"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
எக்ஸோமார்ஸ். Mars ExoMars 2016.

எக்ஸோமார்ஸ். Mars ExoMars 2016.

 ExoMars 2016.

[part - 1]

பூமியில் மனிதன் தோன்றி பலகோடி வருடங்களாகி விட்டன. பலநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்தே மனித இனம் விண்வெளியை கூர்ந்து கவனிக்க தொடங்கியது. விளைவு, பரந்து விரிந்துள்ள விண்வெளியும், அந்த விண்வெளியுடன் ஒப்பிடும்போது ஒரு தூசி போல மிதந்து கொண்டிருக்கும் பூமியும் மனிதனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.


எக்ஸோமார்ஸ்.

எனவே, எண்ணிலடங்கா சூரியனையும், கோடானுகோடி கோள்களையும் கொண்ட அண்டவெளியில்..  பூமியில் மட்டுமே உயிரினங்கள் வசிக்கின்றன என்றும் வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் வசிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று சாதிக்கும் சில முட்டாள்களின் கூற்றை ஏற்றுக்கொண்டு அவனால் சமாதானம் அடைய முடியவில்லை.

எனவே, வேற்றுகிரகங்களின் உயிரினங்களின் வாழ்க்கையை பற்றி அறிய அவன்கொண்ட முயற்சிகள் அவனை பூமியை கடந்து விண்வெளியில் பயணிக்கும் திறமையை வழங்கியுள்ளன.

பூமியின் மிக அருகிலுள்ள துணைக்கோளான நிலவில் கால்பதித்த மனிதன் அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்பதனை அறிந்தவுடன் அவனின் அடுத்த பார்வை பூமிக்கு அருகில் உள்ள கோளான ''செவ்வாய்'' மீது விழுந்தது.

mars_planet

செவ்வாய்கிரகத்தின் நில அமைப்பை அறியும் பொருட்டும் அங்கு உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது உயிர்வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதனை அறியும் பொருட்டும் அமெரிக்காவும், ரஸ்யாவும் பல தடவை தங்களுடைய ராக்கெட்டுகளை செவ்வாய் நோக்கி அனுப்பியுள்ளன. ரஸ்யா  செவ்வாய்கிரகம் செல்ல இதுவரை 19 தடவைக்கும் மேல் முயற்சிகள் மேற்கொண்டன.. ஆனால் அதில் பெரும்பான்மையான முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.

அண்மையில் பூமியிலிருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம் பற்றி அறிய கடந்த 2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி புளோரிடாவிலுள்ள ராக்கட் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ''கியூரியாசிட்டி ரோவர்'' என்ற விண்கலம் அமெரிக்காவால் அனுப்பப்பட்டது. 560 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்து 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கியூரியாசிட்டி ரோவர் வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் பலகோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ''மார்டியன் ஏரி'' என்று பெயரிடப்பட்டுள்ள ஏரி படுகை ஒன்று உள்ளது. இதில் ஆய்வு மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் அந்த ஏரியில் ''மீத்தேன் வாயு'' இருப்பதையும். அதன் அளவு அவ்வப்போது மாறுபடுவதையும் கண்டறிந்து அறிவித்தது.

curiosity rove

மேலும், ஏரி படுகைக்கு அருகே அமைந்துள்ள பாறைப்பகுதியில் உயிர்மூலக்கூறுகளான ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மூலக்கூறுகள் இருப்பதையும் கண்டறிந்து அறிவித்தது. கியூரியாசிட்டியால் கிடைக்கப்பெற்ற இந்த தகவல் பூமிக்கு வெளியே உயிர்களை தேடும் விஞ்ஞானிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது.

கியூரியாசிட்டி பூமிக்கு அனுப்பிவைத்த நிழல் படங்களை ஆராய்ந்தபோது செவ்வாயில் எரிமலைகளும், நீண்ட ஆறுபோன்ற பள்ளத்தாக்குகளும் இருப்பதோடு உறைபனிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

பலகோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமி எப்படி இருந்ததோ அதேவாறு இப்போது செவ்வாய்கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கியூரியாசிட்டி கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த மீத்தேன் வாயு விஞ்ஞானிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் மீத்தேன் வாயு உருவாக வேண்டுமெனில் உயிரினங்கள் அவசியம். நம் பூமியில் சதுப்பு நிலங்களிலிருந்து மீத்தேன் வாயு உற்பத்தியானாலும் கூட மரங்களிலிருந்து பெறப்படும் சருகு குப்பைகூளங்களிலிருந்தும், கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் அதிக அளவில் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.

இது பல நேரங்களில் தானாகவே எரியும் தன்மை கொண்டது என்பதால் நாம் இதை  ''கொள்ளி வாயு'' என்றும் சதுப்பு நிலங்களில் இது வெளிப்படுவதால் ''சதுப்புநில வாயு'' என்றும் பொதுவாக அழைக்கிறோம்.

அது மட்டுமல்ல இது சர்வ சாதாரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் ''இடுகாடு'' களில் இறந்த உடல்களிலிருந்து உருவாகி அடிக்கடி வெளிப்படுவதுண்டு. இந்த மீத்தேன் வாயுதான் இரவு நேரங்களில் இடுகாடுகளில் திடீர் திடீரென நெருப்புடன் வெளிப்பட்டு ''கொள்ளிவாய் பிசாசு'' களாக  வந்து நம்ம பக்கத்துவீட்டு மூக்காயி, கருப்பாயி, செல்லாயி முதலானவர்களையெல்லாம் இன்றுவரை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது என்பது தனி கதை.

methane gas

எனவே, செவ்வாய் கிரகத்திலும் மீத்தேன் வாயு இருப்பது கண்டறியப்படுள்ளதால் இங்கு முன்பு எப்போதாவது மிக சிறிய உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது இன்றும் நமக்கு தெரியாமல் நுண்ணுயிரிகள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கலாம் அல்லது அங்குள்ள நில அமைப்பில் ஏற்படும் சில வேதி மாற்றங்களால் கூட மீத்தேன் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பல அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்றே அறிய முடிகிறது.

ஆனால்,  சில விஞ்ஞானிகள் செவ்வாயில் உயிரினங்கள் வாழ அதிக அளவில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். இதற்கு அவர்கள் பூமியில் மீத்தேன் மற்றும் அமிலம் செறிந்த சில ஏரிகளில் சிலவகை நுண்ணுயிரிகள் வாழ்வதை மேற்கோள் காட்டுகின்றனர்.

எனவே  இதுபற்றி தெளிவாக ஆய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் மற்றும்  முன்னாள் சோவியத் ஒன்றியமும் இணைந்து அதி நவீன ஆய்வுக்கலம் ஒன்றை உருவாக்கியது. 2016 ல் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அந்த ஆய்வுக்கலத்திற்கு ''எக்ஸோமார்ஸ்2016'' என்று பெயரும் வைக்கப்பட்டது.

இந்த எக்ஸோமார்ஸ் - ன் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்ததா.. செவ்வாயில் உயிரினங்களின் இருப்பை கண்டறிந்ததா.. என்பதனை தொடர்ந்து வரும் அடுத்த பதிவில் காண்போம்.

இக்கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க..

>> எக்ஸோமார்ஸ். ExoMars 2016 - Part - 2 <<

۝۝۝۝۝۝

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. பிரமிப்பான தகவல் கட்டுரை நண்பரே...
    தொடர்ந்து அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ... வருகைக்கும் கருத்துக்களை பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே !!!.

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.