"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா கரிபியா - Heliconia caribaea in Tamil.

ஹெலிகோனியா கரிபியா - Heliconia caribaea in Tamil.

ஹெலிகோனியா கரிபியா.

Caribaea.

தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா கரிபியா - Heliconia caribaea.

பொதுவான பெயர் :- கரீபியன் ஹெலிகோனியா, காட்டு வாழைமரம்.

தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

Heliconia caribaea.


    Heliconia caribaea.

    இனம் :- கரிபியா - Caribaea.

    வரிசை :- Zingiberales.

    பருவநிலை :- வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தாவரம்.

    வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள்.

    தாயகம் :- 

    • கியூபா (Cuba),
    • ஹைட்டி (Haiti),
    • டொமினிகன் குடியரசு (Dominican Republic),
    • புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico),
    • ஜமைக்கா (Jamaica),
    • லீவர்ட் தீவுகள் (Leeward Isles),
    • விண்ட்வார்ட் தீவுகள் (Windward Isles)

    ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டுள்ளன.

    வகைகள்.

    இதில் 15 க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் அதாவது இனங்கள் உள்ளன. அவை.

    • C.Black Magic
    • caribaea yellow
    • C.Purpurea
    • C.Chartreuse
    • C.Bubble Gum
    • Caribaea Cream
    • Caribaea Pink
    • C.Criswick
    • C.Richmond Red
    • C.Purpurea
    • C.Manoa midnight
    • C.kawauchi
    • C.Jacquinii

    இவைகளைப்போல் இன்னும் சில இனங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே உள்ள படங்களில் காணலாம்.

    Heliconia caribaea
    Types of Heliconia caribaea.

    தாவரத்தின் தன்மை.

    மேற்கிந்திய தீவுகளில் தாராளமாகக் காணப்படும் இனம். 7 அடிமுதல் 15 அடி உயரம்வரை வளர்கிறது. அடர் பச்சை இலைகளை கொண்டது. இதன் இலைகள் வாழை இலைகளைப்போலவே காட்சி தருவதோடு அதிகப்படியாக 5 அடி நீளம்வரை இருக்கின்றன. இலையினுடைய காம்புகள் மிகவும் கவர்ச்சியான தோற்றத்துடன் சுமார் 4 முதல் 5 அடிகள் நீளம் கொண்டவையாக இருக்கின்றன.

    இந்த கரிபியாவின் அடிப்புற தண்டுகளும், இலைகளும் ஒருவித வெள்ளை நிறமான மெல்லிய மெழுகு பூச்சுகளை கொண்டுள்ளன. இந்த மெழுகுப் பூச்சானது இத்தாவரத்தை சிறிய ரக பூச்சி மற்றும் பூஞ்சை தாக்குதல்களிலிருந்து இத்தாவரத்தை ஓரளவு பாதுகாக்கின்றன.

    Heliconia caribaea.

    மலர்களின் தன்மை.

    இது பிப்ரவரி (February) முதல் நவம்பர் (November) வரை பூக்கின்றன. நடவு செய்த இரண்டாவது ஆண்டுகளில் பூக்க ஆரம்பித்துவிடும்.

    இத்தாவரத்திற்கு போதிய அளவு சூரிய வெளிச்சம் தேவை. சூரிய வெளிச்சம் இல்லாமல் நிழலில் வளரும் சூழ்நிலை ஏற்பட்டால் பூக்கும் தன்மை வெகுவாக குறையும்.

    மலரை பொதிந்துள்ள மடல்கள் 10 முதல் 14 என்ற எண்ணிக்கையில் இருக்கும். இவைகள் 6 முதல் 8 அங்குல நீளம் கொண்டவை.  இது பச்சை தொடங்கி அடர் சிவப்புநிறத்தில் இருக்கும். "Caribaea Cream" போன்ற சில இனங்கள் வெளிர் மஞ்சள் மற்றும் மஞ்சளும் சிவப்பும் கலந்து இருக்கும்.

    மடல்களினுள் இருக்கும் பூக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன. இதில் சில இனங்கள் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலும், வேறுசில இனங்கள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலும், இன்னும் சில இனங்கள் ஆண்டு முழுவதும்  பூக்கும்.

    இந்த பூக்களை மரத்திலிருந்து வெட்டியெடுத்தபின்பும் முறையாக பாதுகாத்துவர இரண்டு வாரங்களுக்கும்மேல் வாடாமல் இருக்கும் தன்மைகொண்டது.

    இனப்பெருக்கம்.

    வேரில் கிளைக்கும் இளங்கன்றுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது.

    "ஹம்மிங்" (Humming) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

    காய்களின் தன்மை.

    இதன் காய்கள் மஞ்சள் நிறமானவை. பின் கனிகளாக கனியும்போது நீல நிறத்திற்கு மாறுதலடைகின்றன. பழங்களில் அதிகப்படியாக மூன்று விதைகள்வரை உள்ளன. பழங்களை உண்ணும் பறவைகள் மூலம் விதைகள் பிற இடங்களுக்கும் பரவி இவ்வினம் தழைக்கிறது.

    வளரும் நிலப்பகுதிகள் :- தற்காலங்களில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.

    சாகுபடி.

    வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு கன்றுகளை தனியாகப் பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம். 

    இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 12 மாதங்கள்வரை ஆகலாம்.

    Types of  caribaea.
    Types of H.caribaea.

    இது பயிர் செய்யப்படும் நிலம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வேர்ப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் "வேரழுகல்" (Root rot disease) நோய் ஏற்படும்.

    நல்ல தரமான பூக்கள் வேண்டுமெனில் மக்கிய தொழுஉரம் இடவேண்டியது அவசியம். ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் 5 அடி இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

    பயன்கள்.

    இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. 

    மேலும், இது இயற்கையாக வளரும் தீவுகளில் அங்குள்ள மக்களால் இதனுடைய இளந்தளிர்கள் உணவாக சமைத்துண்ணப்படுகிறது.

    இந்த ஹெலிகோனியா தாவரங்களைப்பற்றிய சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள அடுத்துள்ள தொடுக்கை சொடுக்கவும்.

    >>"ஹெலிகோனியம் அறிமுகம் - Heliconia Introduction in Tamil."<<

    🌺 🌺 🌼 🌼 🌺 🌺

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.