Sunday, March 08, 2020

பொது அறிவு தரும் புது அறிவு.


  • ஆல்கஹாலின் கொதிநிலை - 78 ⁰ C.
  • நைட்ரஜனின் கொதிநிலை - 196 ⁰ C.
  • யூரியாவின் உருகு நிலை - 135 ⁰ C.
  • பனிக்கட்டியின் உருகு நிலை - 0 ⁰ C .


  • மனித உடம்பில் உள்ள நீரின் அளவு - 65%.
  • தக்காளி பழங்களில் உள்ள நீரின் அளவு - 95%.
  • பொதுவாக கடல் நீரில் எத்தனை சதவீதம் உப்பு கலந்துள்ளது தெரியுமா? - 3 . 5 %.
  • அமிலம் கலந்த நீரை மின்னாற்பகுக்கும்போது கிடைக்கும் பொருள்  - ஆக்சிஜன், ஹைட்ரஜன்.
  • கடின நீர் என்றால் என்ன தெரியுமா? - நிலத்திலுள்ள கால்சியம், மக்னீசியம் முதலானவைகளின் குளோரைடுகள் மற்றும் சல்பேட் உப்புகள் நீரில்கரைவதால் நீர் கடின தன்மை பெறுகிறது.
  • கடின நீரை கண்டறிவது எப்படி? - சவர்காரத்தை நீரில் போட்டு கரைக்கும் போது நுரை வரவில்லை எனில் அது கடினநீர் என எளிதில் கண்டறியலாம்.
  • கடின நீரை மென்நீராக்கப் பயன்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
  • தாவர எண்ணெய்யில் ஹைட்ரஜனை சேர்த்தால் கிடைக்கும் பொருள் - வனஸ்பதி.


  • பூஞ்சை கொல்லியாக பயன்படும் பொருள் - காப்பர் சல்பேட்.
  • காப்பர் சல்பேட்டை வெப்பப்படுத்தும்போது வெளியாகும் வாயு - சல்பர் ட்ரை ஆக்ஸைடு.
  • உலோகங்கள் அமிலத்துடன் வினை புரியும் போது வெளிப்படும் வாயு - ஹைட்ரஜன்வாயு.
  • விஷ தன்மை வாய்ந்த வாயு - கார்பன் மோனாக்சைடு.
  • ஒரு பொருள் எரிவதை தடுக்கும் வாயு - நைட்ரஜன்.
  • புற்றுநோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு - கோபால்ட்.
  • மென்மையான தன்மை கொண்ட உலோகம் - சோடியம்.
  • சமையல் பாத்திரங்களில் முலாம் பூச பயன்படும் உலோகம் - வெள்ளீயம்.
  • இயற்கையில் கிடைக்கும் மிக கடின பொருள் - வைரம்.
  • கண்ணாடியை வெட்ட உதவும் வைரம் எது? - கருப்பு வைரம்.


  • கிராபைட்டின் உருகு நிலை - 3700 ⁰ C.
  • மனிதனால் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை எத்தனை? - 21.
  • சல்பரை காற்றில் எரிக்கும் போது கிடைக்கும் வாயு - சல்பர் டை ஆக்ஸைடு.
  • கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது உருவாகும் வாயு - கால்சியம் ஆக்சைடு .
  • மெக்னீசியத்தை காற்றில் எரிப்பதால் உருவாகும் வாயு - மக்னீசியம் ஆக்சைடு.
  • சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் கலந்த கலவை - ரொட்டி சோடா.
  • அடுப்புகளில் பாத்திரங்களாக பயன்படுத்தப்படும் வெப்பம் தாங்கும் குடுவைகள் செய்ய பயன்படும் கண்ணாடி வகை - பைரக்ஸ் கண்ணாடி.


  • சலவை தூளின் வேதிப்பெயர் - கால்சியம் ஆக்ஸிகுளோரைடு.
  • ரோசல் உப்பு என்பது என்ன - பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட்.

😽😽😽😽😽😽😽😽😽😽


2 comments:

  1. அற்புதமான தகவல்கள் நண்பரே பகிர்வுக்கு நன்றி.

    இனிய மகளிர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!!! தங்களுக்கும் மங்களம் பொங்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

      Delete

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.

Next previous home