"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா - Let's know about the Bharat Ratna Awardees - Part 2.

பாரத ரத்னா - Let's know about the Bharat Ratna Awardees - Part 2.

Bharat Ratna Awardees.

1954 - 1955.

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

(Part -2)

இந்தியாவில் வழங்கப்படும் சிவிலியன் விருதுகளில் முதன்மையானது "பாரத ரத்னா".

மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டும் விதமாக  வழங்கப்படும் பாரதரத்னா விருதுவானது 1954 ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது. 1954 ம் ஆண்டு தொடங்கி 2021 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் சாதனை செய்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

பாரத ரத்னா பற்றிய பதிவில் இது இரண்டாவது பகுதி (Part 2).

முதல் பகுதியை (Part 1) படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை "கிளிக்"குங்க..

👉👉 பாரத ரத்னா - Bharat Ratna Award - Part 1 👈👈

முதல் பகுதியில் (Part 1) பாரத ரத்னா விருதைப்பற்றி மட்டுமே விரிவாகப் பார்வையிட்டோம்.

பாரத ரத்னாவைப்பற்றி விரிவாக பார்த்த நாம் அதனைப் பெற்ற வெற்றியாளர்களை பற்றியும் ஓரளவு இரத்தின சுருக்கமாகவாவது தெரிந்துகொண்டால்தானே நம் அறிவு இன்னும் கொஞ்சமாவது விசாலப்படும்!.

எனவே, இரண்டாவது பதிவாகிய இப்பதிவில் 1954 தொடங்கி 1955 வரையில் பாரதரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப்பற்றி இரத்தின சுருக்கமாக பார்க்கலாம் வாருங்கள்.


    சி. ராஜகோபாலச்சாரி (ராஜாஜி)

    C. Rajagopalachari.

    பெயர் :- சி. ராஜகோபாலச்சாரி என்னும் ராஜாஜி.

    நாடு :- இந்தியா.

    மாநிலம் :- தமிழ்நாடு. கிருஷ்ணகிரி மாவட்டம்.

    C_Rajagopalachari.

    பிறப்பு :- 1878 ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தார்.

    இறப்பு :- 1972 டிசம்பர் 25.

    குழந்தைகள் :- ஆண் 3. பெண் 2.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1954.

    வாழ்க்கை முறை :- வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட தலைவர். எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.

    இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் கடைசி தலைமை ஆளுனராக பதவி வகித்தவர். மேற்குவங்க ஆளுனராகவும் இருந்துள்ளார். அத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    மேலும் சென்னை மாகாண முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் என்று பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக முதல் பாரத ரத்னா விருதை பெற்றவர் என்கின்ற பெருமையும் இவரையே சாரும்.

    இன்னும் சொல்லப்போனால் ஜாதீய சாக்கடையில் ஊறிப்போன இந்தியாவை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல்,... அதை இன்னும் கொஞ்சம் நாறடிக்கும் முயற்சியாக,... ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் பரம்பரை பரம்பரையாக செய்யும் குலத்தொழிலையே அவன் மகனும் சிறுவயது முதலே தொழிற்கல்வியாக படிக்க வேண்டும் என்னும் "குலக்கல்வி" திட்டத்தை கொண்டுவர துடியாய் துடித்தவர்தான் இந்த ராஜாஜி என்னும் மகா பெரியவர்.

    Status of family education

    அரசியல் ஒரு சாக்கடை என அறியப்படுவதாலும் ஜாதீய சாக்கடையை அதில் கொட்டி அதன் மவுசு மாறாமல் இருக்க முயற்சித்த இவருக்கு முதன் முதலாக பாரதரத்னா கொடுக்கப்பட்டதே மிகவும் பொருத்தமான செயல்தான்... ஜெய் பாரத் மாதாகி!!..

    பாரத ரத்னா மட்டுமல்ல... இவருக்கு "மூதறிஞர் ராஜாஜி", "சக்கரவர்த்தி இராஜகோபாலச்சாரி" என்கின்ற பட்டமெல்லாமும்கூட மிகவும் பொருத்தமானதாகத்தான் தோன்றுகிறது. பலே வெள்ளையத்தேவா... ஏழு குண்டலவாடா... கோவிந்தா கோவிந்தா... ஏசுவுக்கும் ஸ்தோத்திரம்... அல்லாகு அக்பர்...

    bharathiyar mannu - vivek

    அட... ஆரம்பமே அமர்க்களம்தான் போங்க... பாரதரத்னாவுக்கும் பெருமையோ பெருமை... த்தூ...

    S. ராதாகிருஷ்ணன்.

    S. Radhakrishnan.

    பெயர் :- S. ராதாகிருஷ்ணன்.

    நாடு :- இந்தியா.

    மாநிலம் :- ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh).

    S. Radhakrishnan

    பிறப்பு :- 1888 ம் ஆண்டு செப்டம்பர் 5 ல் திருத்தணியில் உள்ள சர்வபள்ளி என்னும் கிராமத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 1975 ஏப்ரல் 17.

    குழந்தைகள் :- ஆண் 1. பெண் 5.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1954.

    வாழ்க்கை முறை :- இவருடைய பூர்வீகம் ஆந்திரபிரதேசம். தாய்மொழி தெலுங்கு. இவருடைய பெற்றோர்கள் தொழில் நிமித்தம் காரணமாக ராதாகிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். திருத்தணியில் சர்வபள்ளி என்னும் கிராமத்தில் பிறந்தார். எனவேதான் இவரை "சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்" என அடைமொழியுடன் அழைப்பதுண்டு.

    சென்னை மாநில கல்லூரியல் தொடங்கி மைசூர், கொல்கத்தா, வாரணாசி ஆகிய இடங்களில் நீண்டகாலம் தத்துவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர். மாணவர்களுக்கு இவர் கற்பிக்கும் முறையும், திறனும் மற்ற ஆசிரியர்களை காட்டிலும் மேம்பட்டதாக இருந்ததால் மாணவர்கள் இவர்மீது அளவுகடந்த அன்பு பாராட்டினர்.

    இது மட்டுமல்லாமல் மேலும் பல நன்னடத்தை விசயங்களில் இவர் ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்ததாலும்,... குடியரசு தலைவர் பொறுப்பில் இருக்கும்போது நண்பர்கள் இவர் பிறந்தநாளை கொண்டாட விருப்பம் தெரிவித்தபோது அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள் உழைப்பை போற்றும் வண்ணம் தன்னுடைய பிறந்தநாளை அசிரியர் தினமாக கொண்டாடினால் மகிழ்வேன் என விருப்பம் தெரிவித்ததாலும் இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அரசியலிலும் இவர் பங்கு அளப்பரியது. 1952 ல் இருந்து 1962 வரை சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், 1962 ல் இருந்து 1967 வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.

    இவருடைய சீரிய வாழ்க்கை முறையை கருத்தில்கொண்டு இவருக்கு 1954 ல் பாரதரத்னா கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.

    சந்திரசேகர வெங்கட ராமன்.

    Chandrasekhara Venkata Raman.

    பெயர் :- சந்திர சேகர வெங்கட ராமன். (சர்.சி.வி. ராமன்).

    நாடு :- இந்தியா.

    மாநிலம் :- தமிழ் நாடு.

    Chandrasekhara Venkata Raman

    பிறப்பு :- 1888 ம் ஆண்டு நவம்பர் 7 அன்று திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்தார்.

    இறப்பு :- 1970 நவம்பர் 21.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1954.

    வாழ்க்கை முறை :- சந்திரசேகர வெங்கட்ராமன் என்னும் பெயர்தாங்கிய இவர்தான் ஒளிச்சிதறல் ஆய்வுமூலம் உலகப்புகழ் பெற்றவர். ஒளி ஒரு ஊடகத்தின் வழியாக செல்லும்போது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டறிந்து உலகுக்கு உரைத்தவர். இவருடைய இந்த ஆய்வு முடிவு "ராமன் விளைவு" (Raman Effect) என அழைக்கப்படுகிறது. இதுவே இவருக்கு 1930 ல் நோபல் பரிசையும் வாங்கிக்கொடுத்தது.

    வெளிநாட்டில் படிக்கிறேன் என ஜெர்க் விட்டுத்திரியும் இன்றைய மாணவர் சமுதாயத்திற்கு நடுவே முழுக்க முழுக்க இந்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே படித்து உலக அளவில் புகழ்பெற்ற அறிஞராக மாறி நோபல்பரிசும் பெற்றது நம் கல்விமுறைக்கு கிடைத்த ஒப்பற்ற வெற்றியே!

    சிறந்த இயற்பியல் ஆய்வாளரான இவர் அறிவியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 1954 ல் பாரத ரத்னா விருது அளித்து கவுரவிக்கப்பட்டார்.

    பகவான் தாஸ்.

    Bhagwan Das.

    பெயர் :- பகவான் தாஸ்.

    நாடு :- இந்தியா.

    மாநிலம் :- உத்திரபிரதேசம் (Uttar Pradesh).

    Bhagwan Das.

    பிறப்பு :- 1869 ஆண்டு ஜனவரி 12 ல் உத்திரபிரதேசத்திலுள்ள வாரணாசியில் பிறந்தார்.

    இறப்பு :- 1958 செப்டம்பர் 18.

    குழந்தைகள் :- ஆண் 1.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1955.

    வாழ்க்கை முறை :- ஆன்மீகவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்த இவர் மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட. சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மிகச்சிறந்த சுதந்திரப்போராட்ட வீரராகவும் அறியப்படுகிறார்.

    ஒத்துழையாமை இயக்கத்தின்போது காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைக்கு பாடுபட்டார். இதனால் பலமுறை ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு ஆளானார்.

    இவரது சிறந்த தேசிய பணிக்காக 1955 ல் இவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.

    M. விசுவேசுவரய்யா.

    M. Visvesvaraya.

    பெயர் :-  M. விசுவேசுவரய்யா.

    நாடு :- இந்தியா.

    M. Visvesvaraya

    மாநிலம் :- கர்நாடகா - Karnataka.

    தற்போது இவர்கள் குடும்பம் கர்நாடகாவிலுள்ள மைசூர் பகுதியில் வாழ்ந்துவந்தாலும் இவர்கள் மூதாதையர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என அறியமுடிகிறது.

    காரணம்,.. இவர் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் பரம்பரை பெயரான "மோக்சகுண்டம்" ஆகும்.

    ஆம்,.. இவருடைய முழு பெயர் "மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா". விசுவேசுவரையா என்பதே இவருடைய பெயர்.. அப்படியென்றால் "மோக்சகுண்டம்" என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா? என்றால்.. அதுதான் இல்லை... பரம்பரையாக தொடர்ந்து வரும் குடும்ப பெயர்.

    இவருடைய தந்தை பெயர் "மோக்சகுண்டம் சீனிவாச சாஸ்திரி". குடும்ப பெயருக்கான காரணம் இவருடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிட்டலூருக்கு அருகிலுள்ள "மோக்சகுண்டம்" என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். எனவேதான் இவர்களின் பெயர்களுக்கு முன்னால் அவர்களின் பூர்வீக ஊரின் பெயர் குடும்ப பெயராக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. மூன்று நூற்றண்டுகளுக்கு முன்னால் இவர்களின் குடும்பம் ஆந்திராவிலிருந்து கர்நாடகாவின் மைசூருக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பிறப்பு :- 1860 ம் ஆண்டு செப்டம்பர் 15 ல் கர்நாடகாவின் "சிக்கபல்லபுரா" மாவட்டத்திலுள்ள "முட்டனஹள்ளி" என்னும் கிராமத்தில் பிறந்தார். இக்கிராமம் முன்பு மைசூர் அரசுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

    இறப்பு :- 1962 ஏப்ரல் 14.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1955.

    வாழ்க்கை முறை :- கர்நாடகாவை சேர்ந்த இவர் ஒரு புகழ்பெற்ற தலைசிறந்த சிவில் பொறியாளர். மிகப்பெரிய நிறுவனங்களுக்கான அதிசயிக்கத்தக்க பல கட்டிடங்களை மைசூர் நகரத்தில் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். மைசூர் சிவசமுத்திரத்தில் உள்ள ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகியவை இவரின் திறமைகளால் உருபெற்றவைதான்.

    இவரது பிறந்த நாளான செப்டம்பர் 15 தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பிறந்த கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் 15 ம் தியதி பொது விடுமுறை நாளாகும்.

    மேன்மைமிகு இவருடைய திறமைக்கு வெகுமதியாக 1955 ல் பாரதரத்னா விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

    ஜவகர்லால் நேரு.

    Jawaharlal Nehru.

    பெயர் :- ஜவகர்லால் நேரு.

    நாடு :- இந்தியா.

    மாநிலம் :- உத்திர பிரதேசம். Uttar Pradesh.

    jawahar_lal_nehru

    பிறப்பு :- 1889 நவம்பர் 14.

    இறப்பு :- 1964 மே 27.

    குழந்தைகள் :- இந்திராகாந்தி.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1955.

    வாழ்க்கை முறை :- சுதந்திர போராட்ட வீரர். சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்தவர்.

    இந்திய திருநாட்டின் முதல் பிரதமர். நாடு சுதந்திரமடைந்த போது பிரதமாராக பதவி ஏற்ற இவர் 1964 மே 27 அன்று தன் இறப்பு வரையில் பிரதமாராக நீடித்தார்.

    அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

    குழந்தைகள் மீது அதிக அளவு அன்பு செலுத்தியவர். அதனாலேயே அவர் பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    நாட்டிற்காக இவர் ஆற்றிய சேவைகளை கருத்தில்கொண்டு 1955 ல் இவருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது. இவருக்கு விருது வழங்கப்படும்போது இவரேதான் பிரதமராகவும் இருந்தார்.

    பாரத ரத்னா பற்றிய பதிவின் இரண்டாவது பகுதியாகிய (Part 2) இந்த பதிவில் 1954 ல் இருந்து 1955 வரை பாரதரத்னா பெற்ற வெற்றியாளர்களை பற்றி பார்த்தோம். தொடர்ந்துவரும் அடுத்த பதிவில் (Part 3) 1955 ற்கு பின்பு வரும் வருடங்களில் பரிசுபெற்ற சாதனையாளர்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம். நன்றி!

    இப்பதிவின் தொடர்ச்சியாகிய மூன்றாவது பகுதியை படிக்க [Part - 3] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

    👉👉பாரத ரத்னா - Bharat Ratna Award Winners👈👈

    💢💢💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    6 கருத்துகள்

    1. முதல் விருது கேவலம்... சரியாக எழுதி உள்ளீர்கள்...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உண்மைதான்... எனக்கு ஒன்றுமட்டும் இங்கு புரியவே இல்லை நண்பரே!!... ஜாதீய பாகுபாடுகள், ஜாதீய ஏற்றத்தாழ்வுகள் இவைகளெல்லாம் தவறென்று நமக்கு சிறுவயது முதலே தெளிவாக தெரிகிறது... ஆனால் சிலருக்கு எவ்வளவு வளர்ந்தாலும் இது புரியவேமாட்டேன்கிறதே அது ஏன்?... ஜாதியை வைத்து பிறரை புண்படுத்தி பிழைப்பு நடத்தும் பல ஈனப்பிறவிகள் இன்றும் இருக்கிறார்களே? அவர்களின் இந்த மனநிலைக்கு காரணம்தான் என்ன ? ம்.ம்ம்... பாழும்உலகில் ஒன்றுமே புரியவில்லை சாமியோவ்!!!...

        நீக்கு
      2. அவா அப்படித்தான்... அவா மட்டுமே அப்படித்தான்...

        நீக்கு
    2. சிறப்பான தகவல்கள் நண்பரே...
      எம்.விசுவேசுவரய்யா விருது பெற்ற வருடம் 1995 ஆ... அல்லது 1955 ஆ...
      சரி செய்யவும்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. சரி செய்துவிட்டேன் நண்பரே... தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி!!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.