"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - Eureka Eureka general knowledge.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - Eureka Eureka general knowledge.

யுரேகா யுரேகா.

இவ்வுலகை படைத்தவனை நாம் "இறைவன்" என்கிறோம். ஆனால் அப்படியான இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்று நமக்கு இன்றுவரை தெரியவில்லை. அறிவியலாலும் விளக்கமுடியவில்லை.

ஆனால், இயற்கையை படைக்கவில்லை என்றாலும் இயற்கையில் புதைந்து கிடக்கும் பல அறிவியல் புதிர்களையும் அறிவியல் கருவிகளையும் படைக்கும் திறமை கைவரப்பெற்றுள்ளதால் விஞ்ஞானிகளை கண்கண்ட கடவுள்களாகவும், நம் கண்முன் நடமாடும் பிரம்மாக்களாகவும் முன்மொழியலாம்.

அவ்வாறான சில அறிவியல் பிரம்மாக்கள் பற்றியும் அவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் பற்றியும் இன்றைய "யூரேகா யுரேகா" பகுதியில் சிறு சிறு தகவல்களாக பார்ப்போம் வாருங்கள் !!!

"யுரேகா... யுரேகா - Eureka Eureka" என்னும் இப்பதிவின் முதல் பகுதியை படிக்க அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க >> "யுரேகா ... யுரேகா - Eureka Eureka general knowledge - part 1."

கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்.

  • யூரேனியக் கதிர்வீச்சை கண்டறிந்தவர் - ஆண்டனி ஹென்றி பெக்யூரல்.
  • அமோனியா வாயுவை கண்டறிந்தவர் - ஜோசப் பிரீஸ்ட்லி .(Joseph Priestley).
  • ப்ளோரினை வெற்றிகரமாக பிரித்தெடுத்தவர் - ஹென்றி முவாசான். (Henri Moissan).
  • குளோரோபார்ம் - ஐ கண்டறிந்தவர் - சர் ஜேம்ஸ் சிம்சன்.
  • குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லெட்டை உருவாக்கியவர் - ஜான்காட்பரி.(John Cadbury).
  • ஓசுமியம் மற்றும் இரிடியம் உலோகங்களை கண்டறிந்தவர் - சிமித்சன் டெனண்ட். (Smithson Tennant).

Smithson Tennant

  • காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதனை கண்டறிந்தவர் - டாரி செல்லி.
  • மூளையின் மின் அதிர்வுகளை பதிவு செய்யும் "EEG" கருவியை உருவாக்கியவர் - டாக்டர் ஹான்ஸ் பெர்கர். (Dr . Hans Berger).
  • இசைத்தட்டு உருவாக்கியவர் - பீட்டர் கோல்ட்.
  • பியானோ (கின்னரப்பெட்டி ) இசைக்கருவியை உருவாக்கியவர் - பார்தலோமியோ கிரிஸ்டோபரி. (Bartolomeo Cristofori).
  • கார்பன் பேப்பரை உருவாக்கியவர் - ரால்ஃப் வெட்ஜ்வுட்.
  • இரயில் இன்ஜினை கண்டறிந்தவர் - ஜார்ஜ் ஸ்டீபென்சன். (George Stephenson).
  • வண்ண ஒளிப்பதிவு சுருளை கண்டறிந்தவர் - ஜார்ஜ் ஈஸ்ட்மென். (George Eastman).
  • மெக்கானிக்கல் ரீப்பர் என்னும் அறுவடை இயந்திரத்தை உருவாக்கியவர் - மெக்கார்மிக். (McCcormick).
  • ஜெராக்ஸ் மிஷினை உருவாக்கியவர் - ஜெஸ்டர் எஃப்கார்ல்சன்.
  • முறையான பயன்பாட்டிற்கு உரிய பிரதிபலிப்பு தொலைநோக்காடியை உருவாக்கியவர் - நியூட்டன்.
  • டைட்டானியத்தை ( Titanium ) கண்டறிந்தவர் - W . கிரேகார் (W.Gregor) (1791).
  • மின்னாற்பகுப்பு விதிமுறைகளைக் கண்டறிந்தவர் - மைக்கேல்பாரடே. (michael Faraday).
  • முதன்முதலில் மலேரியா கிருமிகளை கண்டுபிடித்த விஞ்ஞானி - லேவரான்.
  • பென்சீன் கண்டுபிடித்தவர் - மைக்கேல் பாரடே.
  • பொட்டாசியம் சயனைடு கண்டுபிடித்தவர் - பிரெடரிக் வேலர்.
  • மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் - தனிப்பட்ட ஒரு நபரை குறிப்பிடுவது சரியல்ல. ஏனெனில் மின்சாரத்தை பற்றி பலபேர் பல்வேறு கட்டங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர். குறிப்பிட்டு கூற வேண்டுமெனில் 1752 ல் பெஞ்சமின் பிராங்ளின் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டதை இங்கு குறிப்பிடலாம்.
  • தெர்மாஸ் ப்ளாஸ்கை உருவாக்கியவர் - தீவார்.
  • பாஸ்பரஸை கண்டறிந்தவர் - H . பிராண்ட். (H.Brand) 1669.
  • நைட்ரிக் அமிலம் யாரால் கண்டறியப்பட்டது - கிளாபர்.

Nitric acid - general-knowledge.

  • இன்வார் என்ற உலோகக்கலவையை கண்டுபிடித்தவர் - சார்லஸ் எடுவார்ட்  கீயோம்.
  • ஒளிமின் விளைவை குவாண்டம் இயற்பியல் கொள்கைகளின் படி விளக்கியவர் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
  • பார்கர் பேனாவை உருவாக்கியவர் - ஜார்ஜ் பார்கர்.
  • முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கியவர் - அலெசான்றோ  வோல்ட்டா. (Alessandro Volta).
  • நெம்புகோல் தத்துவத்தை கண்டறிந்தவர் - ஆர்க்கிமெடிஸ். (Archimedes).
  • பால்பாயிண்ட் பேனாவை உருவாக்கியவர்கள் - ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த "லாஸ்லோ பைரோ" மற்றும் அவரது சகோதரரான "ஜியார்ஜி
  • பெரிலியம் தனிமத்தை கண்டுபிடித்தவர் - நிக்கோலஸ் லூயிஸ் வாக்குலின். (Louis Nicolas Vauquelin).
  • பலூனை கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்கள் - பிரான்சிஸ் ஜோசப் மற்றும் ஜாக்கியுஸ்.
  • அமோனியா வாயுவை கண்டறிந்தவர் - ஜோசப் பிரீஸ்ட்லி. (Joseph Priestley).
💚💚💚💚💚💚💚

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. உங்களால் நாங்களும் கண்டு கொண்டோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் கண்டு கொண்டோம் விடைகளை!

    நல்ல தகவல்கள்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வருகைக்கும் , கருத்துகளுக்கும் நன்றி !!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.