"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா - Bharat Ratna Awarded Diamond Star - Part 8.

பாரத ரத்னா - Bharat Ratna Awarded Diamond Star - Part 8.

Bharat Ratna Awardees.

[1998 - 2001]

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

(PART - 8).

இந்தியாவில் வழங்கப்படும் சிவிலியன் விருதுகளில் முதன்மையான இடத்தை பிடிப்பது "பாரத ரத்னா".

சிவிலியன் விருது என்பது மிகச்சிறந்த சாதனைபுரியும் அல்லது சேவையாற்றும் குடிமக்களுக்காக அவர்களின் சேவையை பாராட்டி கொடுக்கப்படும் விருது.

இந்தியாவைப் பொறுத்த அளவில் தன்னலம் கருதாது சேவையாற்றும் குடிமக்களுக்கான சிவிலியன் விருதுகள் பல இருந்தாலும் அதில் முதன்மையானதாக இருப்பது இந்த "பாரத ரத்னா" எனலாம்.

bharat-ratna-award.

பாரத ரத்னாவானது 1954 ம் ஆண்டு ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட காலம் தொடங்கி 2019 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களைப்பற்றி அறிந்துகொள்வதற்கான தொடர் பதிவே இது.

இதுவரையில் தொடர் பதிவாக வந்த ஏழு பகுதிகளில் 1954 ம் ஆண்டு தொடங்கி 1997 ம் வருடம் வரையில் "பாரத ரத்னா" விருது பெற்ற பல சாதனையாளர்களைப்பற்றி அறிந்துவந்துள்ளோம். அந்த வரிசையில் 8 வது பகுதியாக வரும் இப்பகுதியில் 1998 முதல் 2001 வரையில் பாரத ரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப்பற்றி இரத்தின சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.. பார்க்கலாம் வாருங்கள்.

முதல் பகுதியை (Part 1) படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை "கிளிக்"குங்க..

👉👉பாரத ரத்னா - Bharat Ratna Award - Part 1👈👈

💢💢💢💢💢💢

    எம்.எஸ். சுப்புலட்சுமி.

    M.S.Subbu Lakshmi.

    பெயர் :- எம்.எஸ். சுப்புலட்சுமி (M.S.Subbu Lakshmi). இயற்பெயர் "மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி".

    M.S.Subbu-Lakshmi

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- தமிழ்நாடு. Tamilnadu.

    பிறப்பு :- 16-09-1916.

    இறப்பு :- 11-12-2004.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1998.

    வாழ்க்கை முறை :- கர்நாடக இசை உலகின் முன்னோடிகளில் ஒருவரான  எம்.எஸ். சுப்புலெட்சுமிதான் பாரத ரத்னா விருதைப்பெறும் முதல் இசைக்கலைஞர் என்னும் பெருமையை பெறுபவர்.

    கர்நாடக இசைக்கலைஞர்களின் மனதை கவர்ந்த பாடகியான இவர் தமிழ் மாநிலத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.

    இசை குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய சிறுவயதிலேயே இசையை திறம்பட கற்று தேர்ந்தார். இவருடைய தாயாரும் ஒரு இசைக்கலைஞர்தான். எனவே இவருடைய தாயாரே இவருடைய முதல் குரு எனலாம்.

    தன்னுடைய தாயார் உதவியுடன் தன்னுடைய 11 வது வயதிலேயே தன்னுடைய முதல் இசைக்கச்சேரியை நிகழ்த்திக் காட்டினார். 13 வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சி நடத்தி மிகப்பெரிய சங்கீத வித்வான்களையே வியப்பில் ஆழ்த்தினார். 17 வயதிற்குள்ளாகவே புகழின் உச்சிக்கு சென்றார்.

     தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், சமஸ்கிருதம், குஜராத்தி என பலமொழிகளிலும் பாடும் திறமையை பெற்றிருந்தார்.

    மேடைகளில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் பாடியுள்ளார். திரையில் பாடியதோடு நில்லாமல் ஆரம்பகாலங்களில் தன்னுடைய நடிப்புத் திறமைகளையும்கூட வெளிப்படுத்தியுள்ளார்.

    இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பினை கருத்தில்கொண்டு 1998 ல் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    🎶🎶🎶🎶🎶🎶


    சிதம்பரம் சுப்ரமணியம்.

    Chidambaram Subramaniyam.

    பெயர் :- சிதம்பரம் சுப்ரமணியம் (Chidambaram Subramaniyam).

    chidambaram-subramaniam.


    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- தமிழ்நாடு. Tamilnadu.

    பிறப்பு :- கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள "செங்குட்டைப்பாளையம்" என்ற கிராமத்தில் 30-01-1910 அன்று பிறந்தார்.

    இறப்பு :- 07-11-2000 அன்று தனது 90 வது வயதில் காலமானார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1998.

    வாழ்க்கை முறை :- தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றவர்.

    1952 ம் ஆண்டு முதல் 1962 ம் ஆண்டுவரை தமிழ்நாடு மாநில அரசின் கல்வி, சட்டம் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்தவர்.

    சுதந்திர இந்தியாவில் மத்திய வேளாண் அமைச்சராக பதவி வகித்தார். மத்திய வேளாண் அமைச்சராக பதவியில் இருந்தபோது பசுமை புரட்சி திட்டத்தை செயல்படுத்தினார். அது மாபெரும் வெற்றியை பெற்றது. ஆதலால் இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுகிறார்.

    அரசியலில் இவர் ஆற்றிய மக்கள் பணிகளை கருத்தில்கொண்டு இவருக்கு 1998 ல் பாரதரத்னா விருது அளிக்கப்பட்டது.

    💫💫💫💫💫💫


    ஜெயபிரகாஷ் நாராயண்.

    Jayaprakash Narayan.

    பெயர் :- ஜெயபிரகாஷ் நாராயண் (Jayaprakash Narayan).

    Jayaprakash Narayan.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- பீகார். Bihar.

    பிறப்பு :- பீகாரில் உள்ள "சிதாப்தியரா" என்ற கிராமத்தில் 1902 ம் ஆண்டு அக்டோபர் 11 ல் பிறந்தார்.

    இறப்பு :- 1979 அக்டோபர் 8 ல் பாட்னாவில் காலமானார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- மறைவுக்குப்பின் - 1998.

    வாழ்க்கை முறை :- பீகாரை சேர்ந்த சுதந்திர போராட்டத் தலைவர். சமூகப் பணியாளர். ஜனதா கட்சிக்கு வித்திட்டவர். மக்களால் ஜெ.பி என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

    ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதன்மூலம் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் இணைந்து போராடினார். இதனால் வெள்ளையர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு "ஹசாரிபாக்" சிறையில் அடைக்கப்பட்டார்.

    சுதந்திரத்திற்கு பிறகு அரசியலில் ஆர்வம் செலுத்தாது "மக்கள் பணியே மகேசன் பணி" என்பதற்கிணங்க மக்கள் சேவையாற்றிவந்தார். 1975 களில் எமர்ஜென்ஸியை கொண்டுவந்த "இந்திரா காந்தி"யை எதிர்த்து போராடினார்.

    அவர் தொடங்கிய முழு புரட்சி இயக்கம் நாடு முழுவதும் பெரும் ஆதரவை பெற்றது. அதன்காரணமாக 1977 ம் ஆண்டு ஜனதா கட்சி அரியணை ஏற  வித்திட்டார்.

    அவர் ஆற்றிய சமூக பணிக்காக அவரது மறைவுக்குப்பிறகு 1998 ல் பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.

    💫💫💫💫💫💫


    ரவிசங்கர்.

    Ravi Shankar.

    பெயர் :- ரவிசங்கர் (Ravi Shankar). இயற்பெயர் "ரவீந்திரோ சங்கர் சவுத்ரி".

    Ravi Shankar.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மேற்கு வங்காளம் - West Bengal.

    பிறப்பு :- 1920 ஏப்ரல் 7 ல் வாரணாசியில் பிறந்தார்.

    இறப்பு :- 2012 ம் வருடம் டிசம்பர் 11ம் நாள் தன்னுடைய 92 வது வயதில் காலமானார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1999.

    வாழ்க்கை முறை :- மேற்கு வங்காளத்தை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற இந்திய சித்தார் இசைக் கலைஞர்.

    இந்திய இசையை மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தியவர்.

    பல மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

    உருது கவிஞர் முகமது இக்பாலின் "ஸாரே ஜஹான்சே அச்சா" பாடலுக்கு இசையமைத்து அனைவர் கவனத்தையும் பெற்றார்.

    சில திரைப்படங்களுக்கும் இசையமைத்து உள்ளார்.

    மூன்று முறை கிராமிய விருது பெற்றவர்.

    இவருடைய இசை சேவையை போற்றும்விதமாக இவருக்கு 1999 ல் பாரதரத்னா விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.

    🎻🎻🎻🎻🎻🎻


    அமர்த்தியா சென்.

    Amartya Sen.

    பெயர் :- அமர்த்தியா சென் (Amartya Sen). ["அமர்த்தியா" என்றால் அழிவற்றவர் என்று பொருள்].

    amartya-sen

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மேற்கு வங்காளம். West Bengal.

    பிறப்பு :- 1933 நவம்பர் 3.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1999.

    வாழ்க்கை முறை :- மேற்கு வங்கத்தை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். பொருளாதார தத்துவங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    மேலும் இவர் எழுத்தாளரும் கூட. 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

    1998 ல் இவருக்கு "நோபல்" பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான "பாரதரத்னா" விருது 1999 ல் இவருக்கு கொடுக்கப்பட்டது.

    💫💫💫💫💫💫


    கோபிநாத் போர்டோலாய்.

    Gopinath Bordoloi.

    பெயர் :- கோபிநாத் போர்டோலாய் (Gopinath Bordoloi).

    Gopinath_Bordoloi.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- அசாம். Assam.

    பிறப்பு :- 1890 ஜூன் 6.

    இறப்பு :- 1950 ஆகஸ்ட் 5.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1999.

    வாழ்க்கை முறை :- சுதந்திர போராட்டத் தலைவர். அசாமின் முதல் முதல்வர்.

    இந்தியாவின் பிரிவினையின்போது இவரது தீவிரமான எதிர்ப்பு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பகுதியுடன் "அசாம்" இணைக்கப்பட இருந்தது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அரசியலில் இவருக்கிருந்த பங்களிப்பை கருத்தில்கொண்டு இவருடைய மரணத்திற்கு பின் 1999 ல் பாரதரத்னா வழங்கப்பட்டது.

    💫💫💫💫💫💫


    லதா மங்கேஷ்கர்.

    Lata Mangeshkar.

    பெயர் :- லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar). இயற்பெயர் "ஹேமா".

    Lata Mangeshkar.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மத்தியபிரதேசம் - Madhya Pradesh.

    பிறப்பு :- 1929 ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள "இந்தூர்" என்ற இடத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 2022 ம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி தன்னுடைய 92 வது வயதில் காலமானார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 2001.

    வாழ்க்கை முறை :- தன்னுடைய மயக்கும் குரலால் இந்திய திரைப்பட உலகின் புகழ்பெற்ற பாடகியாக விளங்கியவர்தான் லதா மங்கேஷ்கர்.

    இவர் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர். முதலில் இவர் நடிகையாகவே தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார். அதன் பின்பே பாடகியாக விஸ்வரூபமெடுத்தார்.

    1942 ல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடிகையாக அறிமுகமானவர் 1945 ல் "கஜபஹீ" என்னும் இந்தி படத்தில் முதன்முதலாக பாடலானார். 1949 ம் ஆண்டு மதுபாலவுக்காக பாடிய பாடல் அனைவரையும் கட்டிப்போட்டது.

    விளைவு...

    முழுநேர பாடகியாகி 30 ற்கும் மேற்பட்ட மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரையில் பாடி குவித்துள்ளார்.

    இவரின் இசை பங்களிப்பை பாராட்டி 2001 ல் பாரதரத்னா அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    🎶🎶🎶🎶🎶🎶


    உஸ்தாத் பிஸ்மில்லா கான்.

    Ustad Bismillah Khan.

    பெயர் :- "உஸ்தாத் பிஸ்மில்லா கான்" (Ustad Bismillah Khan). இவரின் இயற்பெயர் அதாவது இவருடைய பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் "கமருதீன்" (Qamaruddin).

    "பிஸ்மில்லா கான்" என்பது இவருடைய தாத்தா வைத்த பெயர். கடைசியில் தாத்தா வைத்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. பெயரின் முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் "உஸ்தாத்" என்பது அடைமொழியாகும். உஸ்தாத் என்றால் "மேதை" என பொருள்.

    Bismillah Khan.

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- பீகார் - Bihar.

    பிறப்பு :- 1916 ம் ஆண்டு மார்ச் 21 ம் நாள் பீகார் மாநிலத்தில் உள்ள "தும்ரான்" என்ற கிராமத்தில் பிறந்தார்.

    இறப்பு :- 2006 ஆகஸ்ட் 21.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 2001.

    வாழ்க்கை முறை :- உலகப் புகழ்பெற்ற இந்திய ஷெனாய் இசை மேதை. பீகாரில் பிறந்தவர். மதசார்பற்ற கொள்கையை கடைபிடித்த அவர் பல்வேறு வழிபாட்டு தலங்களில் ஷெனாய் இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். இவருடைய இசைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.

    இசையில் இவர் நிகழ்த்திய சாதனையை பாராட்டி இவருக்கு 2001 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    🎺🎺🎺🎺🎺🎺

    இப்பதிவின் தொடர்ச்சியாகிய ஒன்பதாவது பகுதியை படிக்க [Part - 9] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

    👉👉பாரத ரத்னா வெற்றியாளர்கள் - Bharat Ratna Award Winners - Part 9👈👈

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    6 கருத்துகள்

    1. இன்றைய பதிவில் அஸ்ஸாமைச் சேர்ந்த போர்டோலாய் தவிர மற்ற எல்ல்லோரும் தெரிந்தவர்கள். போர்டோலாய்க்கு ரொம்ப தாமதமாகக் கொடுத்திருக்காங்களோ?

      கீதா

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. ஆமாம்... சகோதரி ரொம்ப லேட்... போட்டோவில் மனிதர் சோகமாக இருப்பதை பார்த்தாலே புரியவில்லையா?... ரொம்ப ரொம்ப லேட்...

        நீக்கு
    2. சிறந்த மனிதர்களுக்கு விருது போற்றுவோம்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. ஆம்... அனைவருமே போற்றுதலுக்கு உரிய மனிதர்களே!!... நன்றி நண்பரே!!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.