"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அனுபவம் வாய்ந்த பழமொழிகள் - Experienced Proverbs.

அனுபவம் வாய்ந்த பழமொழிகள் - Experienced Proverbs.

பொன்மொழி தந்த பழமொழிகள்.

வாழ்க்கையின் ஊடாக தாங்கள் கண்டறிந்த அனுபவங்களையே பழமொழிகளாக சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.

தாம் கண்ட அனுபவங்களை பாமரனுக்கும் புரியும்வண்ணம் சுருங்க சொல்லி விளங்கவைப்பதே பழமொழியினுடைய சிறப்பம்சமாகும். இதனையே சான்றோர்கள்...

"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்"

என குறிப்பிடுகின்றனர்.

இந்த அனுபவ மொழியான பழமொழியானது "மூதுரை" மற்றும் "முதுமொழி" என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுவருகிறது.

நம்மை நல்வழிப்படுத்தும் மூதுரையான முதுமொழிகளில் சிலவற்றைப்பற்றி இங்கு பார்ப்போம்...

முதுமொழி என்னும் மூதுரை.

  • களர் உழுது கடலை விதை.
  • களர்கெட பிரண்டை இடு.
  • காணி ஆசை கோடி கேடு.
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • வஞ்சகம் நெஞ்சை பிளக்கும்.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • பங்காளிக்கு பல்லிலே விஷம்.
  • அடி நொச்சி, நுனி ஆமணக்கா?
  • இரக்க போனாலும் சிறக்கப் போ.
  • அகல இருந்தால் பகையும் உறவு.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • சருகைக் கண்டு தணலஞ்சுமா.
  • குணம் இல்லா வித்தை அவித்தை.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்.
  • சொல் வல்லவனை வெல்லல் அரிது.
  • அவலை முக்கி தின்னு, எள்ளை நக்கி தின்னு.
  • இளமையில் சூதாடி, முதுமையில் தெருக்கோடி.
  • ஊணினால் உறவு, பூணினால் அழகு. (உணவினை பகிர்ந்தால் உறவு பலப்படும். அன்பை பகிர்ந்தால் அந்த உறவு அழகாகும்).
  • ஊதி அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி.
  • அட்ட தரித்திரம் ஆத்தாள் வீடு.. அதிலும் தரித்திரம் மாமியார் வீடு.
  • ஆற்றுப்பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகைதான்.
  • முட்டாளிடம் முத்தம் பெறுவதைக்காட்டிலும் அறிவாளியிடம் அறை வாங்குவது மேல்.
  • அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காயெல்லாம் ஒரு சுமையா?
  • அண்டைவீட்டு பார்ப்பான் சண்டை மூட்டி தீர்ப்பான்.

  • அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிரை பிடுங்கிடுமா?
  • கொஞ்சம் தெரிந்தவன் அதையே  திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பான்.
  • மாரத்தானே ஆனாலும் குழந்தையின் ஒட்டம் என்னவோ தாய் வரைக்கும்தான்.
  • முதலில் வயிற்றை நிரப்பிவிட்டு முதுகில் பாரத்தை ஏற்று.
  • அழுக்கைத் துடைத்து மடிக்குள் வைத்தாலும் புழுக்கை குணம் போகவே போகாது.
  • ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவன் ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.
  • நாணமில்லா கூத்தியர்க்கு நாலுபக்கமும் வாசல்.
  • அண்ணாவி பிள்ளைக்கு பணம் பஞ்சமா?.. அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?
  • அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும்.
  • கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்.
  • இழுக்கத்தின் மிக்க இழுக்கில்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வில்லை.
  • பேராசைகொள்வது தரித்திரம் அது என்றுமே தீராத உபத்திரம்.
  • தலை முழுகினால் எண்ணெய் போகும். எழுத்து போகுமா?
  • மருந்து கால் மதி முக்கால், மந்திரம் கால் தந்திரம் முக்கால்.
  • அவனவனுக்கு ஒருகவலை, நம் ஐயாவிற்கு மட்டும் பத்து கவலை.
  • தன்னாலே தான் கெட்டால், அதற்கு அண்ணாவி என்ன செய்வார்?
  • அத்துமீறி போனான் முடிவில் பித்துக்குளி ஆனான்.
  • வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்போல் நூற்கலாம்.
  • இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டு கை சும்மா இருக்குமா?
  • இடக்கனுக்கு வழி எங்கே?... கிடக்கிறவன் தலைமேலே...
  • இளமையில்தான் அடக்கம் வேண்டும், முதுமையில் தானே அடங்கிவிடும்.
  • அந்தணர் மனையில் சந்தணம் மணக்கும்.
  • உற்றதை சொன்னால் அற்றது பொருந்தும்.

  • இரும்பே பறக்கும்போது துரும்புமட்டும் துயில்கொள்ளுமா?
  • அத்தான் செத்தால் மயிராச்சு.. அவர் கம்பளி மெத்தை நமக்காச்சு.
  • அம்மா குதிர்போல, அய்யா கதிர்போல.
  • அக்கா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒரு கேடா?
  • இறைத்த கிணறே ஊறும். இறையா கிணறோ நாறும்.
  • எள்ளு செடியை பிடுங்க ஏலேலோ பாட்டு கேக்குதாம்.
  • ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...
  • காதுக்கு கடுக்கன் காளைக்கு அழகு.
  • இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?
  • பகடிக்கு பணம் பத்து! பரந்தாமனுக்கோ ஒருகாசு.
  • சோற்றுக்கில்லா சுப்பன் சொன்னதெல்லாம் கேட்பான்.
  • ஊரோட உடன் ஓடு, தேரோட தெருவோடு.
  • அரைக்காசுக்கு போன மானம், ஆயிரம்காசு கொடுத்தாலும் திரும்ப வராது.
  • பல வைத்தியர்களின் மருத்துவம் மரணத்தையே பரிசளிக்கும்.
  • அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோற்றில் பங்கும் கேட்பான்.
  • அஞ்சுபணம் கொடுத்தும் கஞ்சி தண்ணிதான் குடிச்சானாம்.
  • அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை... (அட்றா சக்க... அட்றா சக்க).
  • வெள்ளத்தோடு வந்ததெல்லாம் வடியும்போது சென்றுவிடும்.
  • அரண்மனை வாயிற்படிதான் அதிகமாக வழுக்கும்.
  • அடிக்கிறவன் பின்னாலே போனாலும் நடிக்கிறவன் பின்னாலே போகாதே.
  • குல்லாவுக்காகப் பிறந்தவன் மகுடத்திற்கு ஆசைப்படலாமா?
  • சாகாத விதி உள்ளவனுக்கே மருத்துவம் பலிக்கும்.
  • தென்னைமரத்து நிழலும் சரி, சின்னவீட்டு உறவும் சரி.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் மட்டும் பொன்னம்மாள்.
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயைத் தாண்டத்தான் கால் இல்லை.
  • மாரி பொய்த்தால் கடல் திடலாகும், மாரி பெய்தால் திடலும் கடலாகும்.
  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு போதும்.

  • கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.
  • கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே சிறந்தது.
  • ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
  • வேகிற வீட்டுக்கு வெட்டுகிறான் கிணறு.
  • உழக்கு நெல்லுக்கு உழைக்க போய் பதக்கு நெல்லை பறிகொடுத்தானாம்.
  • அகல் வட்டம் பகல் மழை, அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை.
  • அடுப்பு மூன்றானால் அம்மாபாடு திண்டாட்டம்தான்.
  • வரும்விதி வந்தால் படும்விதி படத்தான் வேண்டும்.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரைதான் குறையுமா?
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கப்பல் ஏறி பட்டகடன், கொட்டை நூற்றா முடியும்.
  • கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது.
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல்லாடாதே.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?
  • காப்பு சொல்லும் கைகளின் மெலிவை.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • காலுக்குதக்க செருப்பும்கூலிக்குத் தக்க உழைப்பும் வீறுநடை போட செய்யும்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமா நுண்சீலை.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடிக்கிறது கூழ் கொப்பளிக்கிறதுக்கு பன்னீரா?

  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியே போகாது.
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குற்றமுள்ள நெஞ்சும், குறும்பியுள்ள காதும்  குறுகுறுக்கும்.
  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று, கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது.
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்.
💑 💑 💑 💑 💑 💑

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், தங்களின் கருத்து பதிவிடலுக்கும் மிக்க நன்றி நண்பரே!!

      நீக்கு
  2. பல பழமொழிகள் தெரியவில்லை. அனைத்தும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி!! விரைவில் விளக்கங்களையும் கொடுக்கிறேன்... நன்றி சகோதரி...

      நீக்கு
  3. அனைத்தும் அருமை. கொஞ்சம் கொடுத்து அதற்கான விளக்கமும் கொடுங்களேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக... தங்களின் மேலான ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா!! விரைவில் ஒவ்வொரு பழமொழிக்கான விளக்கங்களை கொடுப்பதற்கான பகுதிகளை தனியாக அளிக்க இருக்கிறேன். தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தமைக்கு நன்றி!!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.