர் தன்னை ஒரு இஸ்லாமியர் என்று ஆடையலங்காரங்களிலோ அல்லது பழக்கவழக்கங்களிலோ வெளிப்படுத்தியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் இஸ்லாமிய கோட்பாடிலோ அல்லது அந்த மதத்திலோ பற்றுள்ளவர் அல்ல.

               ஆங்கிலத்தை நன்கு கற்று தேர்ந்த அவர் தன்னை மேற்கத்திய நாகரிகம் கொண்ட ஒரு ஆங்கிலேயனாகவே பாவித்துக்கொண்டார். கோட்டு சூட்டுடனேயே எப்போதும் காணப்படுவார்.


               மேலும் இஸ்லாமிய மதக்கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவரும் அல்ல. இஸ்லாமியர்களின் புனித கடமையான ''ஹஜ்'' யாத்திரையை கூட மேற்கொண்டதில்லை. இஸ்லாமிய மத அடையாளங்கள் கொள்கைகள் எதையுமே அவர் பின்பற்றவும் இல்லை. குரானுக்கு அவருக்கும் வெகுதூரம். தொழுகை என்றால் என்ன என்று கேட்கின்ற ரகம்.

               இஸ்லாமியர்களில் தடைசெய்யப்பட்ட பன்றி கறியை கூட விரும்பி உண்டு வந்தார் . அப்புறம் ஏன் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு கேட்கும் அளவுக்கு போராடினார் என்றால், காரணம் வேறொன்றும் இல்லை. தான் இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வரவேண்டும் என்கின்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது. ஆனால் அந்த எண்ணம் காந்தி இருக்கும் வரை ஈடேறாது என்பதனை புரிந்து கொண்டார்.

               எனவே, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவை இரண்டாகப் பிரித்து அதில் ஒன்றுக்கு தான் தலைவனாகி காட்டுவதுடன் இஸ்லாமியர்கள் மத்தியில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது.

               1921 முதல் 1935 வரையிலான காலகட்டம் ஜின்னாவின் வாழ்வில் சோதனையான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.

               ஏனெனில், இந்த காலகட்டத்தில்தான் அவருக்கு அரசியலில் பின்னடைவு ஏற்பட்டதோடு குடும்ப வாழ்விலும் புயல் வீச தொடங்கியது.

               ஆம், ஜின்னாவுடன் ருட்டிக்கு நிறைய கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள் ஏற்பட்டன. எனவே இருவருமே ஒருவருடன் ஒருவர் பேசுவதை நிறுத்திக்கொண்டு தனித்தனியே இயங்க ஆரம்பித்தனர்.

               பல ஆண்டுகளாக இருவருக்கும் மோதல் நிலைமையே நீடித்ததால் ஜின்னாவை விட்டு ருட்டி தனியாக பிரிந்து சென்றார்.  இதனால் அவர்களது குழந்தை தனித்து விடப்பட்டது.

               இருவருமே ஒருவர் மற்றவர் மீது இருந்த வெறுப்பினால் குழந்தையையும் வெறுக்க ஆரம்பித்தனர். குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டில் தனித்ததனியாக செட்டில் ஆகிவிட்டனர். குழந்தையைப்பார்க்க இருவருமே வரவில்லை என்பது கொடுமை. இருவருடைய அன்பும் பராமரிப்பும் கிடைக்காததால் வேலைக்காரர்களின் உதவியுடனேயே குழந்தை வளர்ந்தது என்பதுதான் இங்கு வேதனை.

               6 வயது நிரம்பிய பின்பும் கூட அந்த குழந்தைக்கு பெயர்கூட வைக்க பெற்றோர்கள் இல்லாமல் வேலைக்காரர்களுடன் விளையாடியே தன் பச்சிளம் குழந்தைப் பருவத்தை கழித்தது என்றால் இந்த வேதனையை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?  ஜின்னாவின் தந்தை பாசத்தையும், ருட்டியின் தாய்ப்பாசத்தையும் என்னவென்று சொல்ல.


               குழந்தையையும், ஜின்னாவையும் விட்டு பிரிந்து சென்ற ருட்டி 1929 ம் ஆண்டு பிப்ரவரி 20 ம் தேதி தன்னுடைய 29 வது  வயதில் எதிர்பாராதவிதமாக  உயிரிழந்தார்.

               அவரின் மரண செய்தி ஜின்னாவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் இறுதி சடங்கின்போது மனைவியின் பூதவுடலை கண்டு ஜின்னா சிறு குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதது அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.

               ஜின்னா நெஞ்சழுத்தம் மிக்கவர். எந்த சூழ்நிலையிலும் கண் கலங்காதவர். பின்னாளில் தன்னுடைய பிடிவாதத்தினால் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தினால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தபோதுகூட அது பற்றி கவலை கொள்ளாதவர். அப்படியான நெஞ்சழுத்தம் கொண்டவரான ஜின்னா தன் வாழ்நாளில் 2 முறை மட்டுமே கண்கலங்கி நின்றார்.

               அதில் ஒன்று தன் காதல் மனைவி ருட்டியின் மரணத்தின் போது. மற்றொன்று பாகிஸ்தானை தான் பிரித்தது மாபெரும் தவறு என்று மரணத்தருவாயில் படுத்தப்படுக்கையாக இருந்தபோது தன்னை பார்க்க வருபவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி அழுது புலம்பியது.

               மனைவியின் இறப்பிற்கு பின்னான ஜின்னாவின் அரசியல் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம் ...

[ பயணம் தொடரும் ]

இதன் தொடர்ச்சியை படிக்க >> இங்கு கிளிக்குங்க <<.


🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆசைக்கு எத்தனை மனிதர்கள் சாவு.
  இதற்கு இறைவனும் உடந்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. KILLERGEE Devakottai பொதுவாழ்வில் இருப்பவர்கள் தன்னுடைய சுயநலம் மற்றும் சுக துக்கங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...

   நீக்கு
 2. இந்தப் பகுதிகளை நானும் அறிந்திருக்கிறேன்.  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.