"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சல்லி புருதோம் - Sully Prudhomme.

சல்லி புருதோம் - Sully Prudhomme.

சல்லி புருதோம்.

Sully Prudhomme.

உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது "நோபல் பரிசு".

1901 முதல் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவரான "சல்லி புருதோம்" (Sully Prudhomme) என்பவரைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் அறிய இருக்கின்றோம். வாருங்கள் அறிந்துகொள்ளலாம்.

நோபல் சாதனையாளர்கள்.

சல்லி புருதோம்.

இன்றயை பதிவில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசு பெற்ற "ரெனே அர்மாண்டு ஃபிரான்சுவா புருதோம்" என்ற பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த இலக்கிய எழுத்தாளரைப்பற்றிய முக்கியமான சில தகவல்களை பார்ப்போம்.

இயற்பெயர் :- ரெனே அர்மாண்டு ஃபிரான்சுவா புருதோம் (Rene Armand Francois Prudhomme).

புனைப்பெயர் :- சல்லி புருதோம். (Sully Prudhomme).

குடும்ப பெயர் :- புருதோம்.

தேசியம் :- பிரெஞ்சு. (பிரான்ஸ்.- France ).

பிறப்பு :- மார்ச் 16., 1839 ம் ஆண்டு. பாரிஸ் - பிரான்ஸ்.

தந்தை :- ரெனே பிரான்சுவா ப்ருதோம். (Rene Francois Prudhomme).

தாயார் :- ஜீன் க்ளோதில்ட் கைலட் (Jeanne Clothilde Caillat)

சகோதரி :- N .N . Prudhomme .

திருமணவாழ்க்கை :- திருமணம் செய்துகொள்ளவில்லை. பிரம்மச்சாரி.

கல்வித்தகுதி :- பொறியியல் சார்ந்த படிப்பு மற்றும் சட்டப்படிப்பு.

திறமை :- எழுத்தாளர் மற்றும் கவிஞர்.

தொழில் :- பொது கட்டுரைகள், மெய்யியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் கவிதைகள் வரைவது.

உறுப்பினர் பதவி :- அகாடமி ஃபிரான்சைஸ். 1881 ம் ஆண்டு பிரெஞ்சு அகாடமிக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Sully Prudhomme.

விருதுகள் :- நோபல் பரிசு (1901).

நோபல் பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டு :- 1901 ம் ஆண்டு.

நோபல் பரிசுக்கான தகுதி தேர்வு  :- இலக்கியப் படைப்பாற்றல். 

நோபல் பரிசு வகை :- இலக்கியத்திற்கான நோபல் பரிசு.

மறைவு :- செப்டம்பர் 6, 1907 ம் ஆண்டு. பிரான்ஸிலுள்ள சாட்டேனே - மலப்ரி  (Chatenay Malabry) என்னும் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலேயே  தன்னுடைய 68 வது வயதில் காலமானார்.

மரணத்திற்கான காரணம் :- பக்கவாதம் என்னும் நெடுநாளைய உடல் செயலிழப்பு.

வாழ்க்கை குறிப்பு.

இவர் ஒரு நடுத்தரவர்க்க பாரிசியன் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை ஒரு கடை வியாபாரி. இவருக்கு இரண்டு வயதாகும்போதே இவர் தந்தை இறந்து விட்டார். அதன் பின் இவர் இவருடைய மாமாவின் அரவணைப்பில் அவருடைய வீட்டிலேயே வளர்ந்தார்.

இவருடைய இயற்பெயர் "ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம்". ஆனால் இவருடைய மாமா நம் மருமகனுடைய பெயர் நம்ம இளைய தளபதி "கில்லி விஜய்" மாதிரி கொஞ்சம் கெத்தா இருக்கட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ இவருக்கு பிரெஞ்சு பாஷையில் "சல்லி புருதோம்" என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்து விட்டார். காலப்போக்கில் இந்த பெயரே நிலைக்க ஆரம்பித்துவிட்டது.

பெயர்தான் சல்லியே தவிர மனிதர் ஊருக்குள்ள "கில்லி"யாகத்தான் வலம் வந்துள்ளார்.

ஆம்... வயதிற்கு வந்தவுடனேயே பயபுள்ளைக்கு "லவ்💖💘 ஸ்டார்ட் ஆகிடுச்சு.

அதாங்க... நம்ம கில்லிக்கு சாரி... சல்லிக்கு... லவ் ஸ்டார்ட் ஆனதும்தான் ஆனது அதுவரையில் "லப்-டப்"... "லப்-டப்" என்று அடித்துக்கொண்டிருந்த இதயம் திடீரென சுருதி மாறி "லவ்-டப்"... "லவ்-டப்" என்று துடிக்க ஆரம்பித்துவிட்டது.

இதயமே லயம் மாறி துடிக்கும் போது உடலின் மற்ற அவயங்கள் மட்டும் சும்மா இருக்குமா என்ன?... அவைகளும் அவ்வப்போது தாறுமாறாக துடித்து (😊😉😋😁) காதல் ஸ்வரங்களை மீட்ட... நினைவுகளை சுமக்கவேண்டிய மனதோ இங்கு கனவுகளை சுமந்துகொண்டு கிளுகிளுப்பாக பயணிக்க... திடீரென்று யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை பயணம் பாதியிலேயே தடைபட... இதயம் கண்ணாடிக் குவளையாய் உடைபட... வசந்தத்தை நோக்கி பயணிக்க வேண்டிய காதல் பயணம் திடீரென தடம் மாறி பயணிக்க ஆரம்பித்தது.

காரணம்... காதலை கவிதைகளாக தீட்ட வேண்டிய அவருடைய கண்கள் அவ்வப்போது கொஞ்சம் கண்ணாமூச்சி ஆட... அதுவரையில் கட்டுக்கடங்காமல் இருந்து வந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாக தட்டுத்தடுமாற ஆரம்பித்தது.

ஓ... மை... காட்....

வாட் இஸ் ஹிஸ் பிராபளம்?

கண்கள்தான் பிராபளம்...

ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பயின்று கொண்டிருந்த சமயம். கண்ணிற்கு அதிகம் வேலை கொடுத்ததாலோ என்னவோ (!!??) கண்பார்வையில் கொஞ்சம் கோளாறு ஏற்பட படிப்பு பாதியிலேயே தடைபட்டது.

படிப்பு தடைபட்டால்கூட அவர் மனசு தாங்கும்... ஆனால் காதல் தடைபட்டால்???...

ஆம்... கண்போன பின்பு காதலாவது கத்தரிக்காயாவது என காதலி காதலை கை கழுவ...

தாலியில் முடிய வேண்டிய காதல் இங்கு தோல்வியில் முடிய...

Sully love

Sully love failure

காதல் தோல்வி தந்த விரக்தியில் ஒரு மாறுதலுக்காக ஒரு அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றியவர் ஆர்வம் காரணமாக 1860 ம் ஆண்டு சட்டம் படிக்கலானார். ஓய்வு நேரங்களில் தத்துவம் படித்தார். கவிதையும் எழுதினார்.

என்னாது கவிதையா?

ஆம் கவிதைதான்.... காதல் கவிதை. அதுவும் சோக கவிதை.

ஏன்?

அதுதான் ஏற்கனவே சொன்னேனே... ஏதோ காதல் தோல்வியாம்.

யாருக்கு ?

பின்ன யாருக்கு.. அவருக்குத்தான்.

அந்த தோல்வி தந்த வலி. மனிதர் கடைசிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. கடைசி வரை கட்ட பிரம்மச்சாரிதான்.

ம்.. ம்ம்.. கஷ்டம்தான்.

விளைவு, தாடி வைத்துக்கொண்டு கவிஞராக வலம்வர ஆரம்பித்துவிட்டார். நண்பர்களின் வற்புறுத்துதலின் பேரில் தான் எழுதிய கவிதையின் பக்கங்களை அச்சில் கோர்த்து நூலாக வெளியிட்டார்.

கவிதை நூலின் பெயர் பிரெஞ்சு மொழியில் "லா வாஸ் ப்ரிஸ்".

அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்தால் "உடைந்த குவளை".

போச்சுடா... மனிதர் எந்த அளவிற்கு மனதளவில் நொறுங்கிப் போயுள்ளார் பாருங்கள்.

ஆனால், அந்த கவிதை நூலிற்கோ ஆடவர் மத்தியில் அமோக வரவேற்பு.

(ம் ..ம்ம்.. இந்த பொண்ணுங்களால ஊருக்குள்ள நிறைய பேரு பாதிக்கப்பட்டிருப்பானுக போல.)!

காதலின் பிரிவு ஏற்படுத்திய சோகம் அவ்வப்போது மனதில் வந்துபோக மனிதர் விரக்தியில் தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டார். தத்துவம் பேசுபவனுக்கு சட்டம் ஒத்துவருமா? சட்டப்படிப்பை பாதியிலேயே தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்.

Sully-Prudhomme-tomb

Sully-Prudhomme-tomb bord

கொஞ்சம் கொஞ்சமாக காதலியின் இடத்தை தத்துவமும், இலக்கியமும், அறிவியலும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளில்  ஆக்கிரமித்துக்கொள்ள மனிதர் கிட்டதட்ட ஒரு தத்துவ ஞானியாகவே மாறிப்போனார்.

அதன்பின் கவிதை, கட்டுரை, தத்துவம், மகாதத்துவம் என்று அவரது வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்க.. அதுவே அவருக்கு "நோபல் பரிசை" பெற்றுத்தந்ததோடு நில்லாமல்... சரித்திரத்திலும் ஒரு இடத்தை பிடித்துக்கொடுத்து விட்டது...

சரித்திரத்தில் மட்டுமா?... நம் எல்லோருடைய மனதிலும் அவருக்கு ஒரு நீங்காத இடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

இதன்மூலம் உங்களுக்கு சொல்லிக்கொள்வது யாதெனில்.. 💕💕💕ஆதலால் காதல் செய்வீர் 💘💘💘

💢💢💢💢💢💢💢

இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல்பரிசு பெற்ற "Wilhelm" மற்றும் "Jacobus" பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க.

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

14 கருத்துகள்

  1. பதிவை ரசித்தேன் நண்பரே
    பெரிய அறிவாளிகள் பெரும்பாலும் திருமணத்தை வெறுக்கிறார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே !! பொதுவாக அறிவின் தொடர் வளர்ச்சிக்கு திருமணபந்தம் எந்தவகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, அது சுயமான சிந்தனைகளுக்கு பல கட்டுபாடுகளை விதிப்பதும், பலநேரங்களில் தடையாக இருப்பதுமே அடிப்படை காரணம்.....

      நீக்கு
  2. தகவல்கள் அருமை...

    காதலில் வென்றவர் அறிஞர்
    காதலில் தோற்றவர் பேரறிஞர்...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹா ...ஹஹா ... மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் ... ஆனால் நீங்கள் அறிஞரா ... அல்லது பேரறிஞரா என்பதனை இங்கு சொல்லாமலேயே சென்றுவிட்டீர்களே ?!

      நீக்கு
  3. சிறப்பான தகவல்கள் சிவா.

    தொடரட்டும் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே !!! அனைத்தும் உங்கள் எண்ணப்படியே நடக்கும் நண்பரே !!!

      நீக்கு
  4. காதலில் தோற்றால் பேரறிஞர் ஆக முடியும் போல...
    அருமையான தகவல்கள். தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ... அப்படித்தான் சொல்கிறது சல்லி புருதோம் வாழ்க்கை .... இனியாவது நம்முடைய ரோமியோக்கள் "தேவதாஸ்" போன்று ஆகாமல் "சல்லி புருதோம்" போல் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் ...

      நீக்கு
  5. நல்ல தகவல் இப்போதுதான் இவரைப் ப்ற்றி அறிகிறேன். மற்ற பகுதிகளையும் படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே !!! ... உங்களது வருகையும், கருத்தும், மனதிற்கு மகிழ்வை தருகிறது.நன்றி !!!...

      நீக்கு
  6. காதல், காதல், காதல்,
    காதல் போயிற் காதல் போயிற்
    சாதல், சாதல், சாதல். என்கிறார் தேசியக் கவிஞர் பாரதியார்.

    ஆனால் சல்லி புருதோம் அவர்கள் காதல் போனபின் இலக்கியம் படைத்து நோபல் பரிசு பெற்று

    காதல், காதல், காதல்,
    காதல் போயிற் காதல் போயிற்
    நோபல்,நோபல்,நோபல் என்று நிரூபித்துவிட்டாரே.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ..ஹஹா ... அருமையாக சொன்னீர்கள் ... இனியாவது நம் காதல் ரோமியோக்கள் காதல் தோல்வியடைந்தால் "சாதல்" நோக்கி செல்லாமல் "நோபல்" நோக்கி பயணிக்க வேண்டும் ... நன்றி !!!

      நீக்கு
  7. ஆதலால் காதல் செய்வீர்? என
    சுவையான பதிவினைத் தந்தீர்கள்!
    தொடருங்கள்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.