header ads

header ads

வரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 1.


பெயர் :- விஜய ஆனந்தரங்கப் பிள்ளை.

பிறப்பு :- 30.03.1709. சென்னை - பெரம்பூர்.

தந்தை :- திருவேங்கடம்.

மனைவி :- மங்கதாயி அம்மாள்.

குழந்தைகள் :- மகன் - 2, மகள் - 3.


தொழில் :- வணிகம், அரசியல் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.

மறைவு :- 1761 ம் ஆண்டு ஜனவரி 10 - பாண்டிச்சேரி.

               ''ஒரு கைதியின் டைரி'' என்று ஒரு திரைப்படம் 1985 ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆனால் நாம் இங்கு இப்போது பார்க்கப்போவது அந்த கைதியின் டைரியை பற்றி அல்ல. வரலாற்றை பறைசாற்றிய மற்றொரு டைரியை பற்றியது . . . 

               டைரி எழுதும் பழக்கத்தை முதன் முதலில் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர்கள் ஐரோப்பியர்கள். பண்டைய ரோமாபுரி அரசு காலம் தொட்டே இருந்து வரும் வழக்கம்.

               உங்களில் எத்தனை பேருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது ??? !!! ...

               சரி .... சரி  ... ரொம்பவும்தான் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாம். அப்படியே டைரி எழுதும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும் கூட அது பற்றி பெருமையாக இங்கு பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது. வரவு செலவு கணக்குடன் கடைக்கணக்கும் எழுதி வைத்திருப்பீர்கள் ... நண்பருக்கு கொடுத்த கடன் இனி திரும்பி வரவே வராது என்று நன்கு தெரிந்திருந்தும் கூட காந்தி கணக்கில் எழுதவேண்டிய அந்த நஷ்ட கணக்கையெல்லாம் உங்கள் வீட்டு கஷ்ட கணக்கில் எழுதி வைத்துவிட்டு கண்ணியம் மாறாத அந்த நண்பரை நினைத்து மோவாயை சொறிந்துகொண்டு விட்டத்தை வெறித்திருப்பீர்கள் ... அப்படித்தானே ??? !!! ...


               சரி ..  சரி ..  அசடு வழியாதீர்கள். நாம் இப்போது பார்க்கப்போவதும் ஒரு டைரியை பற்றித்தான் .... ஆனால் அது நீங்கள் நினைப்பதுபோல ''வராக்கடன்'' டைரி அல்ல ... வரலாற்று டைரி ...

               வரலாறு என்று யாராவது ஒருவர் நீட்டி முழங்கினால் உடனே நமது நினைவுக்கு வருவது கல்வெட்டுகள்தான். அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது செம்புத்தகடுகளில் பொறிக்கப்பட்ட செப்பேடுகள்தான் .... ஆனால் என்றாவது உங்களுக்கு வரலாறு என்ற உடன் ''டைரி'' மனதில் வந்து சென்றுள்ளதா?

               என்னது ...  வரலாறு டைரியிலா ??? !!! ...

               ஆம் ... வரலாறு எழுதியவர்கள் எல்லாம் வரலாறாக வாழ்ந்ததில்லை என்பது உண்மைதான் ... ஆனால் இங்கு ஒருவர் வரலாறை தினக்குறிப்புகளாக எழுதி வந்ததாலேயே வரலாறாகவே ஆகிப்போன கதை தெரியுமா?

               தெரியாதெனில், இதோ தெரிந்துகொள்ள தொடருங்கள் ...  ஏனெனில் இந்த வரலாற்று சிறப்புமிக்க டைரியை எழுதிய ''ஆனந்தரங்கப் பிள்ளை'' மிகப்பெரிய வணிகர், தொழிலதிபர், பன்மொழி புலமை பெற்ற பண்டிதர், கவர்னரின் அந்தரங்க உதவியாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வந்தவரை வரலாற்று ஆசிரியர் என்னும் வளையத்திற்குள்ளும் வலம் வர வைத்தது இவர் தன்னிச்சையாக எழுதிய டைரி குறிப்புகள்தான்.

               நீங்கள் இந்தியாவில் 18ம் நூறாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அறியவேண்டுமா? ....  அறியவேண்டுமெனில், நீங்கள் கல்வெட்டுகளை தேடி போக வேண்டியதில்லை... இவர் எழுதிய டைரியை புரட்டினாலே போதும்... அடுத்தகனமே நீங்கள் இங்கிருந்து 18 ம் நூற்றாண்டிற்கு ''டைம் டிராவல்'' சென்று வந்துவிடலாம் !!! ... ஆம்.. !  இவர் கோர்வையாக எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் அனைத்தும் வரலாறு பேசும், நம்மை 18 ம் நூற்றாண்டிற்கே அழைத்து செல்லும் ...

               ஆனந்தரங்கப் பிள்ளை !! ... யார் இவர் ??? ...  வரலாற்று ஆசிரியரா ? நிச்சயமாக இல்லை.... தலைசிறந்த வணிகர், தொழிலதிபர், பன்மொழி புலமை பெற்ற பண்டிதர், கவர்னரின் அந்தரங்க உதவியாளர், மொழி பெயர்ப்பாளர், தன்னைச்சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை டைரியில் குறித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்.


              தன்னுடைய அன்றாட அரசுப்பணிகளில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமல்லாது தன்னை சுற்றி நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும் தமிழில் சுவைபட பேச்சுவழக்கிலேயே எழுதிவந்தவர். அப்படி எழுதி வந்ததாலேயே காலம் கடந்து வரலாற்று ஆசிரியராக மாறிப்போனவர் ... இல்லை...  இல்லை ... வரலாறாகவே வாழ்ந்து போனவர் ...

               தான் எழுதிய இந்த டைரி குறிப்புகள் அனைத்தும் 18ம் நூறாண்டைப்பற்றி எதிர்கால உலகம் அறிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று பதிவேடாக ...  கல்வெட்டாக .... அமையப்போகிறது என்பதனை அவர் அப்போது அறிந்திருக்க நியாயமில்லை !!!.  ஆனால், நாம் இப்போது இவரைப்பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் ...

              வாருங்கள் மேலும் அறிந்து கொள்ள  ''பகுதி 2'' விற்குள் மெல்ல அடியெடுத்து வைப்போம்   >>>

               இப்பதிவின் இரண்டாம் பகுதியை படிக்க >>> இங்கு கிளிக்குங்க <<<

[வரலாறு தொடரும் ] >>>

🎮🎮🎮🎮🎮🎮🎮🎮🎮🎮


கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. நல்லதொரு தொடக்கம் தொடர்கிறைன் நண்பரே...

  எனக்கும் டைரி எழுதும் பழக்கம் 2001 வரை இருந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே ! தொடருங்கள்... தங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் 2001 வரை இருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள் .... `நல்லது... ஆனால் அதற்கு பின் ஏன் எழுதவில்லை??? அதற்கு பின்னான வரலாற்று தரவுகளை எதிர்கால சந்ததியினர் எப்படி அறிந்து கொள்வது? எனவே வருங்கால சந்ததியினர் நலன்கருதி தொடர்ந்து டைரி எழுதி வாருங்கள் .!!! ஏனெனில் வரலாறு முக்கியம் அமைச்சரே !!!

   நீக்கு
 2. https://killergee.blogspot.com/2016/06/blog-post_14.html?m=0

  இதோ டைரியின் கதி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் டைரியை பார்வையிட்டேன் ... நீங்கள் டைரி எழுதும் பழக்கத்தை கைவிட்டது மிக நல்லவிஷயம் என்கிற உண்மை அந்த டைரியை பார்த்த பிறகுதான் எனக்கு தோன்றுகிறது....

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.