"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
உளவியல் [சைக்காலஜி] அறிமுகம் - Psychology Introduction.

உளவியல் [சைக்காலஜி] அறிமுகம் - Psychology Introduction.

உளவியல் அறிமுகம்.

Psychology Introduction.

உளவியல் - Pychology என்பது ஒரு கிரேக்கச் சொல். இது "logia" என்ற கிரேக்க சொல்லிலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும். logia என்றால் மனதை படிப்பது என்று பொருள்.


உளவியல் அல்லது மனோவியல் (Psychology) என்பது நம் மனதில் ஏற்படும் எண்ணங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் ஆய்வுக்களம் எனலாம்.

உளவியல் என்பது ''சமூகஅறிவியல்'' என்னும் துறைக்கு உட்பட்ட ஒரு பிரிவாகும். மன எண்ணங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிய முற்படும் அறிவியலாளர்களை ''உளவியலாளர்கள் - Psychologists'' அல்லது ''மனோதத்துவ நிபுணர்கள்'' என அழைக்கப்படுகின்றனர்.

1802ம் ஆண்டு ''பியர் கேபானிஸ்'' எனும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அறிஞர் உயிரியல் தொடர்பான உளவியல் ஆய்வை மேற்கொண்டார். 1879ம் ஆண்டு ''வில்ஹெம் உண்ட்''(Wilhelm Wundt) என்ற ஜெர்மனை சேர்ந்த இயற்பியல் வல்லுனர் உளவியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டார். எனவே இவர் ''உளவியலின் தந்தை'' (Father of Psychology) என அழைக்கப்படுகிறார்.

Ulaviyal.

Factors for the problem.

ஒருவரின் மனம் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்வதற்கு கீழ் காணும் காரணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

Psychology_Introduction

  • மனதில் ஏற்படும் இயல்பான எண்ணங்கள் - Natural thoughts that occur in the mind.
  • வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியான நிகழ்வுகள் - Traumatic events in life.
  • தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை அவர் புரிந்து கொள்ளும் தன்மை - Understanding what is going on around.
  • மன சோர்வு - Mental exhaustion.
  • மன எழுச்சி - happiness.
  • சம்பந்தப்பட்டவரின் மூளை மற்றும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் - Brain and hormones of the concerned person.
  • ஆளுமை - Personality.
ஆகியவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

Categories of Psychology.

          உளவியல் பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன,
  • பொது உளவியல். [General Psychology].
  • மானிட உளவியல். [Human Psychology].
  • தொழில் ரீதியான உளவியல். [industrial and Organisational Psychology].
  • சமூக உளவியல். [social Psychology].
  • புலனுணர்வு சார்ந்த உளவியல். [Cognitive Psychology].
  • வளர்ச்சி (ஆயுட்காலம்) உளவியல். [Lifespan Psychology].
  • நெறிபிறழ் உளவியல். [Abnormal Psychology].
  • தடயவியல் உளவியல். [Forensic Psychology].
  • ஆளுமை சார்ந்த உளவியல். [Personality Psychology].
  • இராணுவ உளவியல். [Military psychology].
  • கல்வி சார்ந்த உளவியல். [Educational Psychology].
  • அறிவாற்றல் உளவியல். [Cognitive Psychology].
  • உடல்நலம் சார்ந்த உளவியல். [Health Psychology].
  • ஒப்பீட்டு உளவியல். [Comparative Psychology].
  • அரசியல் உளவியல். [Political psychology].
  • உடற்கூறு உளவியல். [Physiological Psychology].
  • பயன்பாட்டு உளவியல். [Applied Psychology].
  • மருத்துவ உளவியல். [Clinical Psychology].
  • குழந்தை உளவியல். [Child Psychology].
  • ஆலோசித்தல் தொடர்பான உளவியல். [Counselling Psychology].
  • நெருக்கடி தொடர்பான உளவியல். [Critical Psychology].
  • வளர்ச்சி சார்ந்த உளவியல். [Developmental Psychology].
  • பரிணாம உளவியல். [Evolutionary Psychology].
  • சட்டம் சார்ந்த உளவியல். [Legal Psychology].

இவை ஒவ்வொன்றையும் பற்றி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

ↂↂↂↂↂↂ

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

9 கருத்துகள்

  1. I really enjoy simply reading all of your weblogs. Simply wanted to inform you that you have people like me who appreciate your work. Definitely a great post. Hats off to you! The information that you have provided is very helpful. make him miss me

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு சகோ. எனக்கும் ஆர்வமுள்ள சப்ஜெக்ட். இது மிக மிக தேவையான ஒன்றும் கூட அதுவும் தற்போதையகாலத்திற்கு. தொடருங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி சகோதரி...

      நீக்கு
  3. இது ஒரு நல்ல பாதிப்பு, இது தவிர்ந்த மேலும் தகவல்களுக்கு
    Read More :
    https://www.psychologytamil.com/2021/09/What%20is%20psychology%20in%20tamil.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், தங்களின் கருத்து பதிவிடலுக்கும் மிக்க நன்றி நண்பரே!! தங்களின் ஆக்கபூர்வமான பதிவுகளையும் படித்தறிய ஆர்வமாக உள்ளேன்... நன்றி!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.