"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
யுரேகா ... யுரேகா - Eureka Eureka general knowledge.

யுரேகா ... யுரேகா - Eureka Eureka general knowledge.

யுரேகா! யுரேகா!!

 [Part 1]

நம்முடைய வாழ்க்கை இன்று மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்.

எனவே, நாம் இங்கு நன்றியுடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களே!.

அப்படியான சில அறிவியலாளர்களையும், அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றியும் இந்தவார பொது அறிவு துணுக்குகளாக பார்ப்போம் வாருங்கள் ...

யுரேகா - General knowledge.

 • எலெக்ட்ரோ கார்டியோகிராம் [Electrocardiogram - ECG ] சாதனத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஐந்தோவன் [Willem Einthoven].

 • மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - மேக்மிலன். [macmillan].

 • நியூட்ரான் குண்டைக் கண்டுபிடித்தவர் - சாம்வேல்கோஹன். [Samuel T. cohen].
 • காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கியவர் - அடால்ப் இ பிக்.

 • எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் கண்டறிந்தவர்  - மைக்கேல் பாரடே.

 • எஸ்கலேட்டர்  (நகரும் படிக்கட்டு ) கண்டறிந்தவர் - ஜெஸி டபிள்யு ரெனோ.

 • மின்சாரவிளக்கு கண்டுபிடித்தவர்  - தாமஸ் ஆல்வா எடிசன்.

 • நைலான் என்னும் செயற்கை இழையை கண்டுபிடித்தவர் - காரோகதர்ஸ்.

 • பால் பாயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் - ஜான் டி லொடு.

 • ஹைட்ரஜன் குண்டு உருவாக்கியவர் - ''எட்வர்ட் டெல்லர்'. [Edward teller].
 • டெலிவிஷனை கண்டுபிடித்தவர் - ஜே.எல்.பெயர்டு. [John Logie Baird].

 • கடிகாரத்தை கண்டறிந்தவர் - ஹிஸிங் , லியாங் ட்சன்.

 • அணு கடிகாரத்தை கண்டுபிடித்தவர் - வில்லார்டு எப் .லிபி.

 • மின்கல அடுக்கை (Battery) கண்டுபிடித்தவர் - அலெசான்ட்ரோ வோல்டா.

 • நிக்கல் உலோகத்தை கண்டறிந்தவர் - கிரான்ஸ்டட்.

 • ஸ்கேனர் எனப்படும் கருவியை உருவாக்கியவர் - காட்ஃப்ரே ஹஷன்ஸ்பிலிப்.

 • டிரான்ஸ்பார்மரை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஸ்டால்னி.

 • செல் அமைப்பை முதன்முதலில் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்.

 • செல்லின் உட்கருவைக் கண்டு பிடித்தவர் - ராபர்ட்பிரவுன். [Robert Brown].

 • மின்சாரமணி (Electric Bell ) கண்டறிந்தவர் - ஜோசப் ஹென்றி.

 • டேவி விளக்கை உருவாக்கியவர் - ஹம்ப்ரி டேவி.

 • ஏ .கே. 47 ரக துப்பாக்கியை கண்டுபிடித்தவர் - மைக்கேல் கலாஷ்னி கோவ். [Mikhail kalashnikov].

 • அம்மை தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்ட் ஜென்னர். [Edward Jenner ].

General knowledge Edward Jenner

 • இரட்டைக் குவி ஆடி கண்டறிந்தவர் - பெஞ்சமின் பிராங்ளின். [Benjamin Frankiln].

 • திசைகளை அறிய உதவும் "கைரோஸ்கோப்" கருவியை கண்டுபிடித்தவர் - ஷான்பெர்னோர் லெயான்ப்யூப்கோ.

 • குளிர்சாதன வசதியை கண்டுபிடித்தவர் - வில்லிஸ்கேரியர்.

 • சினிமோட்டோ கிராபி கண்டறிந்தவர் - லீயூமியர் சகோதரர்கள்.
 • கம்ப்யூட்டரில் உள்ள  மவுஸ் சாதனத்தை உருவாக்கியவர் - டக்ளஸ் ஏஞ்சல்பர்ட்.
 • என்டோஸ் கோப் கண்டறிந்தவர் - பியர்ரே செகாலஸ்.

 • ராக்கெட் என்ஜினைக் கண்டுபிடித்தவர் - கோடார்ட்.
 • மைக்ராஸ்கோப்பை கண்டுபிடித்தவர் - ஏ . ஈ . லீவன்ஹாக்.
 • பாராசூட்டைக் கண்டுபிடித்தவர் - லூயிலெனார்மாண்ட்.

 • பெரிலியம் கண்டறிந்தவர் - N . வாக்குலின் . (1782)

 • டெல்லூரியம் கண்டறிந்தவர் - M . வாண்ரீஷென்ஸ்டீன். (1782)

 • டைப்ரைட்டரை கண்டுபிடித்தவர் - ஹென்றிமில்.

 • ஜெர்மேனியம் கண்டறிந்தவர் - சி . விங்களர். (1886).

 • ஆக்சிஜன் கண்டறிந்தவர் - J . ப்ரீஸ்ட்லி.

 • மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர் - ரொனால்டு ரோஸ். [Ronald Ross].

 • இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி.

 • தோரியம் கண்டறிந்தவர் - பெர்சிலியம் (1828).

 • சிர்க்கோனியம் கண்டறிந்தவர் - கிளாப்ரோத் (1789).

 • நியான் விளக்கை உருவாக்கியவர் - ஜார்ஜ் கிளாட்.

 • மோட்டார் காரை கண்டுபிடித்தவர் - ஹென்றி போர்டு. [Henry Ford].

 • நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் புஷ்னல்.

 • மின்சார லிப்ட்டை கண்டுபிடித்தவர் - ஒட்டிஸ். [Elisha Graves Otis]

 • இடிதாங்கியை கண்டுபிடித்த விஞ்ஞானி - பெஞ்சமின் பிராங்ளின். [Benjamin Frankiln].

General knowledge Benjamin Frankiln

 • ட்ரில்லிங் மிஷினை கண்டறிந்தவர் - வில்ஹம் ஃபெயின்.

 • ஒளிச்சிதறலை கண்டுபிடித்த விஞ்ஞானி - சர்.சி.வி.  ராமன்.

 • டைனமைட் கண்டறிந்தவர் - ஆல்பிரட் நோபல்.

 • பவுண்டன் பேனாவை கண்டுபிடித்தவர் - லூயிஸ் வாட்டர் மேன். [Lewis Waterman].

 • சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் பிட்மேன்.

 • டைனமோ கண்டறிந்தவர் - ஹிப்போலைட் பிக்ஸி.

 • ரேடியோவை கண்டுபிடித்தவர் - மார்க்கோனி. [Guglielmo Marconi].

 • எலக்ட்ரான் துகள்களை கண்டுபிடித்தவர் - ஜே.ஜே. தாம்சன். [Joseph John Thomson].

 • செயற்கை இதயத்தை உருவாக்கியவர் - வில் ஹெல்ம் கோல்ட்.

 • வண்ண புகைப்படம் பதிவு செய்தலை கண்டுபிடித்தவர் - ஜார்ஜ் ஈஸ்ட்மென். [George Eastman].

General knowledge George Eastman

 • ஃபேக்ஸ் (Fax ) மிஷினை கண்டறிந்தவர் - ஆர்தர் கார்ன்.

 • குளோரோபார்மை கண்டுபிடித்தவர் - சிம்சன். [James Simpson].

 • பலூனை ( Balloon ) கண்டுபிடித்தவர்கள் - மோன்டகோல்பியர் சகோதரர்கள்.

 • தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - லேண்ட்ஸ் டார்ம்.

 • ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர்கள் - ரைட் சகோதரர்கள்.

 • மின் விசிறியை கண்டுபிடித்தவர் - ஆய்லர் எஸ் . வீலர்.

 • மின்னல்களால் பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைக்கிறது என்னும் உண்மையை கண்டறிந்து கூறியவர் - ஹென்றி காவெண்டிஷ்.

"யுரேகா யுரேகா - Eureka Eureka" என்னும் இப்பதிவின் இரண்டாவது பகுதியை படிக்க அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க.

>>"யுரேகா யுரேகா - Eureka Eureka General knowledge - part 2."<<

💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.