"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
இந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - அன்னை தெரசா - Mother Teresa Philosophy.

இந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - அன்னை தெரசா - Mother Teresa Philosophy.

அன்னை தெரேசாவின் தத்துவங்கள்.

Mother Teresa - Philosophy

இந்த உலகில் கருணை உள்ளத்தோடு கடைசிவரை வாழ்ந்தவர் அன்னை தெரேசா. தாய்மை உள்ளத்தோடு அனைவரையும் நேசித்ததால் "அன்னை" என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவர். அன்பு கலந்த அவரின் வாய்மையின் வழி நடப்போம்.

Annai Therasa Thaththuvangal.

வாழ்க்கைக் குறிப்பு.

பெயர் :- தெரசா - Teresa.

இயற்பெயர் :- ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ - Agnes Gonxha Bojaxhin.

செல்லப் பெயர் :- கோன்சா.

பிறப்பு :- 1910. ஆகஸ்ட் 26.

பிறந்த இடம் :- மசிடோனியா - ஸ்கோப்ஜி நகரம். (Macedonia - Skopje City)

தாயகம் :- அல்பேனியா - Albania.

தந்தை :- நிகோலா பொஜாஜியூ - Nikola Bojaxhin.

தாய் :- திரானி பெர்னாய் - Drane Bernai .

உடன் பிறப்பு :- அக்கா ( Aga ) மற்றும் அண்ணன் ( Lasar ). 

வாழ்க்கை :- ஆன்மீகம், ஏழைகளுக்கு தொண்டாற்றுதல்.

இறப்பு :- 1997, செப்டம்பர் 5.

இறந்த இடம் :- கொல்கத்தா - Kolkata.

விருதுகள்.

  • அமைதிக்கான நோபல் பரிசு - Nobel Prize (1979).
  • பாரத ரத்னா விருது - Bharat Ratna award (1980).
  • Golden Honour of the nation (1994).
  • சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் (1985).
  • பத்ம ஸ்ரீ - Padma Shri Award (1062).
  • டெம்பிள்டன் பரிசு (1973).
  • Congressional Gold Medal (1997).
  • சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது (1969).
  • Pope John XXIII Peace Prize (1971).
  • Order of Merit (1983).
  • Pacem in Terris Award (1976).
  • Albert Schweilzer International Prize (1975).
  • Ramon Magsaysay Award for Peace and International Understanding (1962).
  • Grand Order of Queen Jelena (1995).
  • Patronal Medal (1979).
  • Balzan Prize for humanity , Peace and Fratemity Among Peoples (1978). மற்றும் Order of the Smile.

உதிர்த்த தத்துவங்கள்.

  • அன்புதான் உன் பலவீனம் என்றால். இந்த உலகில் மிகச் சிறந்த பலசாலி நீதான்.
  • பிறருக்கு உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளை விட சிறந்தது.
  • வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. பிறர் மனதில் நீ வாழும் வரை தொடரும்.
Mother-Teresa
  • உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட , உன்னால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அதுவே சிறந்த வாழ்க்கை. !!!
  • உங்களை வெறுப்பவர் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்களையும் நேசிப்பவராக நீங்கள் இருங்கள்.
  • குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
  • நீங்கள் வாசம் செய்யும் இடத்தில் அன்பு பெருக வேண்டுமா? அனைவரிடமும் மனம்விட்டு பேசுங்கள் இதுவே ஒரே வழி.
  • நீ கருவுற்றால் ஓரு சில குழந்தைகளுக்கு வேண்டுமானால் தாயாகலாம். ஆனால் நீ கருணையுற்றாலோ ஓராயிரம் குழந்தைகளுக்கு தாயாகலாம்.
Teresa Philosophy
  • அனைவரும் இறுதியில் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம் . ஆனால் அது வரையில் இரக்கத்தோடு வாழ்ந்துவிட்டு செல்வோம்.
  • கொடுப்பது சிறியது என்று தயங்காதே, பெறுபவர்க்கு அதுபெரியது. எடுப்பது சிறியது என்று திருடாதே, இழந்தவருக்கு அது பெரியது.
  • நோய்களிலே மிகக் கொடிய நோய், பிறர் மீது அக்கறை இல்லாமல் இருப்பதே.
💕💕💕💕💕💕

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்