"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 3. List of National Flower - Part 3.

தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 3. List of National Flower - Part 3.

தேசங்களின் தேசிய மலர்கள்.

List of National Flower.

PART - 3.

         உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி மற்றும் தேசிய கீதங்களை கொண்டுள்ளன. இவைகள் தேசங்களின் பெருமைகளை பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல் தேசியத்தின் பெருமைமிகு அடையாளமாகவும் இருந்துவருகின்றன.


List of National Flower.

தேசியக் கொடி மற்றும் தேசிய கீதங்களோடு நின்றுவிடாமல் தங்களுடைய பண்பாட்டினை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு தேசங்களும் தங்கள் நாட்டின் பாரம்பரியமாக இருந்துவரும் விலங்கு, பறவை, மரம், மலர் மட்டுமல்லாது பாரம்பரியமாக விளையாடிவரும் விளையாட்டுகளைக்கூட தேசிய சின்னங்களாக அடையாளப்படுத்துகின்றன.

"நம் தேசங்களின் தேசிய மலர்கள்" என்னும் இத்தொடர்பதிவில் தொடர்ந்து இருபதிவுகளாக பல நாடுகளின் தேசிய மலர்களைப் பார்த்துவருகின்றோம். அதன் வரிசையில் இத்தொடரின் இறுதிப்பகுதியாகிய இப்பதிவில் மேலும் சில நாடுகளின் தேசிய மலர்களையும் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

இத்தொடரின் முதல் பகுதியை பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க....

👉தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 1. List of National Flower - Part 1.👈


List of National Flower.


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
1 Puerto Rico பியூர்டோ ரிகோ Maga tree flower மகா மரத்தின் மலர்
2 Romania ருமேனியா Peony flower பியோனி மலர்
3 Russia ரஷ்யா Chamomile ஜெர்மன் வெள்ளை சாமந்தி
4 Saint Lucia செயின்ட் லூசியா Marguerite rose மார்குரைட் ரோஜா
5 Samoa சமோவா Teuila டெய்லா மலர்
6 San Marino சான் மரினோ Cyclamen flower சைக்லேமன் மலர்
7 Scotland ஸ்காட்லாந்து Thistle flower திஸ்டில் மலர்
8 Serbia செர்பியா Plum Blossom பிளம் பிளாசம்
9 Singapore சிங்கப்பூர் Vanda Miss Joaquim வாண்டா மிஸ் ஜோவாகிம்

Maga tree flower_Peony flower_Chamomile_Marguerite rose

Teuila_Cyclamen flower_Thistle flower_Plum Blossom

Vanda Miss Joaquim


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
10 Slovakia ஸ்லோவாகியா Rose ரோஜா
11 Slovenia ஸ்லோவேனியா Red Carnation சிவப்பு கார்னேஷன்
12 South Africa தென்னாப்பிரிக்கா King Protea கிங் புரோடீ
13 South Korea தென் கொரியா Sharon ஷரோன்
14 Spain ஸ்பெயின் Red Carnation சிவப்பு கார்னேஷன்
15 Sri Lanka இலங்கை Blue Water Lily நீலோற்பலம்
16 St.Kitts - Nevis செயின்ட் கிட்ஸ் - நெவிஸ் Royal Poinciana செம்மயிற்கொன்றை
17 Suriname சுரினாம் Jungle Geranium வெட்சிப்பூ
18 Sweden ஸ்வீடன் Linnaea Borealis லின்னியா பொரியாலிஸ்

Rose_Red Carnation_King Protea_Sharon

Blue Water Lily_Royal Poinciana_Jungle Geranium_Linnaea Borealis


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
19 Switzerland சுவிட்சர்லாந்து Edelweiss எடல்வீஸ் மலர்
20 Syria சிரியா Jasmine மல்லிகை பூ
21 Taiwan தைவான் Plum Blossom பிளம் ப்ளாசம்
22 Thailand தாய்லாந்து Golden shower சரக்கொன்றை
23 Tonga டோங்கா Heilala ஹீலாலா
24 Trinidad and Tobago டிரினிடாட்-டொபாகோ Chaconia சாகோனியா
25 Tunisia துனிசியா Jasmine மல்லிகை
26 Turkey துருக்கி Tulip துலிப்
27 Ukraine உக்ரைன் Sunflower சூரியகாந்தி


Edelweiss_Jasmine_Plum Blossom_Golden shower

Heilala_Chaconia_Tulip_Sunflower


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
28 United Kingdom இங்கிலாந்து Tudor Rose சிவப்பு வெள்ளை ரோஜா
29 Unites States of America அமெரிக்கா Rose ரோஜா
30 Uruguay உருகுவே Ceibo செய்போ
31 Vatican City வாடிகன் நகரம் Easter Lily ஈஸ்டர் லில்லி
32 Venezuela வெனிசுலா Flor de Mayo ஃப்ளோர் டி மாயோ
33 Vietnam வியட்நாம் Lotus தாமரை
34 Wales வேல்ஸ் Daffodil பேரரளி
35 Yugoslavia யூகோஸ்லேவியா Lily of the valley வன லில்லி
36 Zimbabwe ஜிம்பாப்வே Flame Lily செங்காந்தள்

Tudor Rose_Rose_Ceibo_Easter Lily

Flor de Mayo_Lotus_Daffodil_Lily of the valley

Flame Lily

💖 💖 💖 💖 💖 💖 💖

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

12 கருத்துகள்

  1. தகவல்கள் சிறப்பு நண்பரே.

    தொடர்ந்து வரட்டும்...

    பதிலளிநீக்கு
  2. கண்ணைக் கவரும் மலர்களுடன் அசத்தல் தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  3. ஆ! ரஷ்யா ஜெர்மன் சாமந்தியை தன் தேசியப் பூவாக வைச்சிருக்கே!!! புட்டின் வேறு மலரை மாத்தலை போலருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புட்டினுக்கு உக்ரைனில் நிறைய வேலை இருப்பதால் தேசிய மலரில் கவனம் செலுத்த நேரம் இல்லை போலும்...

      நீக்கு
  4. கேரளாவுக்கே உரித்தான சரக்கொன்றை தாய்லாந்துப் பூ!!!

    செங்காந்தள் விரல்கள் போலன்னு சொல்றது செங்காந்தள் பூப் படத்தைப் பார்த்ததும் புரிகிறது! ஜிம்பாப்வே பெண்களின் விரல்கள் செங்காந்தள் விரல்களோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "செங்காந்தள்" பூக்கள் எங்கள் இடங்களிலும் அபூர்வமாக சில இடங்களில் காணப்படுகின்றன. படத்தில் பார்ப்பதைவிட நேரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருகின்றன.

      நீக்கு
  5. சிலது நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது சிலது எட்ட மாட்டேங்குது!! தகவல்கள் அருமை. பொது அறிவில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.