"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
The Moving Speed and Lifespan of the animals.

The Moving Speed and Lifespan of the animals.

விலங்குகளின் நகரும் வேகமும், ஆயுள் காலமும்.

Vilankukalin vekam ayul kalam.

          இவ்வுலகில் மனிதன் உட்பட அனைத்து வகையான உயிரினங்களுமே தங்களை ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முதலில் தங்களுடைய விவேகத்தையே பயன்படுத்துகின்றன. ஆனால் தாவரங்களை தவிர்த்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்கின்ற விலங்கினங்கள் விவேகத்தை மட்டுமே நம்பியிருந்தால் போதாது.

The Moving Speed animals.

விவேகத்துடன் வேகத்தையும் காண்பிக்க வேண்டியது அவசியம். அப்படியென்றால்தான் நெருங்கிவரும் ஆபத்திலிருந்து எளிதாக உயிர் தப்பிக்க முடியும்.

அப்படி வேகத்தை பயன்படுத்தி உயிர்தப்பிக்கும் சில விலங்குகளின் வேகத்தையும். உயிர்தப்பித்தபின் அவைகளின் அதிகபட்ச ஆயுள்காலம் பற்றியும் இந்த பதிவின்மூலம் அறிந்துகொள்வோம் வாருங்கள்.

zebra
zebra.

Moving Speed and Lifespan.

தமிழ் பெயர்கள். English Name. வேகம்/மணிக்கு. ஆயுட்காலம்/ஆண்டுகள்.
சிங்கம் Lion 50 மைல் 14
புலி Tiger 40 மைல் 19
சிறுத்தைப்புலி Cheetah 70 மைல் 23
கழுதைப்புலி Hyena 37 மைல் 12
கழுதை Donkey 15 மைல் 35
யானை Elephant 20 மைல் 47
பூனை Cat 30 மைல் 13
அணில் Squirrel 12 மைல் 6
மான் Deer 32 மைல் 17
கருப்பு மான் Antelope 61 மைல் 20
அரேபிய ஓரிக்ஸ் மான் Arabian oryx 50 மைல் 20
கலைமான் Blackbuck 50 மைல் 12
கட மான் (மிளா) Sambar deer 45 மைல் 10
வெள்ளைவால் மான் White-tailed deer 30 மைல் 10
ஸ்பிரிங்போக் Springbok 55 மைல் -
ஒட்டகம் Camels 40 மைல் 20
ஒட்டகச்சிவிங்கி Giraffe 32 மைல் 10
வேட்டை நாய் Hunting dog 45 மைல் 16
ஓநாய் Wolf 45 மைல் 12




தமிழ் பெயர்கள். English Name. வேகம்/மணிக்கு. ஆயுட்காலம்/ஆண்டுகள்.
குள்ளநரி Jackal 38 மைல் 12
சாம்பல் நரி Gray Fox 40 மைல் 12
பன்றி Pig 11 மைல் 14
கரடி Bear 30 மைல் 35
கருங்கரடி Black bear 35 மைல் 35
எருமை Buffalo 34 மைல் 20
முயல் Rabbit 25 மைல் 5
காண்டாமிருகம் Rhinoceros 32 மைல் 27
குரங்கு Monkey 34 மைல் 7
மனிதக்குரங்கு Orangutan 25 மைல் 30
கொரில்லா Gorilla 25 மைல் 17
குதிரை Horse 45 மைல் 27
கங்காரு Kangaroo 44 மைல் 19
ஆடு Goat 10 மைல் 13
மாடு Cattle 25 மைல் 19
சிவிங்கிப்புலி (வேங்கை) Cheetah 75 மைல் -
வரிக்குதிரை Zebra 40 மைல் 30
குழிமுயல் Hare 45 மைல் -
காட்டு கழுதை Wild Ass 40 மைல் 40
டால்பின் Dolphin 40 மைல் 20

🐎 🐫 🐒 🐬 🐺 🐻

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. தகவல் அருமை... பலவற்றை அறிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள். ஓரளவு தெரிந்ததும்.

    மற்றொன்றும், நம் மூச்சு நிதானமாக இருக்க இருக்க ஆயுட்காலம் கூடுதல் என்றும் உண்டே. ஆமை, முதலை க்கு எல்லாம் ஆயுட்காலம் அதிக நாட்கள். அதனால்தானே மனிதர்களுக்கும் சொல்லப்படுவது, நாம் மூச்சுப் பயிற்சி செய்துமூச்சை நிதானப்படுத்துதல் நல்லது என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... மூச்சுப்பயிற்சியின் அடிப்படையே மூச்சை கட்டுப்படுத்தி அதன்மூலம் மனதின் எண்ணஓட்டங்களை நிதானமாக்கி ஆயுளையும் அதிகரித்துக்கொள்வதுதான்!!!.

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.