"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பழமொழி பலவிதம் - Different Types of Proverbs.

பழமொழி பலவிதம் - Different Types of Proverbs.

பழமொழி பலவிதம்.

Palamoli Palavitham.

     "மணலில் முத்துக்களைப் போலவும். சுரங்கத்தில் தங்கத்தைப் போலவும் சரித்திரத்தில் பழமொழிகள் ஒளிவீசுகின்றன" என்றார் அறிஞர் ஏராஸ்மஸ் (Erasmus). 

உண்மைதான்.. பசுமரத்தாணிபோல் நெஞ்சில் ஆழமாகப் பதியக்கூடியவை பழமொழிகள். நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட தத்துவார்த்த சிந்தனையே பழமொழிகள் எனலாம்.



பழமொழிகள் பேச்சு வழக்கிலேயே வழங்கப்பட்டுவந்தன. பழமொழிகளுக்கு தனியாக இலக்கணம் எதுவும் கிடையாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற வரையறையும் கிடையாது. ஆனாலும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன. சொல்லவந்த கருத்தை "நச்"சென்று மனதில் பதியும் வண்ணம் சொல்லிச்சென்றன. எனவேதான் இதற்கு "எழுதா இலக்கியம்" என்றொரு பெயருமுண்டு.

பழமொழிகளில் வாழ்வியல் (Biology), சித்தாந்தம் (Ideology), கல்வி (Education), இலக்கியம் (Literature), மருத்துவம் (Medicine), விவசாயம் (Agriculture) மற்றும் நடைமுறை வாழ்க்கையை வேடிக்கையாக பேசும் நையாண்டி பழமொழிகள் என பல்வேறுபட்ட பழமொழிகள் உள்ளன. அவ்வாறான பல்வேறுபட்ட பழமொழி தொகுப்பினை இப்பதிவில் பார்ப்போம்.

பழமொழிகள் பலவிதம்.

  • அகதி பெற்றாள் பெண்பிள்ளை அதிர்ஷ்ட வெள்ளி பூராடமாம்.
  • சனியன் பிடித்தவள் சந்தைக்கு போனாலும் புருஷன் அகப்பட மாட்டான்.
  • சனிப்பிணம் தனிப்பிணமாக போகாது.
  • கொடும்பாவி சாகாதா? கோடைமழைதான் பெய்யாதா?..
  • சூத்திர வேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
  • சாஸ்திரம் பார்க்காத வீடு சமுத்திரம். சமுத்திரம் பார்த்த வீடு தரித்திரம்.
  • கணக்கனை பகைத்தாயோ காணி நிலம் இழந்தாயோ. 
  • அந்திமழை அழுதாலும் விடாது.
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

  • கதவை திற காற்று வரட்டும்னு பாத்தா காலங்காத்தால கண்ராவில்ல வந்து நிக்குது.

பழமொழி பலவிதம் - Different Types of Proverbs.
  • விரலுக்கு தக்க வீக்கம், மாவுக்கு தக்க பணியாரம்.
  • ஒருவராய் பிறந்தால் தனிமை, இருவராய் பிறந்தால் பகைமை.
  • ஓசைபெறும் வெண்கலத்தை காட்டிலும் ஓசைபெறா மண்கலம் ஒசத்தி.
  • குனிய குனிய குட்டுவான் குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டியவன் நடையை கட்டுவான்.
  • சருகை கண்டு தணலஞ்சுமா, எருவைக்கண்டுதான் பயிர் அஞ்சுமா.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல்லிப்போ சுகத்திற்கு சொல்லாமலே போ துக்கத்திற்கு.
  • வில் வல்லவனைவிட சொல் வல்லவனை வெல்லல் அரிது.
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய் கிடக்குமோ? நெருப்பு பந்தலில் மெழுகு பொம்மைதான் ஆடுமோ?
  • பட்டும் பட்டாடையும் பெட்டியில் இருக்கு, ஆனா காலணா காசுதான் கந்தையில் இருக்கு.
  • பந்திக்கில்லையாம் வாழைக்காயி பந்தக்காலில் ஆடுதாம் வாழைகாய் தோரணம்.
  • பனை நிழலும் நிழலாமோ? பகைவர் உறவும் உறவாமோ?
  • மொழி தப்பினால் வழி தப்பும்.
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
  • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  • தனக்கு தனக்குன்னா புடுக்கும் களை வெட்டும்.
  • தருமம் செய்தால் கருமம் தொலையும்.
  • எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும்.
  • ஆற்றாது அவரழுத கண்ணீர் நெஞ்சு நீத்தாருக்கு கூற்றாக மாறிவிடும்.
  • சாபங்கள் ஊர்வலத்தை போல எங்கே தொடங்கியதோ அங்கேயே முடிகின்றன.
  • பாடுபட்டவனுக்கு பத்துப்பல்லாம் இளிச்சவாயனுக்கு இருபது பல்லாம்.
  • தென்னையை வச்சவன் தின்னுட்டு செத்தான். பனையை வச்சவன் பாத்துட்டு செத்தான்.
  • கம்பங்கதிரை கண்டா கை சும்மா இருக்காது, மாமன் மகளை கண்டா வாய் சும்மா இருக்காது.
  • எல்லோருடைய தலையிலும் எட்டு எழுத்து. பாவி என் தலையில் மட்டும் பத்து எழுத்து.

nithyananda spy camera
  • மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே.
  • சோழியன் குடுமி சும்மாடு ஆடாது.
  • மகன் செத்தாலும் சாகட்டும்.. மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்.
  • இலை சாய்கிற பக்கம்தான் குலையும் சாயும்.
  • கேட்காத கடனும் பாழ். பார்க்காத பயிரும் பாழ் 
  • அடுப்பே வனவாசம் கடுப்பே கைலாசம்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • சொறிந்து தேய்க்காத எண்ணையும், கடைந்து சேர்க்காத வெண்ணையும் வீண்.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் கூடாது.
  • இங்கிதம் தெரியாதவர்க்கு சங்கீதத்தால் என்ன பயன்?
  • நித்தம் இட்டால் முத்தமும் சலிக்கும்.
  • சித்திரகுப்தனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?
  • அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
  • உத்தராயணம் என்றழுது உறியை கட்டிக்கொண்டு சாகாத.
  • பஞ்சாங்கம் படித்தால் பல சாஸ்திரம், போனா போகட்டுமுன்னு கஞ்சி குடிச்சா கலசம் நிறைய மூத்திரம்.
  • பசித்த கணக்கன் பழங்கணக்கையெல்லாம் பார்த்து தருகிறேன் என்றானாம்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈய பெருகும் பெருஞ்செல்வம்.
  • உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
  • சுக்கு கண்ட இடத்திலே முக்கி குழந்தை பெறுவாளா?
  • பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சான் பிள்ளைக்காரி பக்குவம் சொன்னாளாம்.
  • கீரை கடைக்கும் எதிர்கடை வேண்டும்.
  • பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்று சிறுக்கிறதுமில்லை. 
  • ஆடி வெள்ளிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து செருப்பாலே அடி.
  • உள்ளூரு பெண்ணும் அயலூரு மண்ணும் ஆகவே ஆகாது.
  • கம்புக்கு களை எடுத்த மாதிரியும்.. அப்படியே தம்பிக்கு பெண் பார்த்த மாதிரியும் இருக்கட்டுமேன்னுதான்.
maanga maanga rendu maanga

  • தனக்கே தகறாராம்... தம்பிக்கு தயிர்சோறாம்...
  • அடுத்தவன் கைய தலைக்கு வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்குத்தான் தூங்குறது?
  • கத்து வச்ச கைவேலை காலாகாலத்துக்கும் உதவுமுங்கோ.
  • ஆட்டிக்கிட்டு போற கைய கொஞ்சம் நீட்டிக்கிட்டு போனா போடற மகராசன் போட்டுட்டு போறான்.
  • வயசு வைக்கோலா போகுதாம், இந்த லட்சணத்துல கிழவி கின்னரம் வாசிக்குதாம்.
  • தனக்கு கொஞ்சம் ஆயாசமா (களைப்பு) இருக்குன்னு சொல்லி பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டானாம்.
  • கேணையன் கிழித்த துணி கோவணத்துக்குதான் ஆச்சு.
  • அடிக்காம அழுவுற பொம்பளையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்புறது வீண்.
  • கொடுவா புடி புடிச்சாதான் அருவா பிடி கிடைக்கும்.
  • வெண்கல பூட்டை ஓடச்சி விளக்குமாத்த திருடிக்கிட்டு போனானாம்.
  • பூசாரி பொய்யும், கவி புனைவோன் பொய்யும், ஆசாரி பொய்க்கு அரை பொய் ஆகாது.
  • உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு.
  • தானே குளிக்கும் குழந்தை வயிற்றை மட்டுமே தேய்க்குமாம்.
  • அதிகாலையில் எழுந்தவனும் இளவயதில் மணந்தவனும் எக்காலத்திலும் வருந்தியதே இல்லை.
  • அண்டையிலே காவேரி ஓடினாலும் முழுகவே மாட்டாளாம் மூதேவி.
  • ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.

Different types Proverb.
  • ஆண்டிகள் எழுந்து குண்டியை தட்டினால் பறப்பது அத்தனையும் சாம்பலே சாம்பலே .
  • பாலினால் ஒருமுறை நாக்கை சுட்டவன் மோரை கண்டாலும் ஊதியே குடிப்பான்.
  • வைய வைய வைரக்கல்லாம், திட்ட திட்ட திண்டுக்கல்லாம்.
  • சித்திர வேலைக்காரனுக்கு கை உயர்த்தி, செந்தமிழ் புலவனுக்கோ நா உயர்த்தி.
  • கடன்கிடன் வாங்க நான் கும்பிட , நீ யார் கூத்தி காலிலே விழுந்து கும்பிட?
  • தம்பி போவது கால்நடையாக ஆனால் பேச்சு மட்டும் பல்லக்கில் போகுது.
  • ஆறு காதம் என்கின்றபோதே கோவணத்தை அவுத்து குடுமியில் கட்டிக்கொண்டானாம்.
  • உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் என்றுமே அவஸ்தைதான்.
  • அரசமரத்தடி புள்ளையாரே அடியேனுக்கும் சேர்த்து ஒரு பொண்ணு பாருமய்யா.
  • தேரை இழுத்து தெருவில் விட்ட கதைபோல.
  • அரிசி சிந்தினால் அள்ளி விடலாம். வார்த்தை சிந்தினால் வாரத்தான் முடியுமா?
  • சிங்கார சிறுக்கி ஆளாகறதுக்கு முன்னாடியே ஆம்பிளைப்புள்ளை வேணுமின்னு அரசமரத்தை சுத்தி வந்தாளாம்.
  • ஒழுவுற வீட்டுல இருந்தாலும் இருக்கலாம், அழுவுற வீட்டுல இருக்கவே கூடாது.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
  • அண்ணண் பிள்ளையை நம்புறதைவிட தென்னம்பிள்ளையை நம்பு.
  • பகையாளி குடியை உறவாடி கெடு.
  • அறப்படித்தவன் அங்காடி போனால் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான்.
  • பெற்றவள் வயிற்றை பார்ப்பாள், பெண்சாதி மடியை பார்ப்பாள்.
  • கவலைக்கு மருந்து அதனை காலடியின் கீழ் போடுவதுதான்.
  • வானத்தில் இருந்த சனியனை ஏணியை வைத்து இறக்கி விட்டாளாம்.
  • "விதியே"ன்னு போன விதியை.. வீட்டுக்கு கூட்டிட்டுவந்து கறி விருந்து வச்சாளாம் சிங்கார சிறுக்கி.
  • சுத்தி சூரமுள்ளு காதாதூரம் காரமுள்ளு.
  • ஐயர் முனகல் அத்தனையும் வேதம்தாங்கோ.

Different types Proverbs.
  • கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.
  • ஆதியில் வந்தவ வீதியில் நிற்க, அந்தியில் வந்தவ பந்தியில் இருக்காளாம் 
  • குத்தாலத்துல குளிக்க போக கும்பகோணம் வந்ததுமே துணியை அவுத்தானாம்.

➢➣➢➣➢➣➢➣

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.