"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - Charlie Chaplin - Philosophy.

மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - Charlie Chaplin - Philosophy.

Charlie Chaplin Thathuvangal.

Charlie Chaplin - philosophy.

சிறந்த நடிகர். சீரிய சிந்தனையாளர். தன் உடல் அசைவின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர். பார்வையாளர்களை சிரிக்க வைத்த இவரின் வாழ்க்கையோ இவருக்கு சிறப்பாக அமையவில்லையென்பது வேதனை. ஒவ்வொரு கணமும் வேதனையில் கழிந்ததே மிச்சம். வாருங்கள் இவரின் சீரிய சிந்தனைகளை சிறிது அருந்துவோம்.

சார்லி சாப்ளின்.

வாழ்க்கை குறிப்புகள்.

பெயர் :- சார்லி சாப்ளின் - Charlie Chaplin.

இயற்பெயர் :- சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின். (Charies Spencer chaplin).

தாயகம் :- இங்கிலாந்து - லண்டன். (England - London).

பிறப்பு :- ஏப்ரல் 16 , ஆண்டு 1889.

திறமை :- நகைச்சுவை கலந்த நடிப்பு.

நடிப்பு காலம் :- 1895 முதல் 1976 வரை.

முத்திரை பதித்தது :- இசை மற்றும் சினிமா.

வாழ்க்கை துணை :- நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள்.

இறப்பு :- டிசம்பர் 25, ஆண்டு 1977.

வாழ்ந்த காலங்கள் :- 88 வருடம்.

சார்லி சாப்ளின் தத்துவங்கள்.


charles chaplin
  • உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்தக் கூடாது.

  • உன் மனம் வலிக்கும்போது சிரி. பிறர் மனம் வலி தீரும் மட்டும் அவர்களையும் சிரிக்க வை.

  • சில பெரியோர்களின் அளவு கடந்த அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடையச் செய்கின்றன.

  • வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி. அவைகளை எளிதாக எடுத்துக்கொள், அப்பொழுதுதான் உன்னால் எளிதாக வெற்றியடைய முடியும்.

  • நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம். ஆனால் மிக குறைந்த அளவே அக்கறை கொள்கிறோம்.

  • கண்ணாடிதான் என் மிகச்சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும் போது அது ஒருபோதும் என்னைப் பார்த்து சிரித்ததில்லை.

  • போலிக்குதான் பரிசும் பாராட்டும்.  உண்மைக்கு என்றும் ஆறுதல் பரிசு மட்டுமே.

  • ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.

  • உன் இதயம் வலித்தாலும் சிரி. அதே இதயம் உடைந்தாலும் சிரி.

  • உன் வாழ்க்கை என்பது வெறும் அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல. அனுபவிப்பதற்கு !!

charles chaplin

  • கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.

  • பணத்தை நோக்கி ஓடும் மனிதன் கடைசியில் தன் வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து விடுகிறான்.

  • அறிவுக் கூர்மையைவிட நம் வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படுவது இரக்கமும், கண்ணியமுமே.

  • ஒரு முறையாவது உங்கள் வாழ்க்கையைப்பற்றி முழுமையாக சிந்தித்துப் பாருங்கள். நகைச்சுவைக்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை.

  • உங்களை தனியாக விட்டாலே போதும். வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.

  • வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சிகரமானதுஆனால் அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது.

  • நாம் இருக்கும்போது யாரை சிரிக்க வைக்கிறோமோ, அவர்கள்தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள். நாம் வாழும்போது யாரை அழவைக்கிறோமோ அவர்கள்தான் நாம்  வீழும்போது சிரிக்கிறார்கள்.

  • இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. உங்கள் துயரங்களுக்கும் கூட இது பொருந்தும்.

  • நீ சந்தோசமாக இல்லாத போது வாழ்க்கை உன்னைப்பார்த்து சிரிக்கிறது. நீ சந்தோசமாக இருக்கும்போது உன்னைப்பார்த்து மகிழ்வுடன் புன்னகைக்கிறது, ஆனால்  நீ அடுத்தவரை சந்தோஷப்படுத்தும் போதுதான் உன் முன்னால் அது தலைவணங்குகிறது.

சார்லி சாப்ளினின் தத்துவங்களை அறிந்துகொண்ட நீங்கள் மேலை நாட்டு தத்துவ அறிஞரான "அரிஸ்டாட்டிலின்" தத்துவங்களை அறிந்துகொள்ள விருப்பம் கொள்கிறீர்களா. தெரிந்துகொள்ள வேண்டுமெனில் சுட்டியை தட்டுங்க >> "மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில் - Aristotle."

💖💖💖💖💖💖

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. சாப்ளினுக்கு நாலு பொண்டாட்டியா ... அட தேவுடா . .. சார்லி சாப்ளின் ஏன் வாழ்க்கையில் ௮திக ௮ளவில் வேதனை ௮னுபவித்தார் ௭ன்பது இப்போதுதான் தெரிகிறது. 😔😣😩.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.