"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
வாழ்க்கைக்கு பயன்படும் பழமொழிகள் - Proverbs used for Life.

வாழ்க்கைக்கு பயன்படும் பழமொழிகள் - Proverbs used for Life.

பொன்மொழி நல்கும் நன்மொழி.

நம் முன்னோர்களின் பொன்மொழியாகிய பழமொழிகளைப்பற்றி நாம் அனைவரும் அறிவோம்.

பழமொழிகளானது கேட்பதற்கு எதுகை, மோனை நடையில் இனிமையாக அமைந்துள்ளது மட்டுமல்லாது அதன் கருத்துக்களானது நம் வாழ்வை இனிமையாக்கும் விதத்திலும் அமைந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பு.

வாழ்க்கைக்கும் இன்பம் சேர்க்கும் பழமொழிகளில் சில நன்மொழிகளை இப்பதிவினில் பார்க்கலாம் வாருங்கள்...


வாழ்விற்கு வளம் சேர்க்கும் பழமொழிகள்.

  • வாழ்க்கை என்பது ஒரு போதை மகிழ்ச்சி. மறைந்த பின்பும் தலைவலி இருந்துகொண்டே இருக்கும்.
  • மனிதன் வாழும்போது உறங்குகிறான். மரணம் நெருங்கும் தருவாயில் விழிப்படைகிறான்.
  • வாழ்க்கை என்பது ஒரு வெங்காயம். உரித்துப்பார்த்தால் கண்ணீர்தான் மிஞ்சும்.
  • தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான், ஊருக்கு அடங்காதவன் ஒருவருக்கும் அடங்கான்.
  • தாயையும் மறக்கடிக்குமாம் தயிரும், பழஞ்சோறும்.
  • அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா?
  • அடுக்களை பூனை இடுக்கிலேதான் ஒளியும்.
  • ஆடு கடிக்குமென்று உறி ஏறி பதுங்குனானாம்.
  • குறத்தி பிள்ளைபெற, குயவன் காயம் தின்ன.
  • அட்டையை எடுத்து தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குப்பையிலே...
  • பூவுள்ள மங்கையாம், பொற்கொடியாம், போனஇடமெல்லாம் செருப்படியாம்.
  • ஆந்தையும் தன் மகளை இராஜாளி என்றே கருதும்.
  • மாயப்பெண்ணே சுந்தரி, மாவைப்போட்டு கிண்டடி.
  • கொல்லைக்காட்டு நரி பல்லைக்காட்டி சிரித்ததாம்.
  • வல்லடி வழக்கை சொல்லடி மாமி.
  • மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி அழைக்கும்.
  • ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து செருப்பால் அடி.
  • அதிகாரிவீட்டு கோழிமுட்டை, குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்குமாம்.
  • குல ஸ்திரீ தன் கணவனையும், பர ஸ்திரீ தன் உடலையும் பேணுவாள்.
  • இங்கிதம் தெரியாதவளுக்கு சங்கீதம் தெரிந்து என்ன பயன்?
  • குடியிற் பெண் வயிறெரிய, கொடியில் சேலை நின்னு எரியும்.
  • "ஈ" க்கும் இருமல் உண்டு.
  • நேற்று வந்தாளாம் குடி, அவள் தலையில் விழுந்ததாம் இடி.
  • அப்பச்சி கோவணத்தை பருந்துகொண்டு ஓடுது... அவர் பிள்ளை இங்கே பட்டுக்கு அழுவுது.
  • அம்பலக்கழுதை அம்பலத்தில் இருந்தாலென்ன? அரண்மனையில் இருந்தாலென்ன?
  • இறக்கும் காலம் நெருங்கிவந்தால் ஈசலுக்கும் பிறக்குமாம் இறக்கை.
  • அணிலுக்கு நொங்கு, ஆண்டிக்கு சங்கு.
  • இரண்டுபட்ட ஊரிலே குரங்குகளும் குடியிருக்காது.
  • தக்கென்று தகிக்க கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
  • பெற்ற தாய் கிண்ணிப்பிச்சை எடுக்க பிள்ளையாண்டான் "கோ" தானம் செய்கிறானாம்.
  • அஞ்சியவனைக் கண்டால் கோழிக்குஞ்சு கூட விரட்டும்.
  • நாய்க்கு மேலாக குரைக்கவும் முடியாது, பெண்களுக்கு மேலாக சண்டையிடவும் முடியாது.
  • ஆறு  நிறைய தண்ணீர்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். அதுபோல சிலரிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும்...
  • அருமையற்ற வீட்டில் எருமையும் தங்காது.
  • காட்டுப்பூனைக்கு சிவராத்திரி விரதமா?
  • குதிரை இருப்பு அறியும்கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்ததாம்.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறாது.
  • கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
  • சண்டிக் குதிரைக்கு நொண்டிச் சாரதி.
  • சாதுரியப்பூனை மீன் இருக்க புளியங்காயைத் திங்குதாம்.
  • தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • பெண்சாதி இல்லாதவன் பேயை கட்டி தழுவினானாம்.
  • எஜமானுக்கு ஜலதோஷமென்றால் தொழிலாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தும்முவார்கள்.
  • உன்னிடமிருப்பது தங்கச்சாவி என்றால் அது எல்லா பூட்டுகளையும் திறக்கும்.
  • தெளிவற்ற கொள்கை ஒளியற்ற விளக்கு.
  • அகராதி படித்தவனுக்கு எதிராக பேசாதே.
  • செல்வங்களைவிட செல்வாக்கே மேல். அதைவிட சொல்வாக்கு மேல்.
  • செருப்பின் அருமை வெயிலில்நெருப்பின் அருமை குளிரில்.
  • செல்லமுத்துன வாழைக்காய் புளியில்லாமல் அவிஞ்சுச்சாம்.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்குசொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல்செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சம் கொள்ளல் ஆகாது.
  • தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
  • துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்.
  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளளை கொடுக்கமாட்டான்.
  • நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா?
  • நித்தம் தந்தால் முத்தமும் சலிக்கும்.
  • நின்ற வரையில் நெடுஞ்சுவர்விழுந்த அன்றே குட்டிச்சுவர்.
  • நூற்றுக்கு மேல் ஊற்றுஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பெத்த வயத்திலே பிரண்டையைக் கட்டிக்கொள்.
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாளும் வரும்.
  • பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்குவானேன்?
  • பொற்கலம் ஒலிக்காது, ஆனால் வெண்கலம் ஒலிக்கும்.

Gold_Bronze

  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் சரி, கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பாய்ந்த பகை நன்று.
  • வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
  • அய்யாசாமிக்கு கல்யாணம் அவரவர் வீட்டில் சாப்பாடு.
  • ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி.
  • ஆனது நமக்கு... ஆகாதது பிள்ளையாருக்கு...
  • ஆசைப்பட்ட பண்டம் ஊசிப்போயிற்று.
  • ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றைக்கட்டி இறைப்பானா?
  • ஆயத்துக்குக் குதிரை, கீயத்துக்குக் குட்டி.
  • ஆயிரம் கப்பலில் நழுவின கப்பி.
  • ஆனி அடியிடாதே கூனி குடிபுகாதே.
  • ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணையாகும்.
  • ஆளைப்பார்த்தால் அழகாட்டம் இருக்கு, ஆனால் வேலையை பார்த்தா இழவாட்டம் இருக்கு.
  • இட்டாருக்கு இடு, செத்தாருக்கு அழு.
  • இந்த கூழுக்கே இத்தனை திருநாமம்.
  • இரப்பவனுக்கு பஞ்சம் என்றைக்குமில்லை.
  • கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுண்டமும் காட்டுவான். 
  • ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.
  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, ஆண்பிள்ளை கொழுத்தால் கீரைத்தண்டு.
  • மழைக்கு குடை பிடிக்கலாம், அதற்காக இடிக்கும் குடைபிடிக்கலாமா?
  • இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.
  • உடையவன் பாரா பயிர் உருப்படுமா?
  • உண்டார்மேனி கண்டால் தெரியும்.
  • உண்டு ருசி கண்டவனும் விடான், பெண்டு ருசி கண்டவனும் விடான்.
  • உதவாத பழங்கலமே ஓசையில்லா வெண்கலமே.
  • இகழ்ச்சியில் கெட்டாரும் இல்லை, புகழ்ச்சியில் வாழ்ந்தாரும் இல்லை.

💦💦💦💦💦💦

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. அருமை... பழைய சோறு தருவதே தாய் தானே...? மறக்க முடியுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். தயிர் கலந்த பழஞ்சோற்றின் ருசியை பெருமைப்படுத்தி சொல்ல இவ்வாறு சொல்லியிருக்கலாம். உண்மையை சொல்லப்போனால் "அம்மா" முன்னால் இவ்வுலகிலுள்ள அனைத்தும் சும்மாதான்...

      நீக்கு
  2. பழமொழிகள் அனைத்தும் அருமை. பல அறியாதவை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கை வெங்காயம் - உரித்தால் அழுகை - இது கொஞ்சம் நெகட்டிவோ?!

    வாழ்க்கை என்பது போதை மறைந்த பின்பும் தலைவலி இருந்துகொண்டே இருக்கும்?? இதன் அர்த்தம் புரியவில்லை சகோ.

    ஈக்கும் இருமல் உண்டு?!

    சில நன்றாகப் புரிந்தன. பெற்ற வயிற்றில் பிரண்டை இது அடிக்கடி கேட்டது.

    நன்றாக இருக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "ஈ" க்கும் இருமல் உண்டு...

      இருமல் போன்ற உடலை வருத்தும் நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்குமே ஏற்படும். மிக சிறிய உயிரினமான ஈக்களுக்கு கூட...

      அதுபோல உனக்குவரும் வேதனை, சோதனை, கஷ்டங்கள்கூட அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவைதான்... எனவே கஷ்டங்கள் உனக்குமட்டுமே இருப்பதாக நினைத்து கவலைகொள்ளாமல் அதனை கேஷுவலாக எடுத்துக்கொள்ள பழகிக்கொள்... என்பதனை உணர்த்த சொல்லப்பட்ட பழமொழியே இது. நன்றி!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.