"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
முதல் சாதனை பெண்கள் - Famous Firsts for Women.

முதல் சாதனை பெண்கள் - Famous Firsts for Women.

Famous Firsts for Women.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று ஒரு காலக்கட்டத்தில் பெண்களை அடிமைகளாக வைத்திருந்த காலம் போய் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதனை நிகழ்த்திவருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நுழையாத துறைகளே இல்லை எனலாம். இதுவரையில் கால்பதிக்காத ஒரு துறையில் முதன்முதலாக கால்பதிக்கும் பெண்கள் சரித்திரத்திலும் கால் பதிக்கிறார்கள்.


அவ்வாறு வாழ்விலும் சரித்திரத்திலும் சாதனை படைத்த பெண்கள்  உலகில் ஏராளம் என்றாலும், அவ்வாறு சாதனைபடைத்த பெண்களில் உதாரணத்திற்காக சில சாதனை பெண்மணிகளை மட்டுமே இங்கு பார்க்க இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறைகளில் இந்தியாவிலும், உலக அளவிலும் சாதித்த பெண்களை அறிந்துகொள்ளலாம் வாருங்கள். 

சோதனை கடந்து சாதனை.

  • உலகின் முதல் பெண் பிரதமர் - சிரிமாவோ பண்டார நாயக. (இலங்கை).
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி.
  • இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் - மார்கரெட் தாட்சர் .
  • நியூஸிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் - ஜெனிபர் ஷிப்ளே.
  • இஸ்லாமிய நாடு ஒன்றில் முதன்முதலாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்  - பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான் ).
  • முதன்முதலாக "கான்கார்டு" என்னும் ராட்சத ஜெட் விமானத்தை ஒட்டிய பெண் பைலட் - பார்பரா ஹார்மர். 
  • முதல் முதலாக இந்திய பெண் விமான பைலட்டாக பணியில் அமர்ந்தவர்  - துர்கா பானர்ஜி.
  • முதல் இந்திய பெண் போர் விமானி - அவனி சதுர்வேதி.
  • இந்தியாவின் முதல் பெண் கார்டூனிஸ்ட் - மஞ்சுளா பத்மநாபன்.
  • சமாதானத்திற்கு முதன் முதலில் இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரஸா.
  • இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் - கோல்டா மேயர்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் - கொரோஸான் அகினோ.
  • கனடாவின் முதல் பெண் பிரதமர் - கிம் காம் பொல்.
  • முதன்முதலில் சீனாவிற்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் - இந்திராகாந்தி.
  • உலகின் முதல் பெண் அதிபர் - இஸபெல் பெரோன். (அர்ஜெண்டினா).
  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு. (உத்திரபிரதேசம்).

sarojini naidu

  • அமெரிக்காவின் முதல் பெண் கவர்னர் - நெல்லி டெய்லோராஸ்.
  • இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் - ஷானா தேவி.
  • இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் - பிரதீபா பாட்டீல்.
  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் - ஹன்னா மெஹ்தா.
  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுசேதா கிருபளானி. (உத்திர பிரதேசம்).
  • இந்தியாவில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் அமைச்சர் - இராஜ் குமாரி அமிர்தகௌர்.
  •  ஐ.நா . பொதுச்சபையின் முதல் பெண் தலைவி -  திருமதி . விஜயலட்சுமி.
  • சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ. ஏ. எஸ் அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா.
  • இந்தியாவின் முதல் பெண் ஐ. பி. எஸ் அதிகாரி - கிரண்பேடி.
  • தமிழ்நாட்டின் முதல் ஐ .பி. எஸ் அதிகாரி - திலகவதி.
  • ஐரோப்பாவின் முதல் பெண் மருத்துவர் - மேரி ஹீம் வாக்லின். (கி.பி. 1874).
  • இத்தாலி நாட்டின் முதல் பெண் மருத்துவர் - மரியா மாண்டி ஸாரி.
  • எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் பெண்மணி - ஜீங்கோ தாபேய். (ஜப்பான்).
  • பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி.
  • மிஸ்வேர்ல்டு பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் - ரீட்டா ஃபாரியா. (1969 ம் ஆண்டு).
  • முதன்முதலாக இந்திய சினிமாவில் நடித்த முதல் நடிகை - கமல்பாய் கோகலே.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கமல்ஜித் சந்து.
  • எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் சென்றடைந்த இந்திய வீராங்கனை - பச்சேந்திரிபால்.
  • முதன்முதலில் விண்வெளிக்கு சென்று வந்த பெண் - வாலென்டினா தெரஷ்கோவா. (ரஷ்யா).
  • முதன்முதலில் விண்வெளியில் நடந்து பரிசோதனைகளை மேற்கொண்ட விண்வெளி வீராங்கனை - ஸ்வெத்லானா சவீத்ஸ்காயா. (ரஷ்யா).
  • ஆசியாவின்முதல் விண்வெளி வீராங்கனை - சிகை முகை ( ஜப்பான்).
  • முதன்முதலில் விண்வெளியில் நடந்த அமெரிக்க பெண் - காத்தரின் சல்லிவன்.
  • முதன்முதலில் விண்வெளிக்கு சென்று வந்த இந்திய பெண் வீராங்கனை  - கல்பனா சாவ்லா.
kalpana chawla

  • இங்கிலீஷ் கால்வாயை முதன்முதலாக நீந்திக்கடந்த பெண் - கெர்ட்ரூட் எடர்லே கரோலின்.
  • ஆங்கிலக் கால்வாயை முதன்முதலாக நீந்திக்கடந்த இந்தியப் பெண் - ஆர்த்தி சாஹா.
  • கடல்வழியே உலகை சுற்றிய முதல் பெண்மணி - உஜ்வலா ராய்.
  • உலகின் முதல் பெண் விமானி - பரோனி ரேமன்டி டிரோசி.

உலகின் முதல் சாதனை பெண்களைப்பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் உலகின் முதன்முதல் சாதனைகளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா? தெரிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ மெதுவா ஒருதடவை தட்டுங்களேன்..

>> "முதன் முதல் சாதனைகள் - The First Achievements." <<

👊👊👊👊👊👊👊

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. சிறப்பானவர்களின் சிறப்பான தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  2. நமக்கு தெர்ந்தவர்களே நிறைய பேர் இருப்பார்கள் நம்நட்டில் இல்லங்களில் சாதனை புரிபவர் ஏராள்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் ... வாழ்வதற்கே கடினமாக இருக்கும் இந்த போராட்டங்கள் நிறைந்த உலகில் வாழ்வதே ஒரு பெரிய சாதனைதான். !!! வருகைக்கும், கருத்துகளை பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி ஐயா ...

      நீக்கு
  3. தகவல்கள் நன்று. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி !

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.