பறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.

பறவைகளும் பழமொழிகளும்.

Birds and proverbs.

          கடினமான விசயங்களை விளங்கிக் கொள்வதற்காகவும் பிறருக்கு எளிதாக புரியவைப்பதற்காகவும் நம் முன்னோர்கள் எதுகை, மோனையுடன் கூடிய சில சொற்றொடர்களை பயன்படுத்தி வந்தனர். அவைகளே பழமொழிகளாக பரிணமித்தன.

          அவைகள் காலத்தால் அழியாமல் இன்றும் தன் வீச்சு குறையாமல் இருந்துவருகிறது. "பறவைகளும் பழமொழிகளும்" என்னும் இந்த பதிவில் பறவைகளை மேற்கோள்காட்டி நிற்கும் சில பழமொழிகளை காணலாம்.

உறவு இல்லா வாழ்வு.

 • வௌவால் வீட்டிற்கு விருந்திற்கு போனால் தலைகீழாகத்தான் தொங்கணும்.
 • பாக்கு தின்ற வௌவாலுக்கு தாம்பூலம் தந்தது யாரோ?
 • உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
 • எருதுப்புண் காக்கைக்கு தெரியுமா?
 • கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும் பாழ்.
 • காகம் கொத்தி மாடு சாகாது. கோழி மிதிச்சு குஞ்சு சாகாது.
 • உறவு இல்லா வாழ்வு சிறகு இல்லா பறவை போல.
 • அன்ன நடை நடக்கப் போக உள்ள நடையும் போச்சு.
 • கூரை ஏறி கோழி பிடிக்க வக்கத்தவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
 •  கெட்ட காலத்திற்கு நாரை கெளிற்று மீனை விழுங்கினது போல.
birds_and_proverbs
 • வித்தை காட்டுற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
 • காட்டு கோழிக்கு உரலும் உலக்கையும்தான் கைலாசம்.
 • கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாகாது.
 • காகம் இல்லா ஊரும் இல்லை, சோகம் இல்லா வீடும் இல்லை.
 • குருவி உட்கார பனம்பழம் விழுத்தாற்போல.
 • தூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல.
 • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
 • கொக்கு பிடிக்க தலையில் வெண்ணை வைத்த கதை போல.
 • கடல் வற்றும் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்து உடல் வற்றி செத்ததாம் கொக்கு.
birds and proverbs
 • கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் காலை தூக்கிகிட்டு ஆடிச்சாம்.
 •  கிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்தது போல.
 •  முட்டை இடுகின்ற கோழிக்குத்தான் அதன் வலி தெரியும்.
 • பேச்சு பேச்சென்று பேசும் கிளி கூட பூனையைக் கண்டால் கீச்சு கீச்சென்றுதான் கத்தும்,
 • சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்திப் பார்க்கும்.
 •  ஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும்.
 •  கூரைமேல் சோறுபோட்டால் ஆயிரம் காகம் உறவு சொல்லி வரும்.
 •  கங்கையில் முழ்கினாலும் காக்கை அன்னப்பறவை ஆகுமா?
 • ஆயிரம் காக்கையை விரட்ட ஒரு கல் போதும்.
 •  குருவி தலைமீது பறக்கிறது என்பதற்காக தலையில் கூடுகட்ட அனுமதிக்கலாமா?
 • எச்சி கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா?
 •  காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தனையோ புன்னையாரே?
 •  கருங்காக்கை கரிசட்டியை பழித்ததாம்.
 •  காக்கையை கண்டு அஞ்சுனவன், கரடியை பிடித்து கட்டினானாம்.
 •  செம்போந்து வலமானால் சம்பத்து உண்டாகும்.

          பறவைகளும் பழமொழிகளும் பற்றி அறிந்துகொண்ட நீங்கள் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பழமொழிகளைப்பற்றி அறிந்துகொள்ள 👉 இங்கு கிளிக்குங்க.


கருத்துரையிடுக

0 கருத்துகள்