"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஃப்ரெடெரிக் பாஸி - Frederic Passy.

ஃப்ரெடெரிக் பாஸி - Frederic Passy.

Frederic Passy.

உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது "நோபல் பரிசு".

அவ்வாறு நோபல்பரிசு பெற்றவர்களில் சிலரைப்பற்றி தகவல்களை நாம் ஏற்கனவே சில பதிவுகளில் பார்த்து வந்துள்ளோம்.


உலகில் அமைதியும் சமாதானமும் செழிக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்த ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? இல்லையெனில் அவரைப்பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவை தொடருங்கள்.. 

இன்றயை பதிவில் அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்ற "ஃப்ரெடெரிக் பாஸி" என்பவரை பற்றியே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

நோபல் சாதனையாளர்கள்.

ஃப்ரெடெரிக் பாஸி.

பெயர் - ஃப்ரெடெரிக் பாஸி (Frederic Passy).

தேசியம் - பிரெஞ்சு (French ).

பிறப்பு - மே 20 ம் தேதி, 1822. பாரீஸ் - பிரான்ஸ்.

தந்தை - ஜஸ்டின் ஃபெலிக்ஸ் பாஸி (Justin Felix Passy).

தாயார் - மேரி லூயிஸ் பவுலின் சல்லெரோன் (Marie Louise Pauline Salleron).

மனைவி - மேரி பிளான்ஸ் பாஸி (Marie-Blanche Passy).

குழந்தைகள் -

  • ஜீன் பாஸி  (Jean Passy)
  • பால் எட்வார்ட் பாஸி (Paul Edouard Passy) என்ற இரண்டு மகன்கள்.
  • அலிக்ஸ் பாஸி (Alix Passy)
  • மேரி லூஸி பாஸி (Marie Louse Passy) என்ற இரண்டு மகள்கள்.

கல்வித்தகுதி - சட்டப்படிப்பு மற்றும் பொருளாதாரம்.

தொழில் - பொருளாதார நிபுணர், எழுத்தாளர்.

பிற திறமைகள் - அரசியல்வாதி, எழுத்தாளர், சமாதான ஆர்வலர்.

உறுப்பினர் பதவி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,

விருதுகள் - Legion of Honour.(1895) மற்றும் நோபல் பரிசு (1901).

நோபல் பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டு - 1901.

நோபல் பரிசு பகிர்வு - நோபல் பரிசு இவருக்கும் செஞ்சிலுவை சங்க நிறுவனர் "ஹென்றிடுனண்டு" என்பவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

நோபல் பரிசு வகை - அமைதிக்கான நோபல் பரிசு.

மறைவு - ஜூன் 12, 1912 ம் ஆண்டு பிரான்ஸில் வைத்து மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.

Frederic Passy

வாழ்க்கை குறிப்பு.

இவர் ஆரம்பக்கட்டத்தில் ஒரு வழக்கறிஞராகவே தன் வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின் சிவில் சேவையில் கணக்காளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் பொருளாதாரம் படிக்கலானார்.  பல்கலைக்கழகத்தில் முறையாக பொருளாதாரம் கற்று தேர்ந்தார். 1857 ல் தத்துவார்த்த பொருளாளராக நிபுணத்துவம் பெற்றார்.

பத்திரிகை நிருபராகவும்பொருளாதாரம் சார்ந்த கட்டுரை எழுதும் எழுத்தாளராகவும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.

1857 ல் தொழில் முறை பொருளாதார மேதையாக விளங்கிய அவர் 1860 ம் ஆண்டில் பொருளாதாரம் குறித்த சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தி பிரான்ஸ் முழுவதும் பயணம் செய்தார்.

பின்பு கல்லூரி ஒன்றில் பொருளாதார விரிவுரையாளராக பணியாற்றினார். அவ்வேளையில் பொருளாதாரம் பற்றிய பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார்.

அதன்பின் தன்னை பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் போர்களை தவிர்த்து அமைதியும், சமாதானத்தையும் ஏற்படுத்தும் விதமாக பத்திரிகைகளில் எழுதுவதற்கும், மேடைகளில் சொற்பொழிவு ஆற்றுவதற்கும் அர்ப்பணித்தார்.

அந்த காலக்கட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ரஸ்யா மீது போர் தொடுத்தன. பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்திய இது "கிரிமியன்போர்" (Crimeanwar) என குறிப்பிடப்படுகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் வேதனையில் துடித்தனர்.

Crimeanwar

போரின் இறுதிகட்டத்தில் பிரான்ஸில் உள்ள "லோயர்" நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இயற்கை பேரழிவு ஒருபுறம் மறுபுறம் போரினால் ஏற்பட்ட பேரழிவு ஒருபுறம் என மக்கள் வேதனையில் துடித்தனர்.

இதனால் வேதனையுற்ற பாஸி எப்படியாவது போரில்லா அமைதியான உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி பூண்டார்.

பிரான்ஸ் ஆயுதக்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் சர்வதேச மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் போரினை தவிர்க்கும்பொருட்டு மத்தியஸ்தராக இருந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

ஐரோப்பவில் பல ஆண்டுகளாக வன்முறை தாக்குதல்கள் நடந்தேறி வந்தன. அப்போது பல சமாதான சங்கங்களை நிறுவி மக்களை அமைதிப்படுத்தினார். ஐரோப்பாவில் அமைதியை காக்க 1867 ல் சர்வதேச அமைதி கூட்டணியை நடத்தினார்.

அதன்பின் 1870 ல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையே போர் தொடங்கியபோது இருநாட்டு மக்களுக்கும் செய்தித்தாள் மூலமாக அமைதியை வலியுறுத்தி உருக்கமாக அழைப்பு விடுத்தார். அதே ஆண்டில் ஒரு சர்வதேச மத்தியஸ்த அமைப்பையும் நிறுவினார்.

போர்களை தவிர்த்து அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தும் விதமாக பத்திரிகைகளில் எழுதுவதற்கும், மேடைகளில் சொற்பொழிவாற்றுவதற்கும் தன்னை அர்பணித்தார். இதனால் மக்கள் இவரை நேசிக்க ஆரம்பித்தனர்.

போரை விரும்பாத நாடுகளை ஒன்றிணைத்து "நடுநிலை சமாதானநாடுகள்" என்னும் அனைத்துலக அமைதிக்கான சர்வதேச லீக் ஐ  1878ல் உருவாக்கினார்.

இவர் இதுபோன்ற அமைதியை வலியுறுத்தும் இன்னும் பல்வேறு சங்ககளில் உறுப்பினராகவும்,1888ல் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.

மேலும் இரு பாலினத்தவரும் சமமாக நடத்தப்படவேண்டும். மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமைதிக்கான பத்திரிகை சேவையையும் தொடங்கினார்.

இவர் வாழ்நாள் முழுவதும் போரில்லாத உலகத்தை உருவாக்கவும் உலகில் அமைதியை ஏற்படுத்தவும் கடுமையாக உழைத்தார். சமாதானத்தை நிலைநாட்ட மக்களிடையே சொற்பொழிவாற்றினார்.

தன் சொற்பொழிவுகள் மூலம் பல நாடுகளின் போர் உரசல்களை தவிர்த்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.. எனவே இவரை மக்கள் "அமைதியின் தூதுவர்" என அழைத்தனர்.

போரில்லா உலகத்தை உருவாக்க இவர் கடுமையாக உழைத்ததால் நோபல் பரிசு கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.

👏👏👏👏👏👏

          "ஃப்ரெடெரிக் பாஸி" பற்றி அறிந்துகொண்ட நீங்கள் இலக்கியப் படைப்பாற்றலுக்காக நோபல் பரிசு வாங்கிய "சல்லி புருதோம்" பற்றி அறிந்துகொள்ள வேண்டாமா? அறிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க.

>>"சல்லி புருதோம் - Sully Prudhomme."<<

👲👲👲👲👲👲👲

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

20 கருத்துகள்

  1. நல்ல செயலுக்கான நல்ல மனிதருக்கு விருது கிடைத்து இருக்கிறது.

    இவரது பூர்வீகம் தேவகோட்டை போலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது .... தேவகோட்டையா ?? ... ஹஹா ... ஹஹா ..சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிச்சு போச்சுங்கோ .... எப்படிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கோ!!!

      நீக்கு
  2. அறிவுபூர்வமான பதிவு.  தேவகோட்டையாரின் ஊர்ப்பாசம் உலகறிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ... சரியாக சொன்னீர்கள் ... வருகைக்கு நன்றி !!!

      நீக்கு
  3. தகவல்கள் தொகுப்பு நல்ல விஷயம். தொடரட்டும் தமிழில் தகவல் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  4. அட! நல்ல தகவல்கள் அடங்கிய தொகுப்பு. அதுவும் தமிழில். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !!!

      நீக்கு
  5. உங்களைப் பற்றிய தகவல்களில் நீங்கள் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இருப்பதாகச் சொல்லியிருக்கீங்க. வாவ்.

    தொடர்கிறோம் உங்கள் வலையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மகிழ்வை தருகிறது ... தொடருங்கள் ... நன்றி !!! ...

      நீக்கு
  6. முக்கியமான பொருண்மையை எடுத்துக்கொண்டு அலசும் விதம் சிறப்பு. வாழ்த்துகள். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி ஐயா !! இத்துணை வேலைப்பளுவிற்கு இடையேயும் கருத்துக்களை பதிவிட்டமைக்கு நன்றி !!! தங்களின் பள்ளி நூற்றாண்டு விழா மிக சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...

      நீக்கு
  7. அறியாத அரிய தகவல்களை இந்த தொடர்மூலம் அறிந்துகொள்ள உதவுவதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே !!! தங்களின் வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மகிழ்ச்சி !!!

      நீக்கு
  8. அருமையான தகவல்
    இன்றுதான் அறிந்தேன்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே !!! வருகைக்கு நன்றி !!!என்றும் நட்புடன் தொடருங்கள் நன்றி !

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருக நண்பரே ! வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி நண்பரே !!! ...

      நீக்கு
  10. தளத்தில் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ! "premium theme" ஒன்றை அண்மையில் purchase பண்ணினேன். எனவேதான் இந்த மாற்றம். ஆதலால் புதிய பதிவுகள் போடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது .... வருகைக்கு நன்றி !!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.