"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
முதன் முதல் சாதனைகள் - The First Achievements.

முதன் முதல் சாதனைகள் - The First Achievements.

The First Achievements.

மனிதர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்தும் சாகசங்கள் ஒருபக்கம் சாதனைகளாக சரித்திரத்தில் இடம்பிடிக்கும் அதேவேளையில் உலகில் முதன்முதலாக உருவாக்கப்படும் பதவிகள், கருவிகள், நிறுவனங்கள் மற்றும் சில முக்கிய நிகழ்வுகள் கூட வரலாற்றின் பக்கங்களில் முதல் சாதனைகளாக  இடம்பிடித்துவிடுகின்றன.


வரலாற்றின் பக்கங்களில் சாதனைகளாக இடம்பிடித்த அவ்வாறான நிகழ்வுகள் பல இருப்பினும், அதில் மிக சில  நிகழ்வுகளை மட்டும் "முதன்முதல் சாதனைகள்" என்னும் இப்பகுதியில் தகவல் துணுக்குகளாக பார்ப்போம் வாருங்கள் !!!

சாதனைகளின் முன்னோடிகள்.

  • அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி - ஜார்ஜ் வாஷிங்டன்.
  • இந்தியாவின் முதல் சபாநாயகர் - ஜீ .வி . மாவ்லங்கர். 
  • இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
  • இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி - டாக்டர் ராதாகிருஷ்ணன்.
  • பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் - முகமது அலி ஜின்னா.
  • முதன் முதலில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய பிரதமர் - புல்கானின். (Nikolay Aleksandrovich Bulganin).
  • முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர் - இராஜாஜி.
  • இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் வெளிநாட்டவர் - கான் அப்துல் காபர்கான்.
  • முதன்முதலில் கட்சி சார்ந்த ஆட்சிமுறை அறிமுகமான நாடு - இங்கிலாந்து.
  • முதன் முதலில் தேர்தல் வாக்குச்சீட்டை அறிமுகப்படுத்திய நாடு - ஆஸ்திரேலியா.
  • முதன் முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்ட நாடு - ஜப்பான்.
  • முதல் அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்திய ஆண்டு - 1974.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை - பிருதிவி.
  • உலகின் முதல் ஜெட் விமானம் - "ஜெர்மன் ஹெங்கல் 178L"
  • உலகிலேயே முதன்முதலாக விமானத்தை போரில் பயன்படுத்திய நாடு - இத்தாலி.
  • முதன் முதலில் நீரழிவு நோய்க்கு ஊசிமூலம் இன்சுலின் செலுத்தும் முறையை கண்டறிந்தவர் - சர் பிரெடரிக்.
  • முதன் முதலாக சீருடையை அறிமுகப்படுத்திய நாடு எது தெரியுமா? - இங்கிலாந்து.
  • முதன் முதலாக உலக மேசை பந்தாட்டப்போட்டி நடைபெற்ற நகரம் - இலண்டன். (1962 டிசம்பர்).
  • முதன் முதலாக மல்யுத்த விதிகளை முறைப்படுத்திய கிரேக்க மன்னன் - தீசியங்.
john adams

  • அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முதன் முதலில் வசித்த குடியரசு தலைவர் - ஜான் ஆடம்ஸ்.
  • முதன்முதலில் இந்திய கிரிக்கெட் குழுவில் இடம்பிடித்த தமிழக கிரிக்கெட் வீரர் - எம் .ஜே . கோபாலன்.
  • முதன் முதலாக போரில் பீரங்கியை பயன்படுத்தியவர் - மூன்றாம் எட்வர்ட். (கி.பி 1327).
  • முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுத்த ஐரோப்பியர் - அலெக்ஸாண்டர்.
  • முதன் முதலாக விண்ணில் நடந்த விண்வெளி வீரர் - அலக்ஸிலியானாவ். (ரஷ்யா).
  • ரஷ்யா அனுப்பிய முதல் செயற்கைக் கோள் - ஸ்புட்னிக் -1. (1957 ம் ஆண்டு ).
  • முதன் முதலாக விண்வெளியில் மிதந்த விண்வெளி வீரர் - அலெக்சி லியனாவ்.
  • முதன் முதலாக ஒன்றிற்கு மேற்பட்ட செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்திய நாடு - ரஷ்யா. (1978 ம் ஆண்டு 8 செயற்கை கோள்களை விண்ணிற்கு அனுப்பியது ).
  • தொலைநோக்கியை முதன்முதலில் உருவாக்கியவர்கள் - ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன் மற்றும் கலிலியோ கலிலி.
  • பிரதிபலிப்பு தொலைநோக்காடியை முதன்முதலில் உருவாக்கியவர் - நிக்கோலா சுக்சி. (Niccolo Zucchi).
  • வடதுருவத்தை முதன்முதலில் அடைந்தவர் - ராபர்ட் பியரி.
  • ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் கப்பல் - சாலஞ்சர்.
  • இந்தியாவில் முதன்முதலில் தொலைபேசி அலுவலகம் துவக்கப்பட்ட நகரம் - கொல்கத்தா.
  • முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் - ஆலம் ஆரா.
  • முதன் முதலில் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் - இன்  ஓல்டு  கலிஃபோர்னியா.
  •  முதன் முதலில் தயாரிக்கப்பட்ட குறும்படம் - ஒர்க்கர்ஸ் லீவிங் திலூமியர் ஃபேக்டரி.
  • முதன் முதலில் நினைவு தபால் வெளியிட்ட நாடு - கிரேக்கம். (1896 ம் ஆண்டு).
  • முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி .யூ . போப்.
  • இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட செய்திப்பத்திரிகை - பெங்கால்கெஸட்.

bengal gazette

  • முதன் முதலில் இந்தியாவில் செய்தித்தாளை தொடங்கியவர் - ஜேம்ஸ்கிக்கி.
  • இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பெண்கள் பத்திரிகை - இந்தியன் லேடீஸ்.
  • முதன் முதலில் அச்சு வடிவில் வெளிவந்த புத்தகம் - கட்டன்பர்ச் பைபிள். (1455)
  • இந்தியாவில் முதன்முதலில் திரைப்படக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு - 1946 (பூனே).
  • காகிதநாணயம் முதன்முதலில் அச்சடித்த நாடு - சீனா.
  • முதன் முதலில் நமக்கு மிகவும் பிடித்தமான குச்சி ஐஸ்க்ரீமை அறிமுகம் செய்தவர் - ஹேரிபர்ட்.
  • உலகின் முதல் கணித இயந்திரம் - அபாக்கஸ்.
  • உலகின் முதல் தானியங்கி கணினி - மார்க் - 1.
  • உலகின் முதல்  கணினி - எனியாக்.
  • முதல் வணிக கணினி - லியோ.
  • முதன் முதலாக விற்பனைக்கு வந்த கணினி - யூனிவாக்.
  • உலகின் முதல் சூப்பர் கணினி - இல்லியாக் - Ⅳ.
  • உலகின் முதல் வங்கி எது தெரியுமா ? - பேங்க் ஆஃப் ஸ்வீடன்.

உலகின் முதன்முதல் சாதனைகளைப்பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் உலகின் முதல் சாதனை பெண்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா? தெரிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ மெதுவா ஒரு தடவை தட்டுங்க...

>> "முதல் சாதனை பெண்கள் - Famous Firsts for Women." <<

💫💫💫💫💫💫💫

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.