Sunday, June 09, 2019

இதையும் தெரிந்து கொள்வோம். - General Knowledge - Tamil.

வௌவால்கள் உருவாக்கும் மீயொலி அலைகளின் அதிர்வெண் - 70,000 Hz.

கடலில் உள்ள மீன்களுக்கு பெருமளவில் உணவாக பயன்படும் உயிரி - பிளாங்டன்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா - லாக்டோ பாசில்லஸ்.

 பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் - ஏ எச் 1 என் 1 வைரஸ்.

பட்டுப்பூச்சியை தாக்கும் வைரஸ் நோய் - கிராஸ்செரி.

பட்டுப்புழுவிற்கு உணவாக அளிக்கப்படும் தாவரம் - மல்பெரி இலைகள்.


இரு கண்களிலும் நான்கு விழித்திரை கொண்ட மீன் இனம் - அனப்லெப்ஸ். ( Anableps ).


உலகிலேயே அதிக அளவில் முட்டையிடும் உயிரினம் - கரையான்.


காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது - உரோமக் கற்றைகளால் ஆனது.


மாமிசம் தின்னும் ஆஸ்திரேலிய கிளி - கியா. ( Kea ).



கழுகுகள் இறக்கைகளை அசைக்காமல் தொடர்ந்து பறக்கும் தூரம் - 6 கி . மீ.


அதிக சத்தம் எழுப்பும் பூச்சியினம் - சிகாடா. (Cicada ).


பூனையின் கண்கள் இரவில் மின்னுவதற்கு காரணம் - டபீட்டம் லூசிடம். (Tapetum lucidum ).


மிக வேகமாக ஓடும் பூச்சி - கரப்பான் பூச்சி.



நீண்ட தூரம் தொடர்ந்து கூட்டமாக பறக்கக் கூடிய பறவை - ஆர்டிக் டெர்ன். (Arctic tern ).


விலங்குகளில் அதிக அறிவு படைத்தது - டால்பின். ( Dolphin ).



உலகின் மிகச் சிறிய பறவை - ஹம்மிங். ( Hummingbird ). இதன் எடை 16 கிராம்.



தற்போது உலகில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது - ப்ளூவேல் என்னும்  நீலத்திமிங்கலம். ( blue whale ).


நீண்டகாலம் உயிர்வாழும் பறவை - நெருப்புக்கோழி.


முட்டையிடும் பாலூட்டிகள் - எறும்புத்தின்னி மற்றும் பிளாடிபஸ்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


2 comments:

  1. தகவல்கள் அருமை.
    நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. KILLERGEE Devakottai... தங்களின் தொடர் பாராட்டுதல்களுக்கு நன்றி!

      Delete

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...