"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தலாசனம் - Thalasana (or) Talasana - Palm Tree Pose.

தலாசனம் - Thalasana (or) Talasana - Palm Tree Pose.

தலாசனம்.

Thalasana.

உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சேர புத்துணர்ச்சி அளிப்பவை யோகாசன பயிற்சிகள்.

நாம் அவ்வப்போது பலவகையான யோகாசன பயிற்சிகளைப் பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்றைய யோகாசன பயிற்சியாக "தலாசனம்" என்னும் பயிற்சியைதான் பார்க்க இருக்கிறோம்.


இந்த பயிற்சியானது பயிற்சி செய்வதற்கு எளிமையான அதேவேளையில் உயரிய பலனைத்தரக்கூடியதாகும்.

"தலாசனம்" என்றால் பனைமரம் போன்று உடலை அமைக்கும் ஆசனம் என்று பொருள். வாருங்கள் இதனை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம்.

Palm Tree Pose.

Talasana.

செய்முறை :- இந்த "தலாசனம்" என்னும் பயிற்சியில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. அவைகளை ஒன்றையடுத்து ஒன்றாக வரிசையாக பயிற்சி செய்தல் அவசியம். அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.

முதல்வகை.

நன்கு கெட்டியான விரிப்பின்மீது இரு கால்களையும் பக்கவாட்டில் 22 சென்டிமீட்டர் அகலத்தில் இருக்கும்படி வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும்.  அதன் பின் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே வலது கையை மட்டும் தலைக்கு மேலே தூக்கி காதுகளை ஒட்டியபடி வைக்கவும்.

Talasana-Palm Tree Pose.

உள்ளங்கையை உள்பக்கம் பார்த்து இருக்கும்படி பார்த்துகொள்ளவும். கையை மேலே தூக்கும்போது இரண்டு குதிகால்களையும் மேலே உயர்த்தி கால்விரல்களை பயன்படுத்தி நிற்கவும்.

இதேநிலையில் 5 முதல் 10 வினாடிகள் நின்றபின் கைகளை பின்னால்சுற்றி உடம்பின் பக்கவாட்டில் கொண்டுவரும் அதேவேளையில் மூச்சுக்காற்றையும் மெதுவாக வெளியேவிட்டு குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.

இது போன்று இடதுகைகளுக்கும் பயிற்சிகொடுக்கவும்.

இது முதல்வகை பயிற்சி.

முதல்வகை பயிற்சி முடிந்ததும் இரண்டாம்வகை பயிற்சி செய்தல் வேண்டும்.

இரண்டாம் வகை.

இதுவும் முதல்வகையைப்போல்தான் பயிற்சி செய்யவேண்டும் என்றாலும் ஒரு கையை மட்டும் உயர்த்தி பயிற்சி செய்வதற்கு பதிலாக இரண்டு கைகளையும் ஒருசேர மேலே தூக்கி உள்ளங்கைகளை இணைத்து கும்பிட்ட நிலையில் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

Talasana

5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடியே கைகளை மெதுவாக கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.

இதற்கு அடுத்து மூன்றாவது வகையை பயிற்சி செய்யவும்.

மூன்றாவது வகை.

இதுவும் இரண்டாவது வகையைப்போலவேதான் பயிற்சிசெய்ய வேண்டும் என்றாலும் மேலே தூக்கிய இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக நன்கு பின்னி பிணைத்து உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவேண்டியது அவசியம்.

Thalasana_Talasana

5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடி கைகளை கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.

பயன்கள் :- இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவருவதால் கை, கால், முதுகெலும்புகள் நன்கு பலமடைகின்றன.

கால்களிலுள்ள நரம்புகள் நன்கு வலுப்பெறுகின்றன.

வயிற்று தசைகள் நன்கு வலுவடைவதோடு உடலும் சுறுசுறுப்படைகின்றன.

💃💃💃💃💃💃💃

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

5 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.