"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
வில்லெம் - Wilhelm Conrad Rontgen - ஜேகப்பஸ் - Jacobus Henricus van 't Hoff.

வில்லெம் - Wilhelm Conrad Rontgen - ஜேகப்பஸ் - Jacobus Henricus van 't Hoff.

Nobel Achievers -  biodata.

வில்லெம் - ஜேகப்பஸ்.

உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது "நோபல் பரிசு". இது சுவீடன் நாட்டை சேர்ந்த வேதியியல் விஞ்ஞானியான "ஆல்பர்ட் நோபல்" என்பவரால் 1895 ல் உருவாக்கப்பட்டது. 1901 ல் தான் முதன் முதலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு இது.

இதுவரை 860 க்கும் மேற்பட்டவர்கள் இப்பரிசினை பெற்றுள்ளனர். அவர்களில் இருவரைப்பற்றிய முக்கிய தகவல்களை (Biodata) மட்டும் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் [Wilhelm Conrad Rontgen] மற்றும் ஜேகப்பஸ் ஹென்ரிகஸ் வான் டி ஹோல்ஃப். (Jacobus Henricus van 't Hoff ) ஆகிய இருவரைப்பற்றியே பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

வில்லெம் ரோண்ட்கன்.

பெயர் :- வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் [Wilhelm Conrad Rontgen].

Wilhelm Conrad Rontgen

பிறப்பு :-  மார்ச் 27, 1845.

தந்தை :- பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன்.

தாயார் :- சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின்.

மனைவி :- அன்னா பேர்த்தா லூடுவிகு.

குழந்தைகள் :- இல்லை.

தேசியம் :- லென்னப் (ரெம்ஷெய்ட்) , ஜெர்மனி.

கல்வித்தகுதி :- பொறியியல், உட்ரெக்ட்டு மற்றும் ஃபெடரல் தொழில்நுட்ப கல்லூரிகள்.

பணி :- இயற்பியலாளர்.

பணிபுரிந்த இடம் :- இவர் பல பல்கலைக்கழகங்களில் இயற்பியல் துறை தலைவராக பணியாற்றியுள்ளார். அவையாவன... ஸ்ட்ராஸ்பேர்க், வூர்ட்டென்பர்கு, ஒகெனைம், ஸ்ட்ராஸ்போர்க், கெயிசன், வூர்ட்ஃசுபர்கு மற்றும் மியூனிக் ஆகிய பல்கலை கழகங்களில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

விருதுகள் :- 

  • ரம்ஃபோர்ட் விருது (1896). 
  • மட்டூட்சி விருது (Matteucci Medal) (1896).
  • நோபல் பரிசு (1901)

நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு :- எக்ஸ் கதிர் [ X Ray ].

பரிசுகளின் வகை :- இயற்பியலுக்கான நோபல் பரிசு.

நோபல் பரிசு பெறப்பட்ட ஆண்டு :- 1901.

மறைவு :- பிப்ரவரி 10, 1923 ம் ஆண்டு தன்னுடைய 77 வது வயதில் காலமானார்.

ஜெர்மனியை சேர்ந்த இவர் "ரீச்சுஸ்" பல்கலை கழகத்தில் [Reichs universitat ] இயற்பியலாளராக பணிபுரிந்தார். 1895ம் ஆண்டு நவம்பர் 8 ல் மின்காந்த கதிர்வீச்சு பற்றி ஆராயும்போது "எக்ஸ் கதிர்" [X Ray ] என்று அழைக்கப்படும் மின்காந்த கதிர்வீச்சு அலைகளை கண்டறிந்தார். இது தற்பொழுது மருத்துவ துறையில் உடலை ஊடுருவி சென்று எலும்புகளிலுள்ள குறைபாடுகளை கண்டறிய பெரிதும் உதவுகிறது.

அதுமட்டுமல்ல, விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இவருடைய இந்த அரிய கண்டுபிடிப்பை பாராட்டி இவருக்கு 1901 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவே இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு.

💢💢💢💢

ஜேகப்பஸ் ஹென்ரிகஸ் வான் டி ஹோல்ஃப்.

பெயர் :- ஜேகப்பஸ் ஹென்ரிகஸ் வான் டி ஹோல்ஃப். (Jacobus Henricus van 't Hoff ).

Jacobus Henricus van 't Hoff

பிறப்பு :-   ஆகஸ்ட் 30, 1852. [ராட்டர்டேம் -  நெதர்லாந்து].

தந்தை :- ஜெகப்பஸ் ஹென்ரிகஸ் வான் டி ஹாஃப்.

தாயார் :-  அலிடா கோல்ஃப் வான் டி ஹாஃப்.

மனைவி :- ஜோஹன்னா ஃபிரான்சினா மீஸ். (Johanna Francina Mees).

குழந்தைகள் :-  "ஜேக்கபஸ் ஹெண்ட்ரிகஸ்" மற்றும் "கோவர்ட் ஜேக்கப்" என்ற இரண்டு மகன்கள், "ஜோஹன்னா ஃபிரான்சினா" மற்றும் "அலீடா ஜாகோபா" என்ற இரண்டு மகள்கள்.

தேசியம் :-  நெதர்லாந்து.

கல்வித்தகுதி :-  வேதியியல் மற்றும் கரிம வேதியியலில் பட்டப்படிப்பு.

பணி :-  கரிம மற்றும் கோட்பாட்டு வேதியியல் ஆய்வு.

பணிபுரிந்த இடம் :- ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் மற்றும் பெர்லின் பல்கலைக்கழகம்.

விருதுகள் :-டேவி பதக்கம் (1893), நோபல் பரிசு (1901), ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதக்கம் (1911).

நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு :- இரசாயன இயக்கவியல் கோட்பாடு மற்றும் ஆஸ்மோடிக் அழுத்தம்.

பரிசுகளின் வகை :- வேதியியலுக்கான நோபல் பரிசு.

நோபல் பரிசு பெறப்பட்ட ஆண்டு :- 1901 ம் ஆண்டு.

மறைவு  :- மார்ச் 1, 1911 ம் ஆண்டு தன்னுடைய 58 வது வயதில் காலமானார். [ஸ்டெஸைஸி - ஜெர்மனி].

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இவர் மிகச்சிறந்த கோட்பாட்டு வேதியியலாளராக திகழ்ந்தார். 1874 ல் இவர் ஆராய்ந்து அறிந்து வெளியிட்ட நான்முக கார்பன் அணு பற்றிய கோட்பாடு "முப்பரிமாண வேதியியல் துறை" என்ற ஒன்று உருவாக வித்திட்டது. பௌதிக வேதியியல் துறையை உருவாக்கியவர் என்ற பெருமை இவரையே சாரும்.

வில்லெம் மற்றும் ஜேகப்பஸ் பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் மருத்துவத்திற்காக முதல் நோபல் பரிசு பெற்ற எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க.

>>"எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் -  biodata."<<

⧫⧫⧫⧫⧫⧫⧫

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

14 கருத்துகள்

  1. நல்லதொரு தொகுப்பை ஆரம்பித்து உள்ளீர்கள்... தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே !!! தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி !!! ...

      நீக்கு
  2. நல்ல தகவல் களஞ்சியம் அவசியமானதும்கூட தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே !!! வருகைக்கு மகிழ்ச்சி !!! தொடருங்கள் ... நன்றி !!!

      நீக்கு
  3. சிறப்பான தொகுப்பு - தொடரட்டும் சாதனையாளர்களின் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே !!! தங்கள் வருகைக்கும், கருத்துக்களை பதிவு செய்ததற்கும் நன்றி !!!

      நீக்கு
  4. சிறந்த ஒரு தொகுப்பை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் சாதனையாளர்களின் பட்டியல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே !!! தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி !!! ...

      நீக்கு
  5. நானும் கணித விஞ்ஞான படிப்பையே படித்தேன் தங்கள் பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் என நான் நம்புகிறேன் நாளைய தலைமுறை அறியவேண்டிய தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ! தங்களுடைய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி !

      நீக்கு
  6. இதுவரை நோபல் பரிசு பெற்றவர்கள் பற்றி அறியாத தகவல்களை தொடராக தொகுத்து வழங்க இருப்பதற்கு நன்றி! நல்ல தொடக்கம்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்து செய்திகளுக்கு நன்றி நண்பரே!!!

      நீக்கு
  7. நோபல் சாதனை யாளர்களில் இந்தியருமுண்டுதானே தொடருஙள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக !!! ... இதில் இந்தியர்களின் பங்கும் நிறையவே உள்ளது .... உங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா!!! ...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.