இந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - ஓஷோ - Philosophy - Osho.

ஓஷோவின் தத்துவங்கள்.

Osho Thathuvangal.

இந்தியாவின் மிகச்சிறந்த தத்துவ ஞானிகளில் ஓஷோவும் ஒருவர். இவர் மிகச்சிறந்த படிப்பாளி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவருடைய இயற்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். ஓஷோ என்பது இவராகவே தமக்கு சூட்டிக்கொண்ட சிறப்பு பெயர்.


philosophy-osho

ஓஷோ.

இவர் தத்துவவியலில் தேர்ச்சி பெற்று சாகர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற மாணவர். அதுமட்டுமல்ல சிறிதுகாலம் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். பின் ஆன்மீகத்தில் பற்று ஏற்பட பேராசிரியர் தொழிலை விடுத்து தத்துவ ஞானியாக மாறுகிறார்.

இவருடைய ஒவ்வொரு தத்துவங்களும் நம்மை ஒருகணம் சிந்திக்க வைப்பவை. இப்பதிவில் அவரின் சிந்தனைகளை சிறிது ஆராய்வோம்.

வாழ்க்கை குறிப்பு.

பெயர் :- ஓஷோ - Osho.

இயற்பெயர் :- ரஜ்னீஷ் சந்திர மோகன் - Rajneesh chandra mohan.

தாயகம் :- இந்தியாமத்தியபிரதேசம். (Madhya Pradesh - India).

வாழ்க்கை முறை :- ஆன்மீகம்பேச்சாளர்ஆன்மீக குரு.

பிறப்பு :- 1931, டிசம்பர் 11. 

பிறப்பிடம் :- மத்திய பிரதேசம்ரெய்சன் மாவட்டத்திலுள்ள "குச்வாடா" என்னும் கிராமம். (Madhya Pradesh - Raisen District - Kuchwada).

இறப்பு :- 1990, ஜனவரி 19. தன்னுடைய 58 வது வயதில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனேவில் இயற்கை எய்தினார். (Pune - Maharashtra - India).

Philosophy - Osho.

 • கப்பலில் இருந்த கிளி ஒன்று பேச்சுத்துணை இல்லாமல் மிகவும் சலிப்புற்றிருந்த சமயத்தில்அங்கு ஒரு குரங்கு இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டது.
 • நட்சத்திரங்களின் அழகை ரசிக்க வேண்டுமென்றால் நீ இருளில் இருந்துதான் ஆக வேண்டும்.

 • அன்பு என்பது ஒரு இலக்குவாழ்க்கை என்பது அதை நோக்கி செல்லும் பயணம்.

 • உனக்கும் அடுத்தவருக்கும் இருக்கும் உறவு கண்ணாடி போன்றது.

 • எத்தனை தவறுகள் வேண்டுமானாலும் செய்யுங்கள்ஆனால் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யாதீர்கள். ஏனென்றால் அந்த தவறை மறக்கவே முடியாதபடிக்கு நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையே திசைமாறிப்போகும்.

 • உங்களிடம் கற்றுக் கொள்ளும் மனமும் அதில் ஆர்வமும் இருந்தால் உங்களால் முட்டாள்களிடம் இருந்து கூட பாடம் கற்க முடியும். அந்த மனமும் அதற்கான ஆர்வமும் இல்லாவிடடால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது.

India Arinarkalin Thatuvangal osho

 • நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதேதீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனிடம் உறவு கொள்ளாதே.

 • உன்னுடைய பிரச்சனைகளை உன்னால் மட்டுமே சரி செய்ய முடியும். ஏனென்றால் அதை உருவாக்கியவனே நீதான்.

 • விதையாக பிறவி எடுப்பது என்பது முற்றிலும் சரியேஆனால் வெறும் விதையாகவே மாண்டு போவது என்பது துரதிஷ்டமானது.

 • துன்பத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இன்பத்தையும் தவிர்க்க வேண்டும். இறப்பை தவிர்க்க வேண்டும் என்றால் பிறப்பையும் தவிர்த்தால்தான் அது சாத்தியம்.

 • யாரிடமும் பேசும்போது பயப்படாதீர்கள். அப்படியில்லை என்றால் பயப்படும்போது பேசாதிருங்கள்.

 • நீ இந்த கணத்தை முழுமையாக வாழ்ந்தால்எதிர்காலத்தைப் பற்றி நீ கவலை கொள்ள வேண்டிய அவசியமிருக்காது.

osho

 • பார்வையிழந்த உங்களுக்கு கண்களை தர விரும்புகிறேன். ஆனால், நீங்களோ என்னிடம் ஊன்றுகோலை எதிர்பார்க்கிறீர்கள்.

 • மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டா?  என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீ உயிரோடு இருக்கும் பொது  உனக்கான வாழ்க்கையை வாழ்கிறாயாஇல்லையாஎன்பதுதான் இப்போதைய கேள்வி.

 • இங்கே மனிதனைத்தவிர வேறு யாரும் ''அகங்காரம்'' நிரம்பியவர்கள் இல்லை, எனவேதான் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் அதிக அளவில் துன்பங்களை அனுபவிப்பது இல்லை.

 • தான் மிகச்சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் மிகச்சிறந்த மனிதன்.

 • உண்மை என்பது வெளியே இருக்கும் எதோ ஓன்றை கண்டுபிடிப்பது அல்ல, அது உள்ளுக்குள்ளே இருக்கும் ஒன்றை உணர்வது.

 • வாழ்க்கையை அனைத்து சாத்தியமான வழிகளிலும் அனுபவியுங்கள். அனுபவங்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனெனில் அனுபவங்கள்தான் உங்களை முதிர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

6 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.