"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பட்சி மோத்தாசனம் - Paschimottanasana.

பட்சி மோத்தாசனம் - Paschimottanasana.

Paschimottanasana.

யோகாசனப் பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சியை தரவல்லது. தினந்தோறும் குறைந்தது அரைமணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும். சுறுசுறுப்பையும் கொடுக்கும்.


இங்கு இப்போது உடலுக்கு அற்புத பலன் தரும் ''பட்சி மோத்தாசனம்'' என்னும் பயிற்சியை பற்றி பார்ப்போம்.

பட்சி மோத்தாசனம்.

''பட்சி'' என்பது பறவையை குறிக்கும் சொல். பறவைகள் உறங்கும்போது எவ்வாறு தன்  தலையை தன் மடிக்குள் அதாவது தன் இரு கால்களின் இடைப்பட்ட பகுதிக்குள் புதைத்துக்கொள்கிறதோ அதுபோல இந்த ஆசனமும் அமைவதால் இதனை ''பட்சி மோத்தாசனம்'' என்று அழைக்கின்றனர்.

செய்முறை.

ஒரு விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்து முன்னால் நீட்டியபடி நிமிர்ந்து உட்காரவும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தரையில் ஊன்றிக்கொள்ளவும்.

பின் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டியபடி மூச்சை மெதுவாக உள்ளுக்கிழுத்தபடி  தலைக்கு மேலே உயர்த்தவும்.

அதன்பின் பின் மூச்சை வெளியே விட்டபடி வயிற்றை உள்ளே எக்கியபடி கைகளை முன்னே மெதுவாக இறக்கி இருகால் பெருவிரல்களையும் பிடித்து முன்பக்கமாக குனிந்து நெற்றியால் கால் முட்டியை தொடவும். வயிறு , மார்பு, நெற்றி முதலியன கால்களில் படித்தபடி இருக்க வேண்டும். முழங்கால்கள் வளையக்கூடாது. தரையில் படிந்து நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து கொண்டு மூச்சை நன்கு இழுத்து சுவாசிக்கவும்.

கால் பெருவிரலை பிடிப்பதற்கு பதிலாக படத்தில் உள்ளபடி உள்ளங்கால்களில் அவரவர் வசதிக்கேற்ப கைகளை பிணைத்தும் கொள்ளலாம்.

Paschimottanasana step by step

சில வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் மூச்சை உள்ளுக்கு இழுத்தவாறு கைகள் மற்றும் உடல்களை மேலே உயர்த்தியவாறு நேராக வரவும். பின் கைகளை பக்கவாட்டில மெதுவாக இறக்கி சகஜ நிலைக்கு வரவும்.

சில வினாடி ஓய்வுக்கு பின் மீண்டும் இந்த ஆசனத்தை முன்போல நிதானமாக செய்யவும். இதை தினந்தோறும் 5 அல்லது 6 தடவை செய்து வரவும்.

இந்த ஆசனத்தை எடுத்த எடுப்பிலே அனைவராலும் எளிதாக செய்யமுடியாது. எனவே முதலில் எந்த அளவு உடல் முன்னோக்கி வளைகிறதோ அந்த அளவு செய்யவும். வலுக்கட்டாயமாக உடலை துன்புறுத்தாதீர்கள். தொடர்ந்து படிப்படியாக முயற்சி செய்ய உடல் பயிற்சிக்கு பக்குவப்படும்.

பொதுவாக எந்த ஆசனமாக இருந்தாலும் உடலை அதிக அளவில் வலி ஏற்படும் அளவிற்கு துன்புறுத்தி பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது. அது வேறு பலவித உடல்நல பாதிப்பில் கொண்டு போய் விடலாம். உடல் ஒத்துழைப்பதை பொறுத்து சிறிது சிறிதாகவே முயற்சியை அதிகரிக்க வேண்டும்.

Paschimottanasana.

பலன்கள்.

இந்த பயிற்சியை தொடர்ந்து பயின்று வர முதுகெலும்பு நன்கு நெகிழும் தன்மையை பெறும். அடி வயிற்றிலுள்ள தசைகள் நன்கு பலம் பெறும்.

சிறுகுடல், பெருங்குடல் நன்றாக அழுத்தப்பட்டு மலச்சிக்கல், அஜீரணம் முற்றிலுமாக நீங்கும்.

கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் முதலியன நன்கு அழுத்தப்படுவதால் நீரழிவு நோய் கட்டுப்படும். இடுப்பு பகுதி கொழுப்பு நீங்கி தொப்பை குறையும்.

ஆண்களுக்கு ஆண்தன்மையும் பெண்களுக்கு  பெண்தன்மையும் அதிகரிக்கும். பாலியல் சார்ந்த குறைபாடுகள் நீங்கும்.

இப்பயிற்சி கணையத்திற்கு புத்துணர்வு ஊட்டுவதால் நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

எச்சரிக்கை.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம். கழுத்து பிடிப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தொடர்ச்சியாக மலச்சிக்கல் உள்ளவர்களும் இப்பயிற்சியை தொடர வேண்டாம்.

இப்பயிற்சியில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் உடலை முன்னோக்கி வளைக்கும் படியான இந்த ஆசனத்தை செய்தபின் இதற்கு அடுத்த ஆசனமாக உடலை பின்னோக்கி வளைக்கும் ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்ய வேண்டும். அப்படி பயிற்சி செய்யவில்லையெனில் மலச்சிக்கல், அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த ஆசனம் என்றல்ல பிற எந்தவகை ஆசனமாக இருந்தாலும் முதல் ஆசனத்தில் உடலை எந்த பொசிசனில் வளைக்கிறீர்களோ அதற்கு அடுத்த ஆசனமாக எதிர் திசையில் உடல் வளையும்படியான ஆசனத்தை தேர்ந்தெடுத்துப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இப்படி பயிற்சியெடுத்தால்தான் அது ஆரோக்கியமான பயிற்சியாக அமையும். தவறினால் தசைப்பிடிப்பு, மலச்சிக்கல் முதலிய பல உபாதைகள் ஏற்படலாம்.

எனவே இந்த விதிமுறையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். பல ஆசனங்கள் உடலின் இருபக்கங்களுக்கும் மாறிமாறி பயிற்சியளிப்பதாகவே அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். 

அதுபோல் யோகாசனப்பயிற்சியின் கடைசி ஆசனமாக "சவாசனம்" செய்த பின்பே பயிற்சியை முடிக்கவேண்டும் என்பதும் மிக முக்கியம்.

💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. பதிவு புகைப்படங்களுடன் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு

    எச்சரிக்கையில் குறிப்பிட்டதுபோல இந்த ஆசனம் முடித்த பிறகு அடுத்த எந்த ஆசனம் செய்யவேண்டும் என்பதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் நன்றி. 🙂

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களை பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே!

      பட்சிமோத்தாசனம் பயிற்சியில் முதுகு முன்னோக்கி வளைக்கப்படுவதால்... பட்சி மோத்தாசனம் செய்து முடித்தபின்பு அதற்கு அடுத்த ஆசனமாக முதுகை பின்னோக்கி வளைக்கும் "தனுராசனம்" செய்வது சிறப்பு.

      "தனுராசனம்" செய்வது தங்கள் உடலுக்கு கடினமாக இருப்பதாக உணர்கிறவர்கள் "சக்ராசனம்" செய்து வரலாம்.

      தங்களின் உயர்வான யோசனை இனிவரும் பதிவுகளில் பின்பற்றப்படும் என உறுதியளிக்கின்றேன் நண்பரே!... நன்றி!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.