"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா - Medal Winning Gems of India - Part 7.

பாரத ரத்னா - Medal Winning Gems of India - Part 7.

Bharat Ratna Awardees.

1992 - 1997.

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

(PART - 7).

     சிறந்த குடிமக்களுக்கான சிவிலியன் விருதுகள் பல இருந்தாலும் அதில் முதன்மையானதாக இருப்பது "பாரத ரத்னா" எனலாம்.

பாரதரத்னா விருதானது 1954 ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது. 1954 ம் ஆண்டு தொடங்கி 2021 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

bharat-ratna-award

பாரத ரத்னாவுக்கு அடுத்த நிலையிலுள்ள சிவிலியன் விருதுகளாக "பத்ம" விருதுகளைக் குறிப்பிடலாம். அவை பத்ம விபூஷன்பத்ம பூஷன் மற்றும்  பத்மஸ்ரீ ஆகியன.

நாம் தொடர்ந்து சில பதிவுகளாக பாரதரத்னா விருது பெற்ற சாதனையாளர்களைப்பற்றி பார்த்துவருகின்றோம். அந்த வரிசையில் இது 7 வது பகுதி (Part 7).

இதுவரையில் 1954 முதல் 1991 வரையான கால இடைவெளியில் பாரதரத்னா விருது வாங்கிய சாதனையாளர்களைப்பற்றி பார்வையிட்டுள்ளோம் .

வாருங்கள்... 7 வது பகுதியாகிய இப்பகுதியில் 1992 ம் வருடம் முதல் 1997 ம் வருடம் வரையான இடைப்பட்ட காலங்களில் விருதுபெற்ற சாதனையாளர்களைப்பற்றி பார்க்கலாம்.

    அபுல் கலாம் ஆஸாத்.

    Abul Kalam Azad.

    பெயர் :- அபுல் கலாம் ஆஸாத் (Abul Kalam Azad). "ஆஸாத்" என்பது இவர் தனக்குத்தானே வைத்துக்கொண்ட புனைப்பெயர். ஆஸாத் என்றால் "விடுதலை" என்று பொருள்.

    Abul Kalam Azad

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மேற்கு வங்காளம் - West Bengal.

    பிறப்பு :- வங்காளத்தில் வசித்துவந்த இவரது முன்னோர்கள் 1857 ல் நடந்த சிப்பாய் புரட்சியின் காரணமாக சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா நகரில் குடியேறினர். அங்குதான் அபுல் கலாம் ஆஸாத் 1888 ம் ஆண்டு நவம்பர் 11 ம் நாள் பிறந்தார். இவர் பிறந்த 2 ஆண்டுகளிலேயே இவரது குடும்பம் மறுபடியும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து கொல்கத்தாவில் குடியேறியது.

    இறப்பு :- 1958 பிப்ரவரி 22 ம் நாள் தன்னுடைய 70 வது வயதில் மறைந்தார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- மறைவுக்குப்பின் - 1992.

    வாழ்க்கை முறை :- இவர் "மவுலானா ஆசாத்" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார் என்றாலும் இவருடைய முழுப்பெயர் "அபுல் கலாம் முகியுத்தின் அகமது" என்பதாகும்.

    இந்திய முஸ்லீம் அறிஞராக அறியப்பட்ட இவர் இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவராவார்.

    சுதந்திர போராட்டத்தில் தன்னை முதன்மைப்படுத்திக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற அனுபவம் இவருக்கு நிறையவே உண்டு.

    இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில் இந்திய பிரிவினையை எதிர்த்து குரல்கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

    சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட இவரது பிறந்த நாளான நவம்பர் 11 ம் தேதி தேசிய கல்வி தினமாக இந்தியாவில்  கொண்டாடப்பட்வருகிறது.

    இவருடைய சுதந்திர போராட்டம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு ஆகியவைகளை கருத்தில்கொண்டு 1992 ல் இவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.

    💫💫💫💫💫💫

    J.R.D. டாடா.

    J.R.D. Tata.

    பெயர் :- J.R.D. டாடா (J.R.D. Tata). முழுப்பெயர் "ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா".

    J.R.D. Tata

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மகாராஷ்டிரா (Maharashtra).

    பிறப்பு :- பிரபல தொழிலதிபரான "இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா" விற்கு மகனாக 1904 ம் ஆண்டு ஜூலை 29 ம் நாள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். தந்தை இந்தியராக இருந்தாலும் தாயார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் இவருடைய பிறப்பு மட்டுமல்லாது குழந்தைப்பருவமும் பிரான்சிலேயே அமைந்தது.

    இறப்பு :- 1993 ம் ஆண்டு நவம்பர் 29 ல் தன்னுடைய 89 வது வயதில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் இறந்தார். இவருடைய மனைவி "தெல்மா டாட்டா" சுவிட்ச்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1992.

    வாழ்க்கை முறை :- மகாராஷ்டிராவை சேர்ந்த இவருடைய முழு பெயர் "ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா".

    இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். இந்திய விமான போக்குவரத்து துறையின் முன்னோடி. நாட்டின் முதல் விமானி.

    டாடா குழுமத்தலைவராக செயல்பட்ட இவர் டாடா அறக்கட்டளைமூலம் ஆசியாவின் முதல் புற்றுநோய் மருத்துவமனையை 1941 ல் மும்பையில் நிறுவினார்.

    இவருடைய சேவையை பாராட்டி 1992 ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    💫💫💫💫💫💫

    சத்யஜித் ரே.

    Satyajit Ray.

    பெயர் :- சத்யஜித் ரே (Satyajit Ray).

    Satyajit Ray

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- மேற்கு வங்காளம். West Bengal.

    பிறப்பு :- 1921 ம் ஆண்டு மே 2 ல் கொல்கத்தாவில் பிறந்தார்.

    இறப்பு :- 1992 ஏப்ரல் 23.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1992.

    வாழ்க்கை முறை :- மேற்குவங்க திரைப்பட இயக்குனரான இவர்தான் "ஆஸ்கார்" விருதை வென்ற முதல் இந்தியர். இவர் இயக்கிய அபுர் சன்ஸார், அபராஜிதோ, பதேர் பஞ்சாலி ஆகிய திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்றவை.

    இவர் ஒரு உலகப்புகழ்பெற்ற திரைப்பட இயக்குனராக அறியப்பட்டாலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், திரைப்பட விமர்சகர் என்ற பன்முகத்தன்மையோடு சிறந்த எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

    புனைக்கதை எழுத்தளார் மட்டுமல்லாது புத்தக பதிப்பாளரும்கூட. அதுமட்டுமல்லாது ஓவியம் வரைவதிலும் கில்லாடி. "சாந்தி நிகேதன்" பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலையை முறையாகப் பயின்றவர்.

    கலைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைகளுக்காக இவருக்கு 1992 ல் பாரதரத்னா விருது கொடுத்து பெருமைபடுத்தப்பட்டது.

    💫💫💫💫💫💫

    குல்சாரிலால் நந்தா.

    Gulzarilal Nanda.

    பெயர் :- குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda).

    gulzarilal-nanda

    நாடு :- இந்தியா (India).

    மாநிலம் :- பஞ்சாப் - Punjab.

    பிறப்பு :- 1898 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் பிறந்தார். இந்த சியால்கோட் தற்போது பாகிஸ்தானின் ஒருபகுதியாக உள்ளது.

    இறப்பு :- 1998 ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தன்னுடைய 99 வது வயதில் இயற்கை எய்தினார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1997.

    வாழ்க்கை முறை :- சிறந்த பொருளாதார நிபுணரான இவர் சிறந்த காந்தியவாதியாகவும் விளங்கினார். காந்திய கொள்கையை கடைசிவரை  முழுமையாகக் கடைபிடித்தவர். மிகசிறந்த சுதந்திர போராட்ட வீரரும்கூட. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர்.

    நேரு மறைவின்போதும், லால் பகதூர் சாஸ்திரி மறைவின்போதும் நாட்டின் இடைக்கால பிரதமாராக பணியாற்றியவர்.

    தன் வாழ்கையின் கடைசி காலம் வரையில் நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்துகாட்டியவர்.

    நாட்டிற்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி இவருக்கு 1997 ல் பாரதரத்னா விருது அளிக்கப்பட்டது.

    💫💫💫💫💫💫

    அருணா ஆசப் அலி.

    Aruna Asaf Ali.

    பெயர் :- அருணா ஆசப் அலி (Aruna Asaf Ali). இவருடைய இயற்பெயர் அருணா கங்குலி. கணவர் பெயர் ஆசப் அலி.

    Aruna Asaf Ali

    நாடு :- இந்தியா - India.

    மாநிலம் :- அரியானா.

    பிறப்பு :- 1909 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் பிறந்தார்.

    இறப்பு :- 1996 ஜூலை 29 ம் தேதி தன்னுடைய 86 வது வயதில் காலமானார்.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- மறைவுக்குப்பின் 1997.

    வாழ்க்கை முறை :- இந்திய விடுதலை இயக்க தன்னார்வலராக திகழ்ந்த அருணா 1942 ல் நடைபெற்ற வெள்ளையானே வெளியேறு போராட்டத்தின்போது பாம்பே கோவாலியா டேங்க் மைதானத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை ஏற்றியவர்.

    காங்கிரஸ் தலைவரான ஆசப் அலியை 1928 திருமணம் செய்துகொண்டதன் மூலம் அரசியல் களத்தில் புகுந்தார். 1930 ல் தண்டியாத்திரையிலும் முனைப்புடன் கலந்துகொண்டார். 1932 ல் சிறைக்கைதிகளின் நலனுக்காக திகார் சிறையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தனர். 1958 ல் தில்லியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

    சுதந்திரப்போரட்டத்தின்போது துணிச்சலான செயல்பாடுகளுக்காக இவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ஆனால் இவருடைய மறைவிற்கு பின்பே 1997 ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    💫💫💫💫💫💫

    A.P.J. அப்துல்கலாம்.

    A.P.J. Abdul Kalam.

    பெயர் :- A.P.J. அப்துல்கலாம் (A.P.J. Abdul Kalam). இயற்பெயர் "ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம்.

    A.P.J. Abdul Kalam

    நாடு :- இந்தியா - India.

    மாநிலம் :- தமிழ்நாடு - Tamilnadu.

    பிறப்பு :- 1931 அக்டோபர் 15.

    இறப்பு :- 2015 ஜூலை 27.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1997.

    வாழ்க்கை முறை :- தமிழகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவின் தலைசிறந்த பாதுகாப்பு விஞ்ஞானியாக போற்றப்படும் இவர் ஆரம்பகாலங்களில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

    இவர் இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதில் மிக முக்கியமானவர் என்பதால் இந்தியாவின் "ஏவுகணை நாயகன்" என அழைக்கப்படுகிறார்.

    1974 ல் பொக்ரானில் நடத்தப்பட்ட 2 வது அணுகுண்டு சோதனையிலும் முக்கிய பங்காற்றியவர். பின்னாளில் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராகவும் பதவிவகித்தார்.

    அறிவியலில் இவர் ஆற்றிய அரும்பணிகளை கருத்தில்கொண்டு இவருக்கு 1997 ம் ஆண்டுக்கான பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    💫💫💫💫💫💫

    இப்பதிவின் தொடர்ச்சியாகிய எட்டாவது பகுதியை படிக்க [Part - 8] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

    👉👉பாரத ரத்னா - Bharat Ratna Awarded Diamond Star - Part 8👈👈

    💫💫💫💫💫💫💫

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.