"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஸ்வஸ்திகாசனம் - Swastikasana.

ஸ்வஸ்திகாசனம் - Swastikasana.

Swastikasana.

''ஸ்வஸ்திகா'' என்றால் வளமையான அல்லது வளம் பொருந்திய என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ''ஸ்வஸ்திகாசனம்'' எனப் பெயர் பெற்றது.


ஸ்வஸ்திகாசனம்.

ஸ்வஸ்திகாசனத்தை பார்ப்பதற்கு முன்னால் முதலில் ''யோகா ஆசனம்'' என்றால் என்னவென்று பார்ப்போம். யோகா என்பது இந்தியாவில் தோன்றிய உடல் மற்றும் மனவளக்கலை.

இன்று அதன் மேன்மை கருதி இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் வேகமாக பரவி வருகிறது. இன்று வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர்.

பொதுவாக யோகா என்றால் மக்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. யோகா பயிற்சி என்பது ஒருவிதமான உடற்பயிற்சி என்ற வரையறைக்குள்ளாகவே அதை வைத்து பலர் பார்க்கின்றனர். அது உண்மைதான் என்றாலும்கூட யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அதில் மனதிற்கான பயிற்சியும் அடங்கியுள்ளன.

யோகப் பயிற்சியானது  உடற்பயிற்சியைப்போல உடலுக்கு மட்டும் பயிற்சியளிப்பதில்லை. மனதிற்கும் சேர்த்தே பயிற்சியளிக்கின்றன. இதன்மூலம் முழுமையான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியான மன வளத்தினையும் ஒருசேர பெற முடியும்.

அவ்வாறு உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சியளிக்கக் கூடிய ஆசனங்களில் தியானம் செய்வதற்கு உகந்த மனதிற்கு அமைதிதர கூடிய அற்புத பலன் தரும் ஆசனம் ஒன்றை இப்போது பார்க்கலாம்.

நாம் இப்போது பார்க்கப்போவது "ஸ்வஸ்திகாசனம்". பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இருபாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும்.

செய்முறை.

முதலில் விரிப்பில் உட்க்கார்ந்து இரண்டுகால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள்.

Swastikasana female

வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும்.

கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும். முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும்.

5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம்.

பயன்கள்.

பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். நுரையீரல் வளம் பெறும். மனது அமைதி பெறும். தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது.

💢💢💢💢💢

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. பதினைந்து வருடங்களுக்கு முன் யோகா வகுப்புக்கு சென்றிருக்கிறேன். எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ''எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை''!...O.K...o.K ...இதிலிருந்து நீங்க ரொம்ப சுறுசுறுப்பானவர்னு சொல்ல வர்றீங்க...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.