"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
விலங்குகளால் துலங்கும் பழமொழிகள் - Animals Proverbs.

விலங்குகளால் துலங்கும் பழமொழிகள் - Animals Proverbs.

Animals proverbs.

Vilankukalal thulangum palamoligal.

நம் முன்னோர்களின் அறிவுக்களஞ்சியமாகவும், அனுபவ களஞ்சியமாகவும் விளங்குவது பழமொழிகள் (Proverbs). நம்மை சுற்றி இருக்கும் விஷய ஞானங்களை அடிப்படையாகக்கொண்டு கடினமான விஷயங்களைக்கூட எளிதாக புரியவைப்பவை பழமொழிகள்தான்.

பறவைகள் (Birds), விலங்குகள் (Animals), இயற்கை (Natural) மற்றும் சக மனிதர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் அன்றாட செய்கைகளை அடிப்படையாகக்கொண்டு பழமொழிகள் மூலம் வாழ்வியல் விளக்கப்படுகின்றன.

விலங்குகளை அடித்தளமாகக்கொண்டு உலாவரும் பழமொழிகளை முன்பொரு பதிவில் "விலங்குகளும் பழமொழிகளும் - Vilangugal Palamoligal - Animals and proverbs." என்னும் தலைப்பின்கீழ் பார்த்தோம். தற்போது "விலங்குகளால் துலங்கும் பழமொழிகள் - Animals Proverbs." என்னும் தலைப்பின் கீழ் மேலும் சில விலங்குகள் சார்ந்த பழமொழிகளை காண்போம் வாருங்கள்..

நாய் கொண்டு போன பானை.

  • புதிதாக பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சுவதில்லை.
  • யானைகளுக்கு உதவி செய்யும் உலகம் எறும்புகளை மிதித்தே கொன்றுவிடும்.
  • நாய்களின் பிராத்தனை பலித்துவிட்டால் வானத்திலிருந்து எலும்புகள்தான் மழையாகப் பொழியுமாம்.
  • ஆறு நிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கிதான் குடிக்க வேணும்.
  • இளங்கன்று பயமறியாது.
  • அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னாளில் சிறந்த குதிரைகளாக பரிணமிக்கின்றன.
  • பன்றி படையோடு போகும் .. ஆனா என்றுமே சிங்கம் சிங்கிளாகத்தான் போகும் 😌😄.. ( மாப்பு .. வச்சுட்டாண்டா ஆப்பு).
  • அதிர்ஷ்டம் என்பது பசுமாடு போன்றது சிலருக்கு முகத்தை காட்டுகிறது. பலருக்கு வாலை நீட்டுகிறது.
  • இரு முயல்களை நீ துரத்தி சென்றால் முயல்களுக்கு கொண்டாட்டம்.. ஆனால் உனக்கோ திண்டாட்டம்.
  • கழுதையை அறிந்தல்லோ காலை கொறச்சான். குதிரையை அறிந்தல்லோ கொம்பை கொறச்சான்.
  • பகலிலே பசுமாடு பிடிக்க தெரியாதவன் இரவிலே எருமை மாட்டை பிடித்தானாம்.
Monkey scabies.

  • குரங்குக்கு சிரங்கு வந்தால் திண்டாட்டம் என்னவோ சிரங்குக்குதான்.
  • யானையோ ஆசார வாசலை காக்கும், பூனையோ புழுத்த மீனைத்தான் காக்கும்.
  • ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுததாம்.
  • ஆனைக்கு இலைக்கறி, பூனைக்கோ பொறிக்கறி.
  • ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லையாம்.
  • யானையின் முன்னே முயல் வந்து முக்கினதாம்.
  • சோற்றில் கிடக்கும் கல்லை எடுக்க கழியாதவன் சேற்றில் சிக்கிய எருமையை தூக்குவானா?
  • ஆணாய் பிறந்தால் அருமையாம் அதுவே பெண்ணாய் பிறந்தால் எருமையாம்.
  • தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?
  • புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.
  • ஆடு தீண்டாப்பாளையை மாடு தீண்டுமா?
  • நாய் என்று நினைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் பேயை சொறிந்து விட்டானாம்.
  • நீர் உள்ள மட்டுமே மீன் குஞ்சும் துள்ளும்.
  • கருவாடு கரைஞ்சா சட்டியோட, சிறுபிள்ளை கரைஞ்சா ஜட்டியோட.
  • கொல்லனிடம் சென்றால் குரங்குகூட மல்லுக்கட்டித்தான் நிற்கும்.
  • குரங்கானாலும் நல்ல குலத்திலே கொள்ளல் வேண்டும்.
  • கள் குடித்த குரங்கை பேய் பிடித்து ஆட்டியது போல்.
  • கள் குடித்த குரங்கை தேள் கொட்டியதுபோல.
  • குரங்கு பிணமும் குறவன் சுடுகாடும் காண்பதரிது.
  • மந்தி மயிரை மருந்துக்கு கேட்டால் அது மரத்திற்கு மரம்தான் தாவும்.
  • ஆடு ஊடாடினால் காடு விளையாது.
  • காடு கெட ஆட்டை விடு.
  • கோழி மிதிச்சு குஞ்சும் சாகாது. காகம் கொத்தி மாடும் சாகாது.
  • யானைக்கு வயிறு நிறைந்தாலும், ஆட்டுக்கு வயிறு நிறையாது.
  • உழுகிற மாடும் , உள்ளூர் மருமகனும் ஒண்ணுதான்.
  • பெருமைக்கென்று மாவு இடிச்சு அதை எருமைக்கில்ல வச்சாளாம்.
  • ஆடு என்னமோ மலையேறி மேஞ்சாலும் குட்டி என்னவோ கோனானுக்குதான் சொந்தம்.
  • வாக்கு கெட்ட மாட்டை நாக்கு ஒட்ட தறி.
  • வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்.
  • ருசி கண்ட பூனை உரிக்கு உரி தாவுமாம்.
  • யானை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் பூணூலுக்கும் ஆகாது.
  • மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது.
  • புலி பசித்தாலும் புல்லை புசிக்காது.
  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்.
  • ஏண்டா புளியமரத்தில் ஏறினாய் என்றால் பூனைக்குட்டிக்கு புல் பறிக்க என்றானாம்.
  • கன்றுக்குட்டியை கட்டச் சொன்னார்களா? இல்லை கட்டுத்தறியை பிடுங்க சொன்னார்களா?
The pot that went with the dog.

  • நாய் கொண்டு போன பானையை யார் கொண்டு போனால் என்ன?
  • நண்டை சுட்டு வைத்துவிட்டு அதற்கு பக்கத்தில் நரியையும் காவல் வைத்தானாம்.
  • நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.
  • முன்னேற துடிப்பவனுக்கு எலியும் வழியைச் சொல்லும்.
  • ஒநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் கற்றுத்தரும்.
  • நாயார் இல்லாத ஊரில் நரியார்தான் நாட்டாமை.
  • நாய்க்கடி போதாதென்று கூடவே செருப்படியும் பட்டானாம்.
  • நாயின் சகவாசம் சீலையைத்தான் கிழிக்கும்.
  • பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து.
  • நாய் அறியுமா நறுநெய்யின் சுவையை?
  • நாயை மடியில் வைத்து கொஞ்சினாலும் கூட அது உன் வாயைத்தான் நக்கும்.
  • பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
  • குதிரை இல்லாத நாட்டில் கழுதைதான் அரசாளும்.
  • ஓணான் ஒட மரத்துல ஏறிச்சுதுன்னு.. பண்ணி பனைமரத்துல ஏறிச்சுதாம்.

இதுவரை விலங்குகள் சார்ந்த பழமொழிகளை பார்த்தோம். பறவைகளை சார்ந்து உரைக்கப்படும் பழமொழிகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமா? கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்..

"பறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs".


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. சிறப்பான பழமொழிகள். சில அறிந்தவை, பல அறியாதவை. தொகுப்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பலவற்றை முதன்முறையாக அறிந்து கொள்கிறேன்...

    அருமை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ! தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மகிழ்ச்சி !!

      நீக்கு
  3. அருமையான தொகுப்பு, வியப்பு. சில கேட்டதுண்டு பல இப்போதுதான் . கருவாடு கரைஞ்சால் சட்டியோடு சிறு பிள்ளை கரைஞ்சா "ஜட்டியோடு "
    இதுவும் பழமொழி என்றால் ஜட்டி நம் முன்னோர்கள் காலத்திலேயே வழங்கப்பட்ட சொல்லோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ! வருகைக்கு நன்றி !! உங்களின் சந்தேகம் எனக்கும் நியாயமாகவே படுகிறது ... ஒருவேளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாடி வெள்ளைக்காரன் இந்தியாவில் ஜட்டியை அறிமுகப்படுத்தி தன் வியாபாரத்தை முதன்முதலாக தொடங்கிய புதிதில்!!! .... நம்மவர்கள் வெறுப்பில் உதிர்த்த பழமொழியாக இருக்கமோ?? ...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.