"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா வெற்றியாளர்கள் - Bharat Ratna Award Winners - Part 9.

பாரத ரத்னா வெற்றியாளர்கள் - Bharat Ratna Award Winners - Part 9.

Bharat Ratna Awardees.

[2008 - 2019]

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

(PART - 9).

மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டும் விதமாக  வழங்கப்படும் பாரதரத்னா விருதுவானது 1954 ம் ஆண்டு ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது.

1954 தொடங்கி 2019 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Bharat Ratna Award Winners.

பாரத ரத்னா (Bharat Ratna) பற்றிய தொடர் பதிவில் இது ஒன்பதாவது பகுதி (Part 9). முந்தைய எட்டு பகுதிகளில் பாரத ரத்னா பற்றியும், 1954 முதல் 2001 ம் ஆண்டுவரை பாரதரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப் பற்றியும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகிய ஒன்பதாவது பகுதியான (Part 9) இப்பதிவில் 2008 தொடங்கி 2019 வரையில் பாரதரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப்பற்றி இரத்தின சுருக்கமாக பார்க்கலாம் வாருங்கள்...

சுவாரஸ்யம் நிறைந்த முதல் பகுதியை (Part 1) படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை "கிளிக்"குங்க...

👉👉பாரத ரத்னா - Bharat Ratna Award - Part 1👈👈


    பீம்சென் ஜோஷி.

    Bhimsen Joshi.

    பெயர் :- பீம்சென் ஜோஷி (Bhimsen Joshi). இயற்பெயர் "பீம்சென் குருராஜ் ஜோஷி".

    Bhimsen Joshi.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- கர்நாடகா - Karnataka.

    பிறப்பு :- கர்நாடகா மாநிலத்தின் "காடக்" நகரில் 1922 ம் ஆண்டு பிப்ரவரி 4 ம் தேதி பிறந்தார்.

    இறப்பு :- 2011 ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி தன்னுடைய 88 வது வயதில் காலமானார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 2008.

    வாழ்க்கை முறை :- கர்நாடகாவை சேர்ந்த பிரபல இந்துஸ்தானி இசைப்பாடகர். "வாய்ப்பாட்டு" எனப்படும் "குரலிசை பாடல்" வித்துவான்.

    "காயல்" என்ற பாடல் வகையில் நிபுணத்துவம் பெற்ற இவர் "பஜன்" மற்றும் "அபங்" பாடல்களைப் பாடுவதிலும் அபார திறமை பெற்றவர்.

    இவர் மேடை கச்சேரிகளில் மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.

    சங்கீத நாடக அகாடமியின் உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் பெற்றவர்.

    இசைத்துறையில் இவருடைய சாதனையைப் பாராட்டி 2008 ம் ஆண்டிற்கான பாரதரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    🔔🔔🔔🔔🔔🔔

    C.N.R. ராவ்.

    C.N.R. Rao.

    பெயர் :- C.N.R. ராவ் (C.N.R. Rao). இயற்பெயர் "சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்" (Chintamani Nagesa Ramachandra Rao).

    C.N.R. Rao.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- கர்நாடகா - Karnataka.

    பிறப்பு :- 1934 ம் ஆண்டு ஜூன் 30 ல் பெங்களூருவில் பிறந்தார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 2014.

    வாழ்க்கை முறை :- கர்நாடகாவை சேர்ந்த பிரபல வேதியியல் விஞ்ஞானி.

    கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் துறை தலைவர், ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் என பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.

    செவ்வாய் கிரகத்திற்கு "மங்கள்யான்" விண்கலம் அனுப்பும் திட்டத்தில் பின்புலமாக செயலாற்றியவர் இவர்.

    1500 க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இவருடைய அறிவியலுக்கான பங்களிப்பை பாராட்டும் விதமாக 2014 ல் இவருக்கு "பாரதரத்னா" கொடுத்து கவுரவிக்கப்பட்டது.

    🔘🔘🔘🔘🔘🔘

    சச்சின் டெண்டுல்கர்.

    Sachin Tendulkar.

    பெயர் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar). இயற்பெயர் "சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்" (Sachin Ramesh Tendulkar).

    Sachin Tendulkar Bharat Ratna Award.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மகாராஷ்டிரம். Maharashtra.

    பிறப்பு :- 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதி மும்பையில் உள்ள தாதர் (Dadar) என்னும் கிராமத்தில் பிறந்தார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 2014.

    வாழ்க்கை முறை :- கிரிக்கெட் உலகில் முறியடிக்கவே முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்பட்டவர். தன்னுடைய பதினாறாவது வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கியவர்.

    மொத்தம் 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதித்தவரான இவர் 664 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்காற்றியுள்ளார். 34,357 ஓட்டங்களை பெற்றுள்ள இவர் உலக கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது 100 சதங்களையும் அடித்துள்ளார்.

    பாரதரத்னா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்கின்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    ஆரம்பத்தில் கலை, அறிவியல், கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டு வந்தது.

    பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருது வழங்கப்படவேண்டும் என்னும் நோக்கில் 2011 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

    அதன் அடிப்படையில் விளையாட்டு துறையும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

    அதைத்தொடர்ந்தே "சன்சின் டெண்டுல்கர்" அவர்களுக்கு முதன்முறையாக பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டு 2014 ல் கொடுக்கப்பட்டது.

    பாரத ரத்னாவை பெற்றவர்களில் மிக இளையவராக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்தான். விருது பெறும்போது இவருடைய வயது வெறும் நாற்பதுதான்.

    🔰🔰🔰🔰🔰🔰

    மதன் மோகன் மாளவியா.

    Madan Mohan Malaviya.

    பெயர் :- மதன் மோகன் மாளவியா (Madan Mohan Malaviya).

    இவரது மூதாதையர்கள் மத்திய பிரதேசத்திலுள்ள "மால்வா" என்ற பகுதியை சேர்ந்தவர்களாதலால் "மாள்வியாக்கள்" என்று அழைக்கப்பட்டனர். அதுவே இவருடைய பெயரிலுள்ள  பட்டப்பெயராக மாறிப்போனது.

    Madan Mohan Malaviya.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- உத்திரப்பிரதேசம். Uttar Pradesh.

    பிறப்பு :- 1861 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி உத்திர பிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 1946 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசியில் மாளவிகா மரணத்தை தழுவினார்.

    பாரதரத்னா விருது பெற்ற வருடம் :- 2015.

    வாழ்க்கை முறை :- இந்திய கல்வியாளர் மற்றும் இந்திய விடுதலை போராட்ட வீரர்.

    இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பாற்றியவர். இந்திய தேசியத்தை முன்னிறுத்தி "ஹிந்து மகா சபையை" துவக்கி வைத்தவர். இந்தியாவில் சாரணர் இயக்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். மேலும் சாரணர் இயக்கத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாளவியா "சேவா சமிதி" என்னும் சேவை அமைப்பையும் நிறுவினார்.

    மேலும் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடிவந்த இவர் தலித் மக்களுடன் இணைந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் உள்நுழைய வேண்டுமென  போராடினார்.

    இவருடைய மரணத்திற்கு பின்பே இவருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது. மாளவிகா ஆற்றிய கல்வித் தொண்டுக்காகவும், இந்திய விடுதலை போராட்டங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் 2015 ல் பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    🔱🔱🔱🔱🔱🔱

    அடல் பிஹாரி வாஜ்பாய்.

    Atal Bihari Vajpayee.

    பெயர் :- அடல் பிஹாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee).

    Atal Bihari Vajpayee.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மத்தியப்பிரதேசம். Madhya Pradesh.

    பிறப்பு :- 1924 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி மத்திய பிரதேசத்திலுள்ள "குவாலியர்" மாவட்டத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 2018 ஆகஸ்ட் 16 ம் தேதி தனது 93 வது வயதில் காலமானார்.

    பாரதரத்னா விருது பெற்ற வருடம் :- 2015.

    வாழ்க்கை முறை :- சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர், இயற்கையை நேசிப்பவர், சமூக சேவகர், வசீகரமான பேச்சுக்கு சொந்தக்காரர், சுதந்திர போராட்ட வீரர், கட்சி வேறுபாடின்றி அனைவரும் விரும்பும் ஆளுமையை பெற்றவர் என பன்முகத்தன்மையைக் கொண்டவர்.

    இயல்பிலேயே சிறந்த கவிஞரான இவருக்கு கவிதை எழுதுவது என்றால் அலாதி பிரியம்... பல நூல்களையும், கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

    "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

    50 வருட நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த இவர் 9 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சுதந்திர  இந்தியாவின் பதினோராவது பிரதமாராக பொறுப்பேற்ற இவர் நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார்.

    இவருடைய ஆட்சியில் தொழில்நுட்பத்துறை மற்றும் சாலைப்போக்குவரத்து துறை ஆகியன மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. இவர் கொண்டுவந்த "தங்க நாற்கரசாலை" திட்டம் அனைவரது பாராட்டையும் பெற்றதோடு நல்லரசாக இருந்த இந்தியாவை வல்லரசாகவும் மாற்றியது.

    அரசியலிலும், இந்திய தேச வளர்ச்சியிலும் இவராற்றிய பங்களிப்பை கருத்தில் கொண்டு இவருக்கு 2015 ம் ஆண்டு பாரத ரத்னா கொடுத்து இந்திய அரசு இவரை கவுரவித்தது.

    ☀☀☀☀☀☀

    பிரணாப்முகர்ஜி.

    Pranab Mukherjee.

    பெயர் :- பிரணாப் முகர்ஜி (Pranab Mukherjee). இயற்பெயர் "பிரணாப் குமார் முகர்ஜி".

    Pranab_Mukherjee.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மேற்கு வங்காளம். West Bengal.

    பிறப்பு :- மேற்கு வங்காளத்திலுள்ள "பிர்ஹம்" மாவட்டத்திலுள்ள "மிரதி" என்னும் கிராமத்தில் 1935 ம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி பிறந்தார்.

    இறப்பு :- 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 31 ம் தேதி மறைந்தார்.

    பாரதரத்னா விருது பெற்ற வருடம் :- 2019.

    வாழ்க்கை முறை :- மிகச்சிறந்த அரசியல்வாதி. எழுத்தாளரும் கூட. 13வது இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தவர். ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன் நிதி அமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.

    அரசியலில் இவர் ஆற்றிய தன்னலம் கருதாத சேவை மிகுந்த அர்ப்பணிப்பை போற்றும் விதமாக இவருக்கு 2019 வருடம் பாரதரத்னா விருது வழங்கி இந்திய அரசு இவரை பெருமைப்படுத்தியது.

    ☁☁☁☁☁☁

    பூபேன் அசாரிகா.

    Bhupen Hazarika.

    பெயர் :- பூபேன் அசாரிகா (Bhupen Hazarika).

    Bhupen Hazarika.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- அசாம் - Assam.

    பிறப்பு :- 1926 ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி அசாமிலுள்ள "சாடியா" என்னும் இடத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 2011 ம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி காலமானார்.

    பாரதரத்னா விருது பெற்ற வருடம் :- மரணத்திற்கு பின்  - 2019.

    வாழ்க்கை முறை :- பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், கவிஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்.

    அசாமிலும், மேற்குவங்காளத்திலும் பெரும் மதிப்புமிக்கவராக திகழ்ந்த இவர் இந்தி மற்றும் அசாமிய திரைப்படத் துறையிலும், இசையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

    தன்னுடைய பத்தாவது வயதிலேயே திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்துவிட்டார். இந்தி, வங்காளம், அசாமிய மொழிகளில் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார்.

    அசாமின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தவர்.

    இசைக்கு இவர் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு இவருடைய மறைவுக்குப் பின் இவருக்கு 2019 ம் ஆண்டு பாரதரத்னா வழங்கி இந்திய அரசு சிறப்பித்தது.

    ☂☂☂☂☂☂

    நானாஜி தேஷ்முக்.

    Nanaji Deshmukh.

    பெயர் :- நானாஜி தேஷ்முக் (Nanaji Deshmukh). இவருடைய இயற்பெயர் "சண்டிகடாஸ் அமிர்தராவ் தேஷ்முக்" (Chandikadas Amritrao Deshmukh).

    Nanaji Deshmukh.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மகாராஷ்டிரம் - Maharashtra.

    பிறப்பு :- 1916 ம் ஆண்டு அக்டோபர் 11 ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள "பர்பானி" மாவட்டத்திலுள்ள "கடோலி" என்னும் கிராமத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 2010 ம் ஆண்டு பிப்ரவரி 27 ம் தேதி காலமானார்.

    பாரதரத்னா விருது பெற்ற வருடம் :- 2019.

    வாழ்க்கை முறை :- இவர் RRS அமைப்பை சேர்ந்த இந்தியாவின் சமூக ஆர்வலர். தன்னலம் கருதாது பிறருக்கு உதவும் தொண்டுள்ளம் கொண்டவர். பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாது பாரதீய ஜன சங்கத்தின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    மேலும் கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில் பணியாற்றியவர்.

    இவருடைய சமூக சேவையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி இவருடைய மறைவுக்குப்பின் 2019 ம் வருடம் இந்திய அரசு இவருக்கு "பாரத ரத்னா" கொடுத்து கவுரவித்தது.

    1999 ம் ஆண்டிற்கான "பத்மவிபூஷன்" விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

    💫💫💫💫💫💫💫

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    6 கருத்துகள்

    1. அரிய தகவல்கள் நண்பரே தொடர்ந்து வரட்டும்...

      பதிலளிநீக்கு
    2. தேஷ்முக், மற்றும் ஹசாரிகா இருவர் பற்றி அறிந்ததில்லை. செம உழைப்பு தொகுப்பு யா...படிக்கிற பிள்ளைங்களுக்கு மட்டுமின்றி ஆர்வம் உள்ள எவருக்குமே மிகவும் பயனுள்ள கையேடாக இருக்கும்.

      கீதா

      பதிலளிநீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.