"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பன்மொழி அறிஞர்களின் பொன்மொழிகள் - Mottoes of Multilingual Scholars.

பன்மொழி அறிஞர்களின் பொன்மொழிகள் - Mottoes of Multilingual Scholars.

Mottoes of Multilingual Scholars.

          உலகம் முழுவது வாழும் மக்கள் நலமாக வாழவேண்டும் என்னும் பொது நோக்கோடு வாழ்ந்த அறிஞர்கள் உலகம் முழுக்க இருந்துள்ளனர். சமூகத்தினூடே இளையோடிப்போன அவலங்களை நீக்குவதோடு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல அறிவார்ந்த கருத்துக்களை விதைத்து சென்றுள்ளனர்.

Mottoes of Multilingual Scholars

அவ்வாறு நம்மிடையே விதைத்துசென்ற பொன்மொழிகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.


பன்மொழி அறிஞர்களின் பொன்மொழிகள்.

  • சிந்திக்காமல் படிப்பது ஜீரணிக்காமல் உண்பதைப் போன்றது - பர்க்.
  •  நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள். நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள் - டால்ஸ்டாய்.
  • கற்றவர்களிடம் கற்பதைவிட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள் - காரல் மார்க்ஸ்.
  • தரமான ஒன்று உயர்வான ஒன்றுக்கு எதிரியாகும் - அரிஸ்டாட்டில்.
  • வன்முறை என்பது மோசமானது. ஆனால் அடிமைத்தனம் என்பது வன்முறையை காட்டிலும் மோசமானது - சுபாஷ் சந்திரபோஸ்.
  • உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என நினைத்துக்கொள்ளாதே. எல்லோரையும் ஜெயிக்க நீ பிறந்திருக்கிறாய் என்று நினைத்துக்கொள் - நெப்போலியன்.
  • ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட தேக்கு விற்பான் - வாலி.
  • ஊக்கத்தை கைவிடாதே, ஆக்கத்திற்கான முதல் படிக்கட்டு அதுவே - அறிஞர் அண்ணா.
  • சோம்பல் மாவீரனைக்கூட சாம்பலாக்கிவிடும் - பார்ட்டன்.
  • பைத்தியக்காரனை திருத்தி விடலாம். ஆனால் தற்பெருமை பேசுபவனை திருத்தவே முடியாது - சாக்ரடீஸ்.
  • பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைவில்கொள். நீ முன்னால் இருக்கிறாய் என்று - ஹிட்லர்.
  • மரணம் அஞ்சக்கூடியதல்ல. அதர்மத்தைக் கண்டே அஞ்சுதல் வேண்டும். அதர்மம் எப்போதுமே ஆபத்தானது - சாக்ரடீஸ்.
  • இருட்டை சபித்துக்கொண்டு இருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றலாமே - கன்பூசியஸ்.
  • எண்ணங்களுக்கு ஏற்ப வசதிகளை பெருக்குவதைவிட வசதிகளுக்கேற்ப எண்ணங்களை குறைத்துக் கொள்வதே சிறப்பு - அரிஸ்டாட்டில்.
  • அன்பும், அடக்கமும் துன்பம் வந்த பின்பே பலரால் பின்பற்றப்படுகிறது - ஜார்ஜ் எலியட்.
  • கண்டிக்க தெரியாதவனால் கருணை காட்டவும் தெரியாது - கார்லைல்.
  • அறத்தின் இலக்கணம் அறியாதவர்களே "நான் செய்த அறத்திற்கான கூலி எங்கே?" என இரைந்து கொண்டிருப்பர் - மேட்டாலிங்க்.
  • அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வர்யம், தர்மம் தரித்திருக்கும் ஆடையோ தரித்திரம் - தியோக்னீஸ்.
  • ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்கு தெரியும். ஒரு சமயத்தில் ஒரு வேலை செய்வதுதான் கடினமானது - மெக்லாலின்.
  • எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர் பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலேயே போய் விடுவீர்கள் - எட்மண்ட் பர்சி.
  • மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும் - மாண்டேகு.
  • பணத்தை தவறான வழியில் இழப்பது குற்றம். தவறான வழியில் தேடுவது அதைவிடவும் குற்றம் - ஜான் ரஸ்கின்.
  • குளிர் அதிகம்தான். நான் உடுத்திருக்கும் ஆடை என்னவோ கந்தல்தான். ஆனாலும் என்னுடைய ஒழுக்கம் எனக்கு தேவையான உஷ்ணத்தை கொடுக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு என்றுமுண்டு - ட்ரைடன்.
  • உண்மையான நட்பு "ஆரோக்கியம்" போன்றது. அதனை இழக்கும் வரையில் அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை - வோல்டன்.
  • நேரத்தை தள்ளிப்போடாதே, தாமதத்தால் அபாயமான முடிவுகளே ஏற்படுகின்றன - ஷேக்ஸ்பியர்.
  • மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல. தடைகளை வெற்றிகரமாக தாண்டி வாழும் வாழ்க்கை - ஹெலன் கெல்லர்.
  • பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் மேலானது - ஜேம்ஸ் ஹோபெல்.
  • எந்த தொழிலும் இழிவில்லை. எந்த தொழிலும் செய்யாதிருப்பதே இழிவு - டால்ஸ்டாய்.
  • அளவில்லா சோதனைகளை தாங்கி குறைவில்லா சாதனைகளை படைப்பவனின் பெயரே மேதை - ஹோம்கின்ஸ்.
  • பேயை அடக்குவதை காட்டிலும் அதனை எழுப்புவது எளிது - காரிக்.
  • விற்பனைக்கு இருப்பது அனைத்துமே அழுகிய பழமெனில் எதைக் கொள்ளுவதாம் எதைத் தள்ளுவதாம்? - ஷேக்ஸ்பியர்.
  • நூல்களை படித்தால் நூலறிவு கிடைத்துவிடும். ஆனால், மெய்ஞானம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதன்று - டெனிஸன்.
  • தன்னை முழுமையாக அறியாதவன் ஒருபோதும் பிறரை சரியாக அறிய முடியாது - நோவாலிஸ்.
  • அறிவிலிகள் அறிவாளிகளிடமிருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. ஆனால், அறிவாளிகள் அறிவிலிகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள் - கேடோ.
  • முடியுமானால் உன்னை சுற்றியிருப்பவர்களைவிட அறிவாளியாக இரு. ஆனால் நீ அறிவாளியாக இருப்பதை அவர்களிடம் கூறி விடாதே. கேலிகளும் கிண்டல்களுமே பரிசாய் கிடைக்கும் - செஸ்டர்பீல்டு.
  • சாக்கடை நீரில் அழுக்கை கண்டு முகம் சுளிப்பதும், வானத்தின் பிரதிபலிப்பை கண்டு அகம் மகிழ்வதும் அவரவர் மனநிலையை பொறுத்தது - ரஸ்கின்.
  • குறுகிய புத்தியுள்ள மனிதர்கள் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களைப் போல. ஏனெனில், அகத்தில் உள்ளதை வெளியில் கொட்டும்போது இரண்டுமே அதிக சப்தத்தை எழுப்புகின்றன - ஸ்விப்ட்.
  • பிறரை வணங்க ஆரம்பிக்கும்போதே அவர்கள் மத்தியில் வளர ஆரம்பித்து விடுகிறாய் - கோல்ரிட்ஜ்.
  • ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகை - டெனிஸன்.
  • உரோமம் ஒன்றாகவே இருந்தாலும் அதற்கும் நிழல் உண்டல்லவா? - பப்ளியஸ் சைரஸ்.
  • குறைகளை கண்டு மகிழ்ந்தால் குணங்களை கண்டும் காணாமல் கடந்து செல்ல வேண்டி வந்துவிடும் - லா புரூயர்.
  • குறைகளை மட்டுமே காண்பவர் புழுக்களை மட்டுமல்ல பூக்களையும் நிராகரித்துவிடுகின்றனர் - ரிக்டர்.

what do flaws in a relationship

  • உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சகம் ஒன்றே - மில்டன்.
  • இன்சொற்களின் விலை சொற்பமே. ஆனால் அதன் மதிப்போ அதிகம் - ஹெர்பர்ட்.
  • ஒரு மண்பனையை தட்டும்போது அது எழுப்பும் ஒலியைக்கொண்டு அதில் கீறல் உள்ளதா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஒருவன் அறிவாளியா அறிவிலியா என்பதனை அவன் வாயிலிருந்து வெளிப்படும் பேச்சால் அறிந்து கொள்ளலாம் - டெமாஸ்தனீஸ்.
  • பேச வேண்டிய காலத்தை அறியாதவன் பேசக்கூடாத காலத்தையும் அறியான் - பப்ளியஸ் சைரஸ்.
  • வாள் தரும் புண்ணைக்காட்டிலும் நாவு தரும் புண்ணே மிகக் கொடியது. ஆறாதது - பித்தகோரஸ்.
  • இதயமே தீயனவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தி சாலை. அதன் விற்பனை கூடமே உன் வாய் - லெய்ட்டன்.
  • முகஸ்துதி முட்டாள்களின் உணவு - ஸ்விப்ட்.
  • தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப்பார்த்து குரைக்காமல் இராது - ஹோம்.
  • அடுத்த வீட்டுக்காரனுடைய குறைகளை அம்பலப்படுத்த ஆசையுள்ளவனை குணப்படுத்த மருந்துமில்லை. மந்திரமுமில்லை - ஹார்வி.
  • வீணாக்கிய நாட்களுள் அதிகமான அளவில் வீணாக்கிய நாட்கள் நீ சிரிக்காத நாட்களே - ஷாம்பர்ட்.
  • தனவந்தன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தரித்திரனைப்போல வாழவேண்டும் - டெம்பிள்.
  • என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால், நான் உதவி செய்ய மறுத்தால் அது என் குற்றம் - ஸெனீக்கா.
  • பணம் கொண்டதே மாளிகை. மனம் கொண்டதே வாழ்க்கை - மில்டன்.
  • அனுபவித்து தீரவேண்டியதற்கு எதிராக போராடி பலனில்லை. வாடைக்காற்றுக்கு எதிராக போராடுவதை காட்டிலும் போர்வையால் போர்த்திக் கொள்வதே சாலச்சிறந்தது - லவல்.

Cover with a blanket vadivelu

  • அதிகமான சிரிப்பு அறிவு சூனியத்தையே காட்டும் - கோல்ட்ஸ்மித்.
  • கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால் அதை அயோக்கியர்களுக்கும் அளித்திருக்க மாட்டார் அல்லவா? - ஸ்பிப்ட்.
  • நெருப்பு வழி செல்பவன் புகைக்கு அஞ்சமாட்டான் - டெனிஸன்.
  • எவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையும் பெற முடியாது - ஹெல்ப்ஸ்.
  • கல்விச்சாலையொன்றை திறப்பவன் சிறைச்சாலையொன்றை மூடுகிறான் - விக்டர் ஹீகோ.

💦💦💦💦💦💦💦

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. அனுபவத்தில் நடந்தவற்றையும் கண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவு உங்கள் அனுபவத்தை அசைபோட செய்ததில் மகிழ்ச்சி!

      நீக்கு
  2. நிறைய யோசிக்க வைத்த பொன்மொழிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் சிந்தனையை தூண்டும் விதத்தில் பல பொன்மொழிகள் இதில் இடம்பிடித்திருந்தது என்பதில் எமக்கும் பெருமையே!... தங்களின் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.