"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் - Ardha Matsyendrasana.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் - Ardha Matsyendrasana.

Ardha Matsyendrasana.

உடலுக்கும் மனதிற்கும் ஒருசேர சக்தியூட்டுவது யோகாசனப் பயிற்சி எனலாம். பிற உடற்பயிற்சிகள் உடலுக்கு மட்டுமே பயிற்சியளிப்பன. ஆனால் யோகாசனப் பயிற்சியோ உடல், மனம் இரண்டையும் ஒருசேர இயக்குவதால் இப்பயிற்சியின் மூலம் மன வலிமையையும் பெற முடியும் என்பது திண்ணம்.


அர்த்த மத்ஸ்யேந்திராசனம்.

யோகாசனப் பயிற்சியானது வெளி உறுப்புகளைவிட உள் உறுப்புகளிலேயே தன் ஆளுமையை அதிகம் செலுத்துவதால் குன்றாத இளமையையும் மங்காத ஆரோக்கியத்தையும் தருகிறது.

யோகாசனப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து பயின்றுவர நீடித்த ஆயுளையும், ஆரோகியத்தையும் ஒருசேர பெறுவர் என்பது திண்ணம். அவ்வாறான அற்புத பலனை தரக்கூடிய ஒரு ஆசனத்தை பற்றி இப்போது காண்போம்.

''மத்ஸ்யேந்திரர்'' என்பவர் ஒரு தலைசிறந்த யோகி. அவர் இந்த யோகாசனத்தின் சிறப்புக்கருதி தன் மாணவர்களுக்கு இதனை போதித்தார். எனவே அவருடைய பெயரிலேயே இது வழங்கப்படுகிறது.

இவ்வாசனமானது இடுப்புவலி, முதுகுவலி மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் சிறப்பு பெற்றது. இந்த ஆசனத்தை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

செய்முறை.

முதலில் விரிப்பில் நேராக உட்கார்ந்து இரு கால்களையும் முன்னோக்கி நேராக நீட்டிக்கொள்ளவும். பின் இடதுகாலை வலது காலின் தொடைப்பகுதிக்கு கீழ்வரும்படி மடக்கிக்கொள்ளவும். அதன் பின் வலது காலை இடதுகாலின் வெளிப்புறத்தில் கொண்டுவந்து முழங்கால் நேராக மேல் நோக்கி இருக்கும்படி மடக்கி ஊன்றவும்.

 Ardha Matsyendrasana female

வலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறமாக ஊன்றிக் கொள்ளவும். பின் இடுப்பின் மேல் பாகத்தை வலது பக்கமாய் மெதுவாக திருக்கவும். முதுகு நேராக இருக்கவேண்டியது முக்கியம். மூச்சை இயல்பாக விடவும்.

10 முதல் 30 வினாடிகள் இதே நிலையில் அமர்ந்து இருக்கவும். பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும். பின் சில வினாடி ஓய்வுக்குப்பின் கால்களை மாற்றி மறுபக்கம் இதுபோல் பயிற்சி செய்யவும்.

Ardha Matsyendrasana

இதேபோல் கால்களை மாற்றி மாற்றி திரும்ப திரும்ப இப்பயிற்சியை இரண்டு மூன்று தடவை செய்யவும்.

மூலநோய், குடலிறக்கம், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இப்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

பலன்.

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும், அஜீரணம் நீங்கும். இடுப்பு மற்றும் முதுகெலும்புகள் நன்கு நெகிழ்வு தன்மை பெறுவதோடு நன்கு பலம் பெறும். 

நரம்பு தளர்ச்சி குணமாகும். நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் முதலியன நன்கு பலம் பெறும்.

தொந்தி குறையும். குடல்கள் நன்கு இரத்த ஓட்டம் பெறுவதோடு ஜீரண மண்டலமும் நன்கு வலிமை பெறும். மலச்சிக்கல் நீங்கும். நீரழிவு குணமாகும்!

💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்