"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா ஆரான்டியாகா - Heliconia aurantiaca.

ஹெலிகோனியா ஆரான்டியாகா - Heliconia aurantiaca.

ஹெலிகோனியா ஆரான்டியாகா.

Heliconia aurantiaca.

தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா ஆரான்டியாகா - Heliconia aurantiaca.

தாவர பிரிவு :- மூடு விதை தாவரங்கள் - Angiosperms.

குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

இனம் :- ஆரான்டியாகா - Aurantiaca.

aurantiaca.

பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

வரிசை :- Zingiberales.

பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.

வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்ப மண்டல மழைக்காடுகள்.

    Heliconia aurantiaca.

    தாயகம்.

    தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோ (Maxico), பெலிஸ் (Belize), நிகரகுவா (Nicaragua), கோஸ்டாரிகா (Costa Rica) மற்றும் குவாத்தமாலாவிலுள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் இயற்கையாகவே வளருகின்றன.

    வளரும் நிலப்பகுதிகள்.

    தற்காலங்களில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. இது கண்களை பறிக்கும் கவர்ச்சியான ஆரஞ்சு மற்றும் மிதமான மஞ்சள்நிற பூக்களை கொண்டுள்ளதால் வீட்டு தோட்டங்களில் மிக முக்கியமான அலங்கார தாவரமாக வளர்க்கப்பட்டு வருகிறது.

    தாவரத்தின் தன்மை.

    மிகவும் குளிர்ச்சி பொருந்திய தாவர இனம். இது 4 முதல் 6 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. ஏழிலிருந்து பதினாறு அங்குல அளவில் நீள்வட்ட பசுமையான இலைகளை கொண்டுள்ளன. வீடுகளில் இதனை வெளிச்சம் உள்ள இடங்களிலும், மாடித்தோட்டங்களில் பூந்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம் .

    Heliconia aurantiaca.
    Heliconia aurantiaca.

    மலர்களின் தன்மை.

    மிகவும் ரம்மியமான மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற பூ மடல்களையும், அதனுக்குள்ளே பசுமை கலந்த மஞ்சள்நிற மலர்களையும் கொண்டுள்ளன.

    மலர்கள் நீண்ட நாட்கள் வாடிப்போகாமல் இருக்கும் தன்மையுடையது.  இதன் பூ மடல்கள் சுமார் 8 அங்குல நீளம் உள்ளவையாக உள்ளன. இதனுள்ளே இளஞ்சிட்டொன்று சிறகு விரித்து பறக்க எத்தனிப்பது போன்ற வடிவில்  மலர்கள் இதழ் விரித்து நிற்பது கண்கொள்ளாக்காட்சி.

    இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறம்வரை பலவாறு வர்ணஜாலம் காட்டிநிற்பது அருமையிலும் அருமை. இந்த எழிலுக்காகவே தற்காலங்களில் வீடுகளில் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன. குளிர் பொருந்திய வசந்தகாலங்களில் பூக்கக்கூடியது.

    இனப்பெருக்கம்.

    சிறிய ரக வேர் தண்டு கிழங்குகளில் கிளைத்து வளரும் கன்றுகள்  மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது.

    "ஹம்மிங்" (Humming Bird) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

    H . aurantiaca.

    காய்களின் தன்மை.

    இதன் காய்கள் பச்சை மற்றும் வெளிறிய பழுப்பு நிறங்களிலும் கனியும்போது கரு நீலநிறமாகவும் மாறுகின்றன.

    பழங்கள் சிறியவை 0.8 செ.மீ விட்டம் கொண்டவை. இப்பழங்கள் சில ஊர்வனவகை உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக பயன்படுகின்றன.

    பொதுவாக ஹெலிகோனியா வகை தாவரங்கள் அனைத்துமே சுமார் 1 முதல் 3 எண்ணிக்கையிலான கடினமான மேலோடுகளைக் கொண்ட  விதைகளை பெற்றுள்ளன.

    பயன்கள்.

    இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இதன் கவர்ச்சியான மலர்களுக்காகவே வீட்டுத்தோட்டங்களிலும் இது பரவலாக  அழகுச்செடிகளாக வளர்க்கப்பட்டுவருகிறது.

    சாகுபடி.

    வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாக பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம். 

    இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 6 முதல் 12 மாதங்கள்வரை ஆகலாம். எனவே வேர்பகுதிகளில் கிளைத்து வளரும் இளங்கன்றுகள் மூலமாக சாகுபடி செய்வதே எளிதானதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது வெளிச்சத்தை விரும்பும் தாவரமாகையால் சூரிய வெளிச்சம் இதற்கு மிகமிக அவசியம். நேரடியான சூரிய ஒளி தாவரத்தின் மீது படவேண்டும் என்கின்ற கட்டாயமில்லை. சூரிய வெளிச்சம் மட்டுமே போதுமானது.

    வெளிச்சம் இல்லாத அதே வேளையில் அதிக அளவு நிழலுள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் தாவரங்களின் இலைகளிலுள்ள பசுமை தன்மை மறைந்து வெளிறிப்போகும் நிலையை காணமுடிகிறது. மேலும் இலைகளின் எண்ணிக்கைகளும் குறைவதுடன் இலைகள் பெருமளவில் உதிர்ந்து போகும் நிலையும் ஏற்படுகின்றன.

    அதுமட்டுமல்லாது, பூக்களும் மிக குறைவாகவே பூக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. எனவே போதுமான சூரியஒளி தாவரங்களுக்கு கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

    நீர்ப்பாசனம்.

    இது பயிர் செய்யப்படும் நிலம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வேர்ப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் "வேரழுகல்" (Root rot disease) நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    வாரம் 1 அல்லது 2 முறை நீர்பாய்ச்சினாலே போதுமானது. நல்ல தரமான பூக்கள்  வேண்டுமெனில் மக்கிய தொழுஉரம் இடவேண்டியதும் அவசியம். உரங்கள் நீரில் கரைக்கப்பட்டு அதன்பின் பயன்படுத்தினால் சிறப்பான பலனை பெறலாம்.

    நோய் பாதிப்பு.

    இதற்கு நோய்களை எதிர்த்துநிற்கும் திறன் குறைவாகவே உள்ளது. எனவே இது பலவித பூஞ்சாண தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்.

    இதற்கு நோய்களை எதிர்த்துநிற்கும் திறன் குறைவு என்றாலும் கவர்ச்சிகரமான மலர்களைத் தருவதால் மக்களால் அதிகளவு விரும்பப்படும் தாவர வரிசைகளில் இது முன்னிலை வகிக்கிறது.

    பொதுவாக சிலந்தி பூச்சிகளால் இத்தாவரம் அதிகளவு பாதிப்படைவது உண்டு. இதனால் இதன் இலைகள் மஞ்சளாக மாறுதலடையும். பூக்களின் தரமும் குறையும்.

    சிலந்தி பூச்சிகளின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சிலந்திப்பூச்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் ஒரு சிலந்திப்பூச்சியானது முப்பதே நாட்களில் 200 முட்டைகள்வரை இடுகின்றன. இதனால் மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இப்பூச்சியானது அனைத்து செடிகளுக்கும் பரவுவதற்கு வழி ஏற்படுகின்றன. எனவே விரைந்து இதனை ஒழிக்க முயற்சியெடுக்க வேண்டியது அவசியம்.

    போதிய அளவு பராமரிப்பும், நீர்ப்பாசனமும் இருக்கும்பட்சத்தில் பொன்னகை போன்ற இதன் இதழ் அழகில் நாமும் புன்னகை இதழ்களை மலரச்செய்யலாம்.

    இந்த ஆரான்டியாகாவைவிட "சிட்டகோரம்" என்னும் ஹெலிகோனியாவானது கொள்ளை அழகு. கண்ணுபட கூடாது என்பதற்காக திருஷ்ட்டி பொட்டு வேறு வைத்துள்ளது இன்னும் அழகோ அழகு!! இந்த அழகு தேவதையைப்பற்றி அறிந்துகொள்ள விரல்களால் சொடுக்குங்க.

    >>"ஹெலிகோனியா சிட்டகோரம் - Heliconia psittacorum."<<

    💫 💫 💫 💫 💫 💫 💫

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.